யுகபாரதி

யுகபாரதி (Yugabharathi) ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரின் இயற்பெயர் "சந்தான தேசன்" என்பதாகும். இவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களால் "சந்தானம்" என்று அழைக்கப்பட்டார். இவர் 1990 களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோது, ​​சிறந்த தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் நினைவாக "யுகபாரதி" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

யுகபாரதி
பிறப்புசந்தான தேசிகன்
தஞ்சாவூர்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்தமிழன்
குடியுரிமைஇந்தியா
பணிபாடலாசிரியர் மற்றும் கவிஞர்

ஆனந்தம்  திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை எழுதியதில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதி வெற்றிகரமான பாடலாசிரியர் ஆனார்.

கல்விதொகு

யுகபாரதி தஞ்சாவூரில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தார்.[1]

குறிப்பிடத்தக்க பாடல்கள்தொகு

ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

பாடல்கள்தொகு

2000களில்தொகு

ஆண்டு திரைப்படம் பாடல்கள்
2001 ஆனந்தம் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
2002 ரன் காதல் பிசாசே
2003 புதிய கீதை வசியக்காரி
திருடா திருடி மன்மத ராசா
2004 கில்லி கொக்கர கொக்கரக்கோ
2005 சந்திரமுகி கொஞ்ச நேரம்
சண்டக்கோழி தாவணி போட்ட
2008 பீமா ரகசிய கனவுகள் & எனதுயிரே
2009 பசங்க நான்தான் & அன்பாலே அழகாகும்
நாடோடிகள் சம்போ சிவ சம்போ

2010களில்தொகு

ஆண்டு படம் பாடல்கள்
2014 ஜில்லா பாட்டு ஒன்னு
ரம்மி அனைத்துப் பாடல்களும்
சந்திரா ராஜ ராஜன், ஓம்காரமினுமோர் & நீ அருகே இருக்கும்
இது கதிர்வேலன் காதல் சரசர சரவென & பல்லாக்கு தேவதையே
குக்கூ மனசுல சூர காத்து, பொட்ட புள்ள, ஆகாசத்த நான், கல்யாணமாம் கல்யாணம் & கோடையில,
மான் கராத்தே டார்லிங் டம்ப‌க்கு

எழுதிய நூல்கள்தொகு

கவிதைத் தொகுப்புகள்தொகு

 • மனப்பத்தாயம்
 • பஞ்சாரம்
 • தெப்பக்கட்டை
 • நொண்டிக்காவடி
 • தெருவாசகம்
 • அந்நியர்கள் உள்ளே வரலாம்

கட்டுரைத் தொகுப்புகள்தொகு

 • கண்ணாடி முன்
 • நேற்றைய காற்று
 • ஒன்று
 • நடுக்கடல் தனிக்கப்பல்
 • வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
 • அதாவது
 • நானொருவன் மட்டிலும்
 • நண்மை

மேற்கோள்கள்தொகு

 1. "யுகபாரதி நேர்காணல் கேள்வி பதில்கள்". www.keetru.com. 2022-09-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகபாரதி&oldid=3591380" இருந்து மீள்விக்கப்பட்டது