மலைக்கோட்டை (திரைப்படம்)
பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மலைக்கோட்டை 2007ல் பூபதி பாண்டியன் இயக்கியத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் திருவிளையாடல் ஆரம்பம், தேவதையைக் கண்டேன் திரைப்படத்தினை இயக்கியவர் ஆவார். இத்திரைப்படத்தில் விசால், பிரியாமணி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தார்கள்.
மலைக்கோட்டை | |
---|---|
இயக்கம் | பூபதி பாண்டியன் |
தயாரிப்பு | டி. அஜெய் குமார் |
கதை | பூபதி பாண்டியன் |
திரைக்கதை | பூபதி பாண்டியன் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | விஷால் பிரியாமணி ஆஷிஷ் வித்யார்த்தி ஊர்வசி தேவராஜ் |
வெளியீடு | September 28, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹10 கோடி (US$1.3 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹45 கோடி (US$5.6 மில்லியன்) |
இத்திரைப்படத்திற்கு மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் திருச்சி நகரத்தினைச் சுற்றி கதையமைத்திருப்பதால் மலைக்கோட்டை என்றே பெயரிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- விஷால் - அன்பு
- பிரியாமணி - மலர்
- தேவராஜ் - பழனி
- அஜெய் - குணா
- ஆஷிஷ் வித்யார்த்தி - கந்தசாமி
- ஊர்வசி - கமலா
- காதல் தண்டபாணி
- அஜெய் ரத்தினம்
- தீபா வெங்கட்