இரும்புத்திரை (2018 திரைப்படம்)

இரும்புத்திரை (Irumbu Thirai), என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலின் நடிப்பு, தயாரிப்பில் வெளியான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் அபிமன்யடு என் பெயரில் வெளியிடப்பட்டது.[1] இப்படமானது 2018 மே 11 அன்று வெளியானது.

இரும்புத்திரை
இயக்கம்பி. எஸ். மித்ரன்
தயாரிப்புவிஷால்
கதைபி. எஸ். மித்ரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅர்ஜுன்
விஷால்
சமந்தா
ஒளிப்பதிவுஜார்ஜ் சி. வில்லியம்சு
படத்தொகுப்புரூபன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

படப்பணிகள்தொகு

பி. எஸ். மித்ரன் அறிமுக இயக்குநராக இயக்கும் இரும்புத்திரை என்னும் இப்படத்தினை நடித்து, தயாரிப்பதாக 2016 ஆகத்தில் விஷால் முடிவு செய்தார். இப்படத்தில் சமந்தாவும் நடிக்க ஒப்பந்தமானார்.[2][3][4] திசம்பர் 12, 2017 இல், இரும்புத்திரை திரைப்படத்தின் புதிய சுவரொட்டியை விஷால் வெளியிட்டார். அச்சுவரொட்டியில் சனவரி 26-ஆம் நாளன்று இப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[5] இப்படத்தில் விசால் இராணுவ மேஜராக நடித்துள்ளார்.[6]

இசைதொகு

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா [7] இசையமைத்துள்ளார்.

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு