ஹாட் ஸ்டார்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இது ஸ்டார் இந்தியாவின் துணை நிறுவனமான நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஓர் இந்திய மேலதிக ஊடக சேவை ஆகும். இது 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, மார்ச் 2020 நிலவரப்படி, ஹாட்ஸ்டாரில் குறைந்தது 300 மில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்த சேவை தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளில் கிடைக்கும்.

ஹாட் ஸ்டார்
சேவை பகுதி
தொழில்ஊடக ஓடை
சேவைகள்தேவைக்கேற்ப ஊடக ஓடை
உரிமையாளர்ஸ்டார் இந்தியா
(வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா)
மேல்நிலை நிறுவனம்நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்
வலைத்தளம்hotstar.com
அலெக்சா தரவரிசை எண் 218[1]
வலைத்தள வகைகோரிய நேரத்து ஒளிதம்
மொழிகள்
துவக்கம்மாசி 2015
தற்போதைய நிலைசெயலில்

டிஸ்னி+ஹாட் ஸ்டாரும் ஜியோ சினமாவும் இணைப்பு (2024–தற்பொழுதுவரை)

தொகு
 
ஜியோ ஹாட்ஸ்டார் இலச்சினை

நவம்பர் 2024இல் டிஸ்னி+ஹாட் ஸ்டாரும் ஜியோ சினமாவும் இணைய ஒப்பந்தம் செய்யப்பட்டது. திசம்பர் 2024இல் ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் jiohotstar.com என்னும் ஆள்களப் பெயரை பதிவு செய்தனர்.[3] 14 பிப்ரவரி 2025இல் இருந்து ஹாட் ஸ்டார் செயலிகள் ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் மாற்றம் பெற்று, ஜியோசினிமா வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு மாற்றப்பட்டனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Hotstar.com Site Overview". Alexa Internet. Archived from the original on 15 February 2020. Retrieved 14 January 2020.
  2. "Disney+ goes live for 'small number' of Hotstar users in India". Digital TV Europe (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-03-12. Archived from the original on 2020-03-26. Retrieved 2020-03-14.
  3. Mukherjee, Vasudha (December 4, 2024). "Reliance-owned Viacom18 acquires Jiohotstar.com domain name after long wait". Business Standard.
  4. "Meet JioHotstar, the new streaming platform that combines content from Jio Cinema and Disney+ Hotstar". The Indian Express (in ஆங்கிலம்). 2025-02-14. Retrieved 2025-02-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாட்_ஸ்டார்&oldid=4288935" இலிருந்து மீள்விக்கப்பட்டது