தொராண்டோ

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத் தலைநகர்
(டொராண்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.

தொராண்டோ
நகரம்
தொராண்டோ நகரம்
மேலிருந்து: டவுன்-ரவுன் டொராண்டோவும் சி.என்.கோபுரமும், ஒண்டாரியோ சட்டமன்றக் கட்டடம், நகர மண்டபம், அம்பர் குடா வளைவுப் பாலம், காச லோமா, றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம், இசுக்கார்பரோ செங்குத்துச் சரிவு
Official logo of தொராண்டோ
Logo
குறிக்கோளுரை: பன்முகத்தன்மை நமது பலம்[1][2][3]
திறந்தவெளி வரைபடம்
Map
தொராண்டோ is located in ஒன்றாரியோ
தொராண்டோ
தொராண்டோ
ஒண்டாரியோவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°44′30″N 79°22′24″W / 43.74167°N 79.37333°W / 43.74167; -79.37333
நாடுகனடா
மாகாணம்ஒன்றாரியோ
குடியேற்றம்1750; 274 ஆண்டுகளுக்கு முன்னர் (1750)[4]
அமைப்புஆகத்து 27, 1793; 231 ஆண்டுகள் முன்னர் (1793-08-27) (யோர்க்)
இணைப்புமார்ச்சு 6, 1834; 190 ஆண்டுகள் முன்னர் (1834-03-06) (தொராண்டோ)
பிரிவாக இணைப்புசனவரி 20, 1953; 71 ஆண்டுகள் முன்னர் (1953-01-20) (தொராண்டோ பெருநகரம்)
ஒருங்கிணைப்புசனவரி 1, 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-01-01) (தொராண்டோ நகரம்)
மாவட்டங்கள்
அரசு
 • வகைஒற்றை அடுக்கு நகராட்சி (முதல்வர்-பேரவை அமைப்பு)
 • நகர முதல்வர்யோன் டோரி
 • ஆட்சிதொராண்டோ நகரசபை
 • நடுவண்
பிரதிநிதித்துவம்
நாடாளுமன்ற உறுப்பினர்
பரப்பளவு
 • நகரம்630.20 km2 (243.32 sq mi)
 • நகர்ப்புறம்
1,792.99 km2 (692.28 sq mi)
 • மாநகரம்
5,905.71 km2 (2,280.21 sq mi)
ஏற்றம்
76.5 m (251.0 ft)
மக்கள்தொகை
 (2021)[8]
 • நகரம்27,94,356 (1-வது)
 • அடர்த்தி4,427.8/km2 (11,468/sq mi)
 • மெட்ரோ
62,02,225 (1-வது)
 • பிராந்தியம்
97,65,188
இனம்தொராண்டோனியர்
நேர வலயம்ஒசநே−5 (கிநேவ)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (கிநேவ)
அஞ்சல் குறியீடு
M
இடக் குறியீடுகள்416, 647, 437
முக்கிய வானூர்தி நிலையங்கள்தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம், பில்லி பிசொப் தொராண்டோ நகர வானூர்தி நிலையம்
நெடுஞ்சாலைகள்2A, 27, 400, 401, 404, 409, 427, பிளாக் கிரீக் சாலை, அலென் சாலை, டொன் வெலி பார்க்வே, கார்டினர் விரைவுநெடுஞ்சாலை, இராணி எலிசபெத் சாலை
விரைவுப் போக்குவரத்துதொராண்டோ சப்வே
பயணிகள் தொடருந்துகோ திரான்சிட்
GDP (தொராண்டோ ம.க.பெ)CA$385.1 பில்லியன் (2016)[9]
தனிநபர் மொ.உ.உ (தொராண்டோ ம.க.பெ)CA$57,004 (2016)
இணையதளம்toronto.ca
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம். உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.

கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

புவியியல்

தொகு

தொராண்டோ நகரம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. வடக்குத் தெற்காக இதன் அதிகபட்சத் தூரம் 21 கிலோமீட்டர்களும் கிழக்கு மேற்காக அதிக பட்சத் தூரம் 43 கிலோமீட்டர்களுமாகும். இது ஒண்டாரியோ ஏரியின் வடமேற்குக் கரையில் 46 கிலோமீட்டர் நீர்முகத்தைக் கொண்டுள்ளது. தொராண்டோ நகரினூடாக ஹம்பர் ஆறு, டொன் ஆறு மற்றும் றோக் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் பாய்கின்றன.

அரசு

தொகு

தொராண்டோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய தொராண்டோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. தொராண்டோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.

தொராண்டோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், தொராண்டோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.

பொருளாதாரம்

தொகு

தொராண்டோ, உலக வர்த்தக மற்றும் நிதியியல் மையங்களிலொன்றாக விளங்குகின்றது. தொராண்டோ பங்குச் சந்தையானது சந்தை முதலீட்டின் அடிப்படையில் உலகின் ஏழாவது பெரிய பங்குச்சந்தையாக விளங்குகின்றது. இந்நகரம் ஊடகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத்துறைகளின் முக்கிய நிலையமாகத் திகழ்கின்றது.

கல்வி

தொகு

இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.

தொராண்டோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.

தொராண்டோவின் சிறப்பு இடங்கள்

தொகு

தொராண்டோ தமிழர்கள்

தொகு

தொராண்டோவில் 200 000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் தொராண்டோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தொராண்டோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். தொராண்டோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது.

வழிபாட்டு இடங்கள்

தொகு
  • சிரீ மீனாட்சி அம்மன் கோவில்

நகரத்தோற்றம்

தொகு
சி. என். கோபுரத்திலிருந்து தொராண்டோ நகரின் 360பாகை தோற்றம்.

சகோதர நகரங்கள்

தொகு

இரட்டை நகரங்கள்[10]

நட்பு நகரங்கள்[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "History of City Symbols". www.toronto.ca. City of Toronto. 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
  2. Harzig, Christiane; Juteau, Danielle; Schmitt, Irina (2006). The Social Construction of Diversity: Recasting the Master Narrative of Industrial Nations. Berghahn Books. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-376-3. In reflecting and capturing this sense of the city, one of the first actions of the newly amalgamated Toronto City Council in 1998 was to adopt "Diversity Our Strength" as its official motto.
  3. City of Toronto Government (August 18, 2017). "Equity, Diversity & Inclusion". பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
  4. "The real story of how Toronto got its name | Earth Sciences". Geonames.nrcan.gc.ca. September 18, 2007. Archived from the original on December 9, 2011. பார்க்கப்பட்ட நாள் February 10, 2012.
  5. "(Code 3520005) Census Profile". 2016 கணக்கெடுப்பு. Statistics Canada. 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-12.
  6. "Population and dwelling counts, for population centres, 2011 and 2006 censuses". 2011 Census of Population. Statistics Canada. January 13, 2014. Archived from the original on October 26, 2014. பார்க்கப்பட்ட நாள் December 11, 2014.
  7. "Population and dwelling counts, for census metropolitan areas, 2011 and 2006 censuses". 2011 Census of Population. Statistics Canada. January 13, 2014. Archived from the original on June 22, 2012. பார்க்கப்பட்ட நாள் December 11, 2014.
  8. "Census Profile, 2021 Census". www12.statcan.gc.ca. Statistics Canada.
  9. "Statistics Canada. Table 36-10-0468-01 Gross domestic product (GDP) at basic prices, by census metropolitan area (CMA) (x 1,000,000)". Statistics Canada. January 27, 2017.
  10. 10.0 10.1 "Toronto's International Alliance Program". Toronto.ca. October 23, 2000. பார்க்கப்பட்ட நாள் 2010-10-17.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொராண்டோ&oldid=4078949" இலிருந்து மீள்விக்கப்பட்டது