சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும்

கணணித்துறையில் சர்வதேசமயப்படுத்தலும் உள்ளூர்மயப்படுத்தலும் (Internationalization and localization) என்பது கணணி மென்பொருளை வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான முறையில் மாற்றி அமைப்பதை குறிக்கும்.

இத்தாலிய மொழிக்கு உள்ளூர்மயப்படுத்தப்பட்ட பென்பொருள் ஒன்று

சர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை வடிவமைக்கும் செயற்பாடாகும்.இது எவ்வித பொறியியல் மாற்றமும் இன்றி வெவ்வேறு மொழிகளுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் மாற்றி அமைக்க உதவுகின்றது.

உள்ளூர்மயப்படுத்தல் என்பது ஒரு ஒழுங்கு முறையாக மென்பொருளை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட மொழிகளுக்கோ குறிப்பிட்ட பாவனையாளர்களின் தேவைக்குரிய மொழியின் பாகங்களை சேர்ப்பதும் சொற்களை மொழி பெயர்ப்பதுமாகும்.

இவற்றின் சொற்களின் நீளம் பெரிது என்பதால் இவற்றை சுருக்கி எழுத்து கலந்த எண் வடிவத்தில் குறிப்பிடப்படும். ஆங்கிலத்தில் internationalization என்பது i18n என்று குறிப்பிடப்படும். அதாவது i க்கும் n க்கும் இடையில் பதினெட்டு எழுத்துக்கள் உள்ளன. இதேபோல் localization என்பது L10n என்று குறிப்பிடப்படும். இங்கு L என்பது உயர் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. i என்பதை தாழ் மட்ட எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சர்வதேச மயப்படுத்தலில் உள்ள ஆங்கில எழுத்து i என்பதை உள்ளுர்மயப்படுத்தலில் L உள்ள ஆங்கில எழுத்து என்ற எழுத்துடன் வித்தியாசப்படுத்துவதற்கு.

சில நிறுவனங்கள்,அதாவது மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்றவை சர்வதேச்சமயப்படுத்தலையும் உள்ளுர்மயப்படுத்தலையும் ஒன்றாக இணைத்து உலகமயப்படுத்தல் என்று பயன்படுத்துகின்றன. உலகமயப்படுத்தல் என்பது ஆங்கிலத்தில் Globalization. இதை g11n என்று குறிப்பிடலாம்.

நோக்கம் தொகு

சர்வதேசமயப்படுத்தல்,உள்ளூர்மயப்படுத்தல் என்னும் முயற்சி பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

மொழி தொகு

  • கணணி மொழிக்கு மாற்றியமைத்தல்: உயிர் எழுத்துக்கள்/அச்சுக்கள்; அநேகமாக தற்பொழுது பயன்படுத்தப்படும் கணணிகளில் என்னும் தரத்தை பயன்படுத்தி சொற்கள் சம்பந்தமான கணணி மொழி பிரச்சனை தீர்த்துக்கொள்ளப்படுகின்றது.
  • வெவ்வேறு திசையில் பயன்படுத்த்ப்படும் எழுதும் முறைகள்: (இடம் இருந்து வலம்-ஜேர்மனி,வலம் இருந்து இடம்-அரேபியா)
  • வெவ்வேறு நாடுகளில் பாவிக்கப்படும் எழுத்து வித்தியாசங்கள்,ஆனால் ஒரே மொழியை பயன்படுத்துகின்றனர். உதாரணம் (localization-(en-US,en-CA,GB),localaisation-(en-GB,en-AU)
  • சொற்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வித்தியாசங்கள் உள்ளன.சிலர் உயர் மட்ட எழுத்துகளை பயன்படுத்துகின்றனர்.சில அச்சுகள் அப்படி அல்ல.அதேபோல் வித்தியாசமான சொற்களை தரப்படுத்தும் விதிகள்.
  • சொற்களை வரைபடம் மூலம் பிரதிநிதிப்படுத்தல்(அச்சிடல்,சொற்கள் இருக்கும் படங்களை அந்தநேரத்திலேயே பிரதிநிதிப்படுத்தல்.
  • வாய்மொழி மூலம் பிரதிநிதிப்படுத்தல்
  • திரைப்படங்களை அல்லது காட்சிகளை மொழி பெயர்ப்புடன் காட்டல்.

கலாச்சாரம் தொகு

  • படங்களும் நிறங்களும் :

இதில் முழுமைபடுத்தப்பட்டதும் கலாச்சாரத்திற்கு ஏற்றதுமான ஒழுங்குபடுத்தல் அவசியம். பெயர்களும் தலைப்புக்களும்.

  • அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எண்களும்(சமுக பாதுகாப்பு எண்,அமெரிக்காவில்,தேசிய காப்புறுதி எண் ஜரோப்பாவில்)ஆட்பதிவு எண்களும்.
  • தொலைபேசி எங்கள்,முகவரி,சர்வதேச தந்தி செய்தி அனுப்ப பயன்படும் எண். நாணயங்கள்(குறியீடு)
  • நிறைகளும் அளவுகளும்.
  • பக்கங்களின் அளவுகள்.

எழுத்துமுறை மரபுகள் தொகு

  • திகதி/நேர முறை,வித்தியாசமுறையிலான பஞ்சாங்கங்கள்.
  • நேர வளையங்கள்(சர்வதேச இடங்களில்)
  • எண் முறைகள்(தசம எண் ஸ்தானங்கள்,வேறுபடுத்தும் இடங்கள்)
  • இது தவிர்ந்த பொருட்கள்,சேவைகள் சம்பந்தமான முறையான ஒப்பந்தங்கள்.

