சேவைகள் (பொருளியல்)

[Sun tv tamil,1990 years near;serial.Assitant producer&contryputers. Azhidhbika-TrTaTjTaTnT searching.&-Director-G.n.Dhinesh Kumar.[File:Portier mit linder.JPG|thumb|மன மகிழ் மன்றங்களில் தங்குவோரின் உடைமைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பிற ஏவல்களைச் செய்யும் பணியாளின் சேவை, சேவைகள் தொடர்பான வேலைகளுக்கு ஓரு எடுத்துக்காட்டாகும்]]

பொருளாதாரத்தில் சேவை என்பது புலனாகா பயன்படு பொருள் ஆகின்றது. சேவை வழங்குதல் பெரும்பாலும் ஒரு பொருளாதார செயல்பாடாக உள்ளது. சேவைகள் புலனாகா பொருளாதார பொருட்களின் ஒரு உதாரணம் ஆகும். பொதுச் சேவைகள் என்பது ஒரு முழுச் சமூகத்தின் (தேசிய அரசு, நிதி தொழிற்சங்க, பிராந்திய) வரிகள் மற்றும் வேறு வழிகளில், செலுத்திப் பெறுவதாகும்.

தேவையான வளங்கள், திறன், அறிவாற்றல் மேலும் அனுபவம் மூலம் சேவைகளை நுகர்வோருக்கு பயன்தரும் வகையில் அளிக்க எந்தவொரு சரக்கு கையிருப்பு இல்லாமல் பொருளாதாரத்தில் சேவைகள் வழங்குபவர்கள் பெரும் பங்கு கொண்டுள்ளனர். ஆனால் அனுபவத்தை அதிகரிக்கவும் போட்டியினை சமாளிக்கவும் முதலீடு தேவைப்படுகிறது.

சேவைகளின் பண்புகள்

தொகு

சேவைகள் ஐந்து முக்கிய பண்புகளை அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது

  1. சேவைப் புலப்படாமை
  2. சேவையை சேமித்து வைக்க முடியாது
  3. பிரிக்க முடியாத தன்மை உடையது
  4. முரண்பாடுகளை கொண்டது
  5. ஈடுபாடு

சேவை

தொகு
  • சேவை என்பது ஒரு முறை நுகரக்கூடிய மற்றும் அழிந்துபடக்கூடிய நலன்களின் தொகுப்பாகும் பெரும்பாலும் அவரது அக மற்றும் புற சேவை வழங்குநர்களின் நெருக்கமான செயல்பாடுகளின் மூலம் சேவை வழங்கப்படும்.
  • சேவை முறையே தொழில்நுட்ப அமைப்புகளின் தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் தனிநபர்களின் தனித்துவமான நடவடிக்கைகள் மூலம் விளைவிக்கப்பட்டதாக இருக்கும்.
  • நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப பணிக்கப்பட்ட சேவையை பொறுப்பான சேவை வழங்குநர் வழங்க வேண்டும்.
  • நுகர்வோரின் எதிர்வரும் வர்த்தக நடவடிக்கைகளும் அல்லது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் சேவைகள் நுகரப்படுகின்றன

சேவை வழங்குதல்

தொகு

ஒரு சேவையை வழங்குவதில் பொதுவாக ஆறு காரணிகள் தொடர்புடையதாக இருக்கின்றன, அவை:

  1. பொறுப்புமிக்க சேவை வழங்குநர் மற்றும் அவரது சேவை வழங்குநர்கள் (எ.கா. மக்கள்)
  2. சேவை வழங்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் (எ.கா. வாகனங்கள், பணப்பதிவேடுகள், தொழில்நுட்ப அமைப்புகள், கணினி அமைப்புகள்)
  3. பருநிலை வசதிகள் (எ.கா. கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், காத்திருக்கும் அறைகள்)
  4. கோருகின்ற நூகர்வோர்.
  5. சேவை வழங்கும் இடத்தில் மற்ற வாடிக்கையாளர்கள்
  6. வாடிக்கையாளர்களின் தொடர்பு

பொருளாதார சேவைகளின் பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவைகள்_(பொருளியல்)&oldid=4032813" இலிருந்து மீள்விக்கப்பட்டது