ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.

இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்பொரேஷன்
வகைபொது
நிறுவுகைஎன்டிகொட்ட், நியூ யார்க்
ஜூன் 16, 1911
நிறுவனர்(கள்)தாமஸ் ஜே. வாட்சன்
தலைமையகம்அர்மொன்க், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்சாமுவெல் ஜ. பால்மிசானொ
தொழில்துறைகணினி தொழில்நுட்பம்
வருமானம்Increase US$ 99.870 billion (2010)[1]
இயக்க வருமானம்Increase US$ 19.273 billion (2010)[1]
நிகர வருமானம்Increase US$ 14.833 billion (2010)[1]
மொத்தச் சொத்துகள்Increase US$ 113.452 billion (2010)[1]
மொத்த பங்குத்தொகைIncrease US$ 23.172 billion (2010)[1]
பணியாளர்426,751 (2010)[1]
இணையத்தளம்IBM.com

இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது.அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது.

  1. 1வது தலைவர்களுக்கான நிறுவனம் (பார்ச்சூன் இதழ்)
  2. 1வது உலக அளவில் பசுமை(சுற்றுசூழல் மாசுபாடுகளை குறைந்த அளவில் வெளியிடுதல்)நிறுவனம் (நியூஸ் வீக்)
  3. 2வது உலக அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் (இன்டர்பிராண்ட்)
  4. 2வது மிகப்பெரிய மதிப்பு மிக்க நிறுவனம் (போரோன்)
  5. 5வது ரசிக்கப்பட்ட நிறுவனம்(பார்ச்சூன் இதழ்)
  6. 18வது புதுமையான நிறுவனம் (பாஸ்ட் கம்பெனி)

ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள் பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை.

வரலாறு

தொகு

ஐ பி எம் நிறுவனத்தின் வரலாறு 1885 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. 1885 ஆம் ஆண்டு ஜூலியஸ் இ.பிட்ராப் என்பவர் கணினி அளவி என்னும் சாதனத்திற்கு காப்புரிமையை பதிவு செய்தார். அதன் பின் அலக்ஸாண்டர் டை என்பவர் சுழல் பதிவு கருவியை காப்புரிமை பதிவு செய்தார்.(1888 ஆம் ஆண்டு).1889 ஆம் ஆண்டு ஹெர்மன் ஹோலேரித் என்பவருக்கு மின்பட்டியல் சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.வில்லியர்ட் பண்டி என்பவர் தொழிலாளர்கள் வருகைப் பதிவை பதிவு செய்யும் கருவியை கண்டுபிடித்தார்.1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினாறாம் நாள் மேற்கண்ட கண்டுபிடிப்பாளர்களை சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் என்பவர் ஒன்றிணைத்து கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்) என்ற பெயரில் நிறுவினார்.நியூயார்க் மாகாணத்தை அடிப்படையாக கொண்டிருந்த இந்நிறுவனத்திற்கு அப்போது சுமார் 1300 பணியாளர்கள் இருந்தனர்.நியூயார்க், ஓஹியோ,டேய்டன்,டெட்ராய்ட்,வாஷிங்டன் டி சி,மற்றும் கனடாவின் டொராண்டோ,ஆண்ட்ரியோ முதலிய இடங்களில் ஆலைகளும் அலுவலகங்களும் இயங்கின.வணிக ரீதியான அளவீட்டுக்கருவிகள் முதல் நேரப் பதிவுகருவிகள்,பட்டியல் தயாரிக்கும் சாதனங்கள்,மற்றும் துளையிடப்பட்ட அட்டைகள் முதலியவற்றை தயாரித்து விற்பனை செய்தது.

சார்லஸ் ரன்லெட் ஃப்ளின்ட் ,தேசிய நிதி பதிவு அலுவலகத்தில் பணியாற்றிய தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் என்பவரை தமது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்க வருமாறு பணித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் இந்த CTR நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. பணியாளர்களுக்கு உபகாரச் சம்பளம், வாடிக்கையாளர்களுக்கு குறித்த சேவை முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.கம்பெனியின் பெருமையையும்,விசுவாசத்தையும் ஒவ்வொரு பணியாளர் மனதிலும் விதைத்தார்.இவர் அறிமுகப் படுத்திய தின்க் ( THINK - யோசிப்போம் அல்லது யோசி) என்னும் ஸ்லோகன் பணியாளர்கள் மத்தியில் மந்திர வார்த்தையாக ஆனது. இவர் பொறுப்பேற்ற பதினோரே மாதங்களில் இந்நிறுவனத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார்.இவரது முதல் நான்கு வருட பணிக்காலத்தில் இந்நிறுவனம் சுமார் 9மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விற்பனை ஈட்டியது.மேலும் இந்நிறுவனம் ஐரோப்பா,ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா,ஆசியா முதலிய கண்டங்களில் தனது இயக்கத்தை நீட்டித்தது.பிப்ரவரி 14 ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது. 2011 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் என்னும் பத்திரிக்கை ஐபிஎம் நிறுவனத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 18 வது பெரிய நிறுவனமாக மதிப்பளித்துள்ளது.உலக அளவில் 31 வது பெரிய நிறுவனமாக போபர்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.டிசம்பர் 2011 ன் படி இந்நிறுவனத்தில் 4,26,751 பணியாளர்கள் உள்ளனர்.உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் அலுவலகங்களை அமைத்து உள்ளது. இந்நிறுவனப் பணியாளர்களில் ஆராய்ச்சியாளர்கள்,பொறியாளர்கள்,விற்பனை நிபுணர்கள்,முனைவர்கள்,ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகளும் அடக்கம்.

ஐபிஎமின் பல்வேறு அலுவலகங்கள்

தொகு

ஐபிஎமின் தொழில்நுட்பம்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
ஐபிஎம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


நிறுவனத் தரவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "2010 Form 10-K, International Business Machines Corporation". United States Securities and Exchange Commission.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபிஎம்&oldid=2757619" இலிருந்து மீள்விக்கப்பட்டது