சர்வதேச்சமயப்படுத்தளுக்கும் உள்ளுர்மயப்படுத்தளுக்குமான வித்த்யாசம் மிக நுட்பமானது. ஆனால் முக்கியமானது.சர்வதேசமயப்படுத்தல் என்பது ஒரு பொருளை முக்கியமாக உண்மையாக எங்கும் பயன்படுத்துவதற்காக மாற்றியமைப்பதாகும்.

உள்ளூர்மயப்படுத்தல் என்பது குறிப்பிட்ட விசேஷா அம்சங்களை குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு ஏற்றதாக மாற்றியமைத்தல்.

சர்வதேசமயப்படுத்தல் ஒரு பொருளுக்கு ஒரு முறை மாட்டும் செய்யப்படும்.உள்ளூர்மயப்படுத்தல் ஒவ்வொரு வித்தியாசமான பொருள் இணைப்புக்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பாவனையாளர்களுக்கும் செய்யப்படும். இவ் ஒழுங்கு முறையானது புர்த்தி செய்கின்றதும் கட்டாயமாக இவை இணைந்து ஒரு குறிப்பிடப்பட்ட இலக்கை உலகளாவிய ரீதியில் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.


உள்ளுர்மயப்படுத்தல்லுக்குரிய தனித்துவமான பாடங்கள் தொகு

  • மொழி பெயர்ப்பு.
  • தேசிய ரீதியில் உள்ள மொழிகள்.
  • சில மொழிகளுக்குரிய விசேஷ ஓத்துழைப்புக்கள்.(கெழக்கு ஆசியா மொழிகள்).
  • உள்ளூர் வழக்கங்கள்
  • உள்ளூர் உள்ளடக்கங்கள்.
  • குறியீடுகள்.
  • நிரட்படுத்தும் ஒழுங்குகள்.
  • கலைகளின் ரஸிகத்தன்மை.
  • கலாச்சார பண்பாடுகளும்,சமூக ஒற்றுமையும்.


இடர்பாடுகள் தொகு

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்ப்பது என்பது சுலபம்,ஆனால் அந்த பொருளின் வாழ்க்கை வட்டம் முழுவதும் அதற்குரிய மொளிப்ர்யர்ப்பை சீராக பேணுவது என்பது கடினம்.உதாரணத்திற்கு ஒரு செய்தியை திருத்தியமைத்து பாவனையாளர்களுக்கு காட்டும் பொழுது அதே செய்தியை மொழிபெயர்த்த மொழிளையும் திருத்தியமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பொருளின் விருத்தி செய்யும் நேரம் நீளமாகும்.

உள்ளுர்மயப்படுதத்தும் போது சில குறைகள் எழ வாய்ப்புண்டு.அதாவது எழுதும் திசைகள்,எழுத்துக்களை நிரற்படுத்தல் போன்றன. இதனால் மென்பொருளை மாற்றுவதற்கு பரந்த அறிவு தேவை மொழி பெயர்ப்பை விட.இவற்றை opensource.org கையாண்டுள்ளது ஆளிகளை பயன்படுத்தி.

சில சமயங்களில் (தரத்தை நிர்ணயித்தல் )மென்பொருளை விருத்தி செய்யும் குழுக்களுக்கும் ,சர்வதேச மொழிகளை தெரிந்தவர்களும்,அவ்வவ் நாடுகளின் கலாச்சரத்தை தெரிந்தவர்களும்,அத்துடன் தொழிநுட்ப அறிவு உடையவர்களும் அவசியம் தேவை. இப்படியான நபரை தெரிவு செய்வது என்பது கடினமான விடயமாகும்.


செலவுகளும்,நன்மைகளும் தொகு

வியாபார ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது உள்ளுர்மயபடுத்தலில் வரும் நன்மைகள் பரந்த சந்தைகளில் பயன்படுகின்றன. வியாபார ஸ்தானத்திலிருந்து உள்ளுமயமாக்கப்பட்ட பொருட்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாவிக்கலாம் என்பது வெளிப்படை.இதனால் இப் பொருட்களை தயாரிப்பவர்கள் அவர்களின் வரவு செலவுகளை திட்டம் செய்தல் வேண்டும்.சர்வதேச சந்தைக்கு தயாரிப்பதற்கு கூடிய செலவாகும்.ஆனால் அது உலக பொருளாதரத்தை உயர்த்தும்.மென்பொருளுக்குரிய பணத்தை கொடுக்காமல் கருப்பு சந்தையில் விற்கப்படும் உள்ளுமயமக்கப்பட்டமென்பொருள் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் இறுதி பாவனையாளர்களுக்கு தாங்களே உள்ளுர்மயமக்கப்பட மென்பொருளை மாற்றியமைக்ககூடிய வாய்ப்பு இல்லாமல் போகும்.இது போன்றே எல்லாவாற்றிற்கும் அடிப்படை சூழல் (open source enviornment).

திறந்த மூல மென்பொருள் (open source software) தொகு

 

இது இலவசமாக திருத்தியமைக்கலாம், அதே போன்று திரும்பவும் விநியோகிக்கலாம். இது சர்வதேசமயமாதலுக்கு முக்கியமானது. இதன் மூலம் KDE செயற்திட்டம் 100 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டது.

இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதி பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும்.

உதவும் ஆதாரங்கள் தொகு

Retrieved from "http://en.wikipedia.org/wiki/Internationalization_and_localization"