டாணாக்காரன்
டாணாக்காரன் ( பொருள். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் எழுதி இயக்கியுள்ளார். படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்தது. இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய வேடத்திலும், அஞ்சலி நாயர், மதுசூதன் ராவ், லால், லிவிங்ஸ்டன், எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 1997-ஆம் ஆண்டு காவலர் பயிற்சி நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக்க் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. 2022 ஏப்பரல் 8 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது. படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
டாணாக்காரன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | தமிழ் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரகாஷ் பாபு எஸ். ஆர். பிரபு பி. கோபிநாத் தங்க பிரபாகரன் ஆர். |
கதை | தமிழ் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மாதேஷ் மாணிக்கம் |
படத்தொகுப்பு | பிலோமின் ராஜ் |
கலையகம் | பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ஹாட் ஸ்டார் |
வெளியீடு | 8 ஏப்ரல் 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுகால் பயிற்சிக் கல்லூரிக்கு தேர்வாகிவரும் அறிவு என்னும் அறிவழகன் (விக்ரம் பிரபு), அங்கு மலிந்துள்ள அடக்குமுறைகளையும், அதிகார அத்துமீறளையும் எதிர்த்து கேள்வி கேட்கிறான். அதனால் அவன் பயிற்சிக் கல்லூரியில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவற்றை அவன் எப்படி எதிர் கொள்கிறான். என்பதே கதை
நடிகர்கள்
தொகு
- அறிவு என்கிற அறிவழகனாக விக்ரம் பிரபு
- ஈஸ்வரியாக அஞ்சலி நாயர்
- முத்துப்பாண்டியாக மதுசூதன் ராவ்
- ஈசுவரமூர்த்தியாக லால்
- அறிவின் தந்தை இராசேந்திரனாக லிவிங்ஸ்டன்
- செல்லக்கண்ணுவாக எம். எசு. பாசுகர்
- ஆய்வாளர் மதியாக போஸ் வெங்கட்
- காதர் பாசாவாக பாவெல் நவகீதன்
- ஆலோசகர் சாகுல் பாயாக நிதிஷ் வீரா
- நந்தகுமாராக உதய மகேஷ்
- முருகனாக கார்த்திக் கண்ணன்
- அறிவின் நண்பனாக லிங்கேஷ்
செயற்கைக்கோள் உரிமைகள்
தொகுபடத்தின் செயற்கைக்கோள் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றது.
இசை
தொகுஇப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசையை ஜிப்ரான் அமைத்தார்.
Track listing | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கட்டிக்கோடா" | சுவேதா மோகன் | 3:21 | |||||||
2. | "துடித்தெழு தோழா" | செண்பகராஜ், அரவிந்த் சீனிவாசு, நாராயணன், சரத் சந்தோஸ் | 3:51 |
வரவேற்பு
தொகுதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த விமர்சகர் எம். சுகந்த், 5-க்கு 3.0 நட்சத்திரங்களை இப்படதிற்கு அளித்து எழுதினார் "விக்ரம் பிரபு அறிவு பாத்திரத்தின் உடல்மொழியை நன்கு வெளிபடுத்தி நடித்துள்ளார். எம். எசு. பாசுகர் பல ஆண்டுகளுக்கு முன்பு துறையில் கீழ்ப்படியாமை செயலுக்கான விலையைக் கொடுக்கும் ஒரு மூத்த காவலராக ஜொலிக்கிறார். மேலும் லால் அவரது கதாபாத்திரத்தை வெறுக்க வைக்கிறார். போஸ் வெங்கட், மதி என்ற நேர்மையான காவலராக, அமைப்பில் உள்ள குறைபாடுகளை அறிந்திருந்தும், பணியமர்த்தப்பட்டவர்களை நல்ல காவலர்களாக மாற்ற விரும்பும், ஒரு உணர்ச்சிகரமான நடிப்புடன் களமிறங்குகிறார். இவர்களின் நடிப்புகள் படத்தை ஒருங்கிணைத்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கின்றன." [1]