மருது (திரைப்படம்)

எம். முத்தையா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மருது 2016 ஆம் ஆண்டு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் எம். முத்தையா இயக்கத்தில் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 20 மே 2016 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம்.

மருது
இயக்கம்எம். முத்தையா
தயாரிப்புஜி. என். அன்புச்செழியன்
கதைஎம். முத்தையா
இசைடி. இமான்
நடிப்புவிஷால்
ஸ்ரீ திவ்யா
சூரி
ஒளிப்பதிவுவேல்ராஜ்
சீனிவாஸ் தேவசனம்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்கோபுரம் பிலிம்ஸ்
வெளியீடுமே 20, 2016 (2016-05-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

மருது (விஷால்) ராஜபாளையத்தில் கூலி வேலைசெய்பவன். சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்ப்பவன். தன் அப்பத்தா (கொளப்புள்ளி லீலா) மற்றும் தம்பி கொக்கரக்கோ (சூரி) உடன் மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். பாக்யம் (ஸ்ரீ திவ்யா) மருதுவை முதலில் சந்திக்கும்போது தவறாகப் புரிந்துகொள்கிறாள். தன் அப்பத்தாவின் உதவியுடன் மருது, பாக்யத்தின் இதயத்தை வெல்கிறான். ஒருநாள் பாக்யம் மற்றும் அவள் தந்தையை (ஜி. மாரிமுத்து) கடைத்தெருவில் சிலர் கொல்ல முயற்சிக