பேராசிரியர் டாக்டர். ச. ராஜநாயகம் (பிறப்பு: 01-நவம்பர்-1959) ஊடக ஆய்வாளர், கல்லூரி பேராசிரியர், நாவலாசிரியர், கவிஞர், இறையியல் சிந்தனையாளர், மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கத்தை முன்வைத்துத் தமிழக அளவில் விரிவான களஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்[1]. இவர் "மக்கள் ஆய்வு" அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆவர்.

ச. ராஜநாயகம்
பிறப்புநவம்பர் 01, 1959
அனுமந்தன்பட்டி,தேனி, தமிழ்நாடு,இந்தியா
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அப் - பால், பேரலை கொண்ட பிஞ்சுகள், சில முடிவுகளும் சில தொடக்கங்களும், சிலிர்ப்பு, நீரோட்டம்
இணையதளம்
www.peoplestudies.in

வாழ்க்கைக் குறிப்பு

ராஜநாயகம் 1959-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி என்ற ஊரில் சலேத்பிள்ளை,சலேத்தம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.ஆரம்பக் கல்வியை அதே ஊரில் பயின்றார். பின் தனது இளங்கலை பட்டப்படிப்பை திருச்சியிலும்,முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.[தெளிவுபடுத்துக]

கல்வி -பங்களிப்பு

ஊடகம் சார்ந்த படிப்புகளையும், பாடத்திட்டங்களையும் பல கல்லூரிகளில் தொடங்க முயற்சிப்பவர். இலயோலாக் கல்லூரி, சென்னை இணை முதல்வர் மற்றும் ஊடக ஆய்வியல் புலம் தலைவராகவும் இருந்தவர்.[2]

காட்சித் தகவலியல்

தமிழ்நாட்டில் முதல்முதலாக ஊடகம் சார்ந்த காட்சித் தகவலியல் இளங்கலைப் பட்டப்படிப்பு சென்னை இலயோலா கல்லூரியில் தொடங்கப்பட்டது.[சான்று தேவை] இந்த துறை தொடங்க வித்திட்டவர்களில் பேராசிரியர் ச. ராஜநாயகம் குறிப்பிடத்தக்கவர்.[சான்று தேவை] ஊடகம் சார்ந்த துறை தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் ஆரம்பிக்க முயற்சித்ததவர்.[3]

ஊடகக் கலைகள்

இலயோலாக் கல்லூரி, சென்னையின் அங்கமான ஊடக ஆய்வியல் புலம் (School of Media Studies) ச.ராஜநாயகத்தின் முயற்சியால், 2006-ஆம் ஆண்டில் இருந்து ஊடகக் கலைகள் துறை தொடங்கப்பட்டது[4] கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் இந்த முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.[5][நம்பகமற்றது ]

இலக்கியம் – பங்களிப்பு

பின் நவீனத்துவம்

பின்னவீனத்துவ நாவல்களான காலமற்ற காலம், சில முடிவுகளும் சில தொடக்கங்களும், கடைசிபொய் மற்றும் கவிதை தொகுப்புபான ரோஜாக்கள் காய்ப்பதில்லை போன்றவற்றை எழுதியுள்ளார். பின் நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து பல கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.[6][நம்பகமற்றது ]

சிறாரியல் - பங்களிப்பு

ச. ராஜநாயகம் சிலிர்ப்பு என்னும் சிறுகதை தொகுப்பு முழுக்க முழுக்க சிறார்களை மையமாக வைத்து எழுதியுள்ளார் சிறார் காப்பகங்கள் பற்றி தமிழ்நாடு அளவில் பல கள ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களுக்கு தரமான உணவு, கல்வி கிடைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருபவர்.[7]சுனாமி பாதிப்புகள் ஏற்பட்டிருந்த கால கட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அதில் பாதிக்கப்பட்ட சிறார்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை சேகரித்து பேரலை கொண்ட பிஞ்சுகள் என்னும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டார்.

