ஆஹா எத்தனை அழகு

கண்மணி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆஹா எத்தனை அழகு (Aahaa Ethanai Azhagu) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும்.[1] கண்மணி இயக்கிய இப்படத்தில் மிதுன், சார்மி, நாசர், பிரமீட் நடராஜன், ரஞ்சிதா, பாத்திமா பாபு, தேவன், தாமு, கருணாஸ், பல்லவி ஆகியோர் நடித்தனர். இவர்களுடன் பிரபலமான கன்னட நடிகை பவானாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் இப்படத்தை ஜே. எஸ். பங்கஜ் மேத்தா தயாரித்தார். படத்திற்கு ஏ. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.[2] இப்படம் நடிகை சார்மி கவுரின் தமிழில் இறுதியாக நடித்தப் படமாக இருந்தது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 10 எண்றதுக்குள்ள (2015) படத்தின் வழியாக தமிழ் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க வந்தார்.

ஆஹா எத்தனை அழகு
இயக்கம்கண்மணி
தயாரிப்புஜே. எஸ். பங்கஜ் மேத்தா
இசைவித்தியாசாகர்
நடிப்புமிதுன்
சார்மி
நாசர்
பிரமீட் நடராஜன்
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடுசூலை 18, 2003 (2003-07-18)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இப்படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.[3] அவர் இப்படத்தில் மதுஸ்ரீ என சிறப்பாக அறியப்படும் மும்பை பாடகியான சுஜாதா பட்டாச்சார்யாவை அறிமுகப்படுத்தினார்.[2]

பாடல் தலைப்பு பாடகர்கள் பாடல் வரிகள்
"ஆஹா எத்தனை அழகு" சீனிவாஸ், சுஜாதா பா. விஜய்
"நிலவிலே நிலவிலே" உதித் நாராயண், மதுஸ்ரீ யுகபாரதி
"ஆட்டுகுட்டி எல்லம்" திப்பு நா. முத்துக்குமார்
"காடு பத்திகிச்சி" கங்கை அமரன், பாப் ஷாலினி அறிவுமதி
"கண்ணு ரெண்டும் கெண்ட" அனுராதா ஸ்ரீராம், கோபால் ராவ் கபிலன்

குறிப்புகள்

தொகு
  1. "Aahaa Ethanai Azhagu, Indian Movie Directory". Archived from the original on 8 November 2006. பார்க்கப்பட்ட நாள் 5 September 2007.
  2. 2.0 2.1 "Aha Ethanai Azhagu". Sify. Archived from the original on 6 January 2005. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
  3. "Aaha Ethanai Azhagu - EP". Apple Music. பார்க்கப்பட்ட நாள் 2019-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஹா_எத்தனை_அழகு&oldid=4146558" இலிருந்து மீள்விக்கப்பட்டது