விஷால்
விஷால் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு - ஆகஸ்ட் 29, Andra Pradesh) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.[1]
விஷால் | |
---|---|
![]() | |
பிறப்பு | விஷால் கிருஷ்ணா ரெட்டி ஆகத்து 29, 1977 Andra Pradesh இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
தொழில்தொகு
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைதொகு
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது தற்போது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.[2]
அரசியல்தொகு
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.[3]
திரைப்பட வரலாறுதொகு
எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறீப்புகள் |
---|---|---|---|---|
1 | 2004 | செல்லமே | ரகுனாதன் | |
2 | 2005 | சண்டக்கோழி | பாலு | |
3 | திமிரு | கணேஷ் | ||
4 | 2006 | சிவப்பதிகாரம் | சத்திய மூர்த்தி | |
5 | 2007 | தாமிரபரணி | பரணிபுத்திரன் | |
6 | மலைக்கோட்டை | அன்பு | ||
7 | 2008 | சத்தியம் | சத்தியம் | |
8 | 2009 | தோரணை | முருகன் | |
9 | 2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை | கார்த்திக் | |
10 | 2011 | அவன் இவன் | வால்ட்டர் வணங்காமுடி | |
11 | வெடி | பிரபாகரன் | ||
12 | 2013 | பாண்டிய நாடு | ||
13 | 2014 | நான் சிகப்பு மனிதன் | ||
14 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | சிறப்புத்தோற்றம் | ||
15 | பூஜை | வாசு | தயாரிப்பும் இவரே | |
16 | 2015 | ஆம்பள | சரவணன் | தயாரிப்பும் இவரே |
17 | மதகஜ ராஜா | தாமதமாகி உள்ளது[4] | ||
18 | 2016 | மருது | மருது |
இவற்றையும் பார்க்கவும்தொகு
- தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் நடிகர்களின்
குறிப்புகள்தொகு
- ↑ "நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விஷால் சாதித்தது என்ன? – இயக்குனர் சேரன் கேள்வி".
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Chennai-should-have-a-casino-too-Vishal/articleshow/19494028.cms?
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vishal-nomination-paper-accepts-by-election1-304002.html
- ↑ "It's Aambala before Madha Gaja Raja". Behindwoods. 14 July 2014. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/vishal-is-the-aambala.html.