திருநங்கைகள் – பங்களிப்பு

திருநங்கைகள் குறித்து மக்கள் மத்தியில் புரிதல் வேண்டும் என்பதற்காக பல கருத்தரங்குகள் மற்றும் ஆவணப்படங்கள் வாயிலாக வலியுறுத்தி வருபவர். இவரது படைப்பான அப் – பால், வர்ணா போன்றவை வேற்று பாலின மக்களின் நிலையை அப்பட்டமாக பிரிதிபலிகிறது. திருநங்கைகளுக்கான தனி நபர் மசோதாவின் சட்ட திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[8]

இறையியல் – பங்களிப்பு

பேரா. ச. ராஜநாயகம் இறையியல் சார்ந்து தமிழ் இறையியல் தடங்கள், தமிழ் இறையியல் களங்கள் போன்ற பல நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[9][நம்பகமற்றது ]

மக்கள் ஆய்வு

“மக்களை ஆய்வது மக்களுக்காகவே” என்ற கொள்கையுடன் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகம் - புதுவை மற்றும் தென்னிந்திய அளவில் பண்பாடு – அரசியல், ஊடகம் – விளம்பரம் நுகர்வு, தொடர்பான ஆய்வுகளை "மக்கள் ஆய்வு" நடத்தி வருகிறது. குறிப்பாக 2001 முதல் இன்று வரை நடந்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை துல்லியமாக கணித்துச் சொல்லிய பெருமை உடையது.[சான்று தேவை] இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கி.மீ க்கும் மேல் ஆய்வு பயணம் செய்த இந்த ஆய்வு குழுவினை திறம்பட வழி நடத்தி வருபவர் பேரா. ச. ராஜநாயகம். இவர் மக்கள் ஆய்வு அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆவர்.[10][11]

சமூக – உளவியல் அணுகுமுறை

ச. ராஜநாயகம் கருத்துக் கணிப்புகளில் கண்டிப்பாக சமூக – உளவியல் அணுகுமுறை வேண்டும் என்பது இவரது நோக்கம். ஆய்வுகள் பொறுத்தவரை மக்களது கருத்துகள் மட்டுமில்லாமல் அவர்களது எண்ணப் போக்குகளின் திசைகள் மற்றும் உணர்வுகள் ஆகிய அனைத்தும் கணித்தால் மட்டுமே அந்த ஆய்வு முழுமை பெரும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.[12][நம்பகமற்றது ]

ஊடக ஆய்வு - பங்களிப்பு

ச. ராஜநாயகம் ஊடகம் சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மேலும் தனது நூல்களில் ஊடகம் சார்ந்த பல புதிய வார்த்தைகளை உருவாக்கியுள்ளார்.[13][நம்பகமற்றது ] இவர் ஊடகம் சார்ந்து பல கட்டுரைகள் (Articles)கருத்தரங்கங்கள் (Conferences) நடத்தியுள்ளார்[14] சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கல்வித் திட்டக் குழுவின் தலைவராக செயல்பட்டு வருகிறார்[15]மதுரை காமராஜ் மற்றும் அன்னை தெரசா மகளிர் போன்ற பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்பார்வையாளராகவும் செயல்ப்பட்டு வருகிறார். மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதனை ஆய்வு செய்துள்ளார்.[16]

சினிமா – அரசியல்: பங்களிப்பு

சுதந்திரத்திற்கு பின் அரசியலில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பலர் கூறிவரும் வேளையில் இவர் எழுதிய ஆங்கில புத்தகமான “Popular Cinema and Politics in South India: Reimagining MGR and Rajinikanth” அந்த கோட்பாடுகளை மீள் பார்வைக்கு உட்படுத்தும் விதமாக உள்ளது.[சான்று தேவை] இதுவரை தமிழக அரசியலில் மக்கள் வாக்களித்த விதத்தை ஆய்வுக்குட்படுத்தி, மக்கள் வாக்களிக்கும் விதம் சினிமா தாக்கத்தையும் கடந்து செல்லும் என்பதையும் ஆணித்தனமாக நிரூபிக்கிறார். இந்த புத்தகம் தமிழக அரசியல் இதுவரை கடந்து வந்த பாதையை தெளிவாக உள்ளது.[17]

படைப்புகள்

வ எண் நூலின் பெயர் வகை ஆண்டு பதிப்பகம்
1.]] காலமாற்ற காலம்]] நாவல் 1998 தரசு - சென்னை
2.]] கடைசி பொய்]] சிறுகதைகள் 1999 மணிமேகலை - சென்னை
3.]] சில முடிவுகளும் சில தொடக்கங்களும்]] நாவல் 1999 காவிய- பெங்களரூ
4.]] சாமிக்கண்ணு எனச் சில மனிதர்களின் கதைகள்]] நாவல் 2000 இளையநந்தன்-திருச்சி
5.]] தமிழ் இறையியல் களங்கள் & தடங்கள்]] இறையியல் கட்டுரை 2000 இல்லிடம்
6.]] ரோஜாக்கள் காய்ப்பதில்லை]] கவிதை 2001 இல்லிடம்-சென்னை
7.]] குடும்ப உறவில் கனவுத் திரை]] கட்டுரை 2002 வைகரை – திண்டுக்கல்
8.]] சிலிர்ப்பு]] சிறுக்கதை 2005 இல்லிடம்-சென்னை
9.]] நீரோட்டம் ஆய்வு கட்டுரை 2013 மக்கள் ஆய்வு- சென்னை
10.]] Popular Cinema and Politics in South India: Reimagining MGR and Rajinikanth ஆய்வு நூல் 2015 Routledge India

குறும்படம் மற்றும் ஆவணப்படம்

வ எண் பெயர் வகை ஆண்டு பங்களிப்பு
1.]] சமுகம் & இறையியல்]] பாடல் 1989 பாடலாசிரியர்
2.]] தேர்தல் விழிப்புணர்வு]] PSA 1998 எண்ணம் & இயக்கம்
3.]] தேர்வு நேரம்]] PSA 1998 எண்ணம் & இயக்கம்
4.]] பேசாமல் பேசலாம் வாங்க]] PSA 2000 எண்ணம், திரைக்கதை, இயக்கம்
5.]] பேரலை கொண்ட பிஞ்சுகள்]] ஆவணப்படம் 2005 எண்ணம்
6.]] சுனாமி வடுக்களில் சிலுவை சுவடுகள்]] ஆவணப்படம் 2005 எண்ணம், திரைக்கதை
7.]] அப்-பால்]] ஆவணப்படம் 2008 கதை, திரைக்கதை, இயக்கம்
8.]] வர்ண (color) ஆவணப்படம் 2008 கதை, திரைக்கதை, இயக்கம்
9.]] இலங்கை தமிழர் ஆவணப்படம் 2011 எண்ணம்

மேற்கோள்கள்

 1. http://www.ibnlive.com/news/politics/students-survey-puts-aiadmk-ahead-in-tamil-nadu-364995.html
 2. http://www.loyolacollege.edu/docs/DeptofViscom.pdf
 3. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Chennai-should-have-a-casino-too-Vishal/articleshow/19494028.cms?
 4. http://www.loyolacollege.edu/mediaarts/
 5. http://www.newindianexpress.com/cities/chennai/article424771.ece
 6. ச. ராஜநாயகம்,காலமாற்ற காலம்,தரசு பதிப்பகம்-1998, பக்.02 (ஜெரி)
 7. http://timesofindia.indiatimes.com/city/chennai/80-childrens-homes-in-state-now-registered/articleshow/7101940.cms?referral=PM
 8. http://www.dinamalar.com/news_detail.asp?id=799640
 9. ச. ராஜநாயகம், தமிழ் இறையியல் களங்கள் & தடங்கள், வைகறை பதிப்பகம்-2000, பக்.எண்.01 (அ. சிரில்)
 10. http://www.newindianexpress.com/cities/chennai/Many-favour-opinion-poll-says-survey/2013/11/14/article1889072.ece
 11. http://www.dinamani.com/tamilnadu/article715679.ece
 12. 23. ச. ராஜநாயகம், நீரோட்டம், இல்லிடம் பதிப்பகம்-2013, பக்.எண்.04
 13. 24. Dr. S. Rajanayagam, POPULAR CINEMA AND POLITICS: FROM MGR TO RAJINI, illidam, Page. 45
 14. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/hone-your-acting-skills/article896836.ece
 15. http://thiruvalluvaruniversity.ac.in/academic/pdf/Board_of_Studies_for_affiliated_colleges.pdf
 16. தமிழக மக்களின் மனநிலை என்ன
 17. http://www.thehindu.com/news/cities/chennai/i-am-not-against-cinema-ramadoss/article7118161.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ராஜநாயகம்&oldid=3584155" இலிருந்து மீள்விக்கப்பட்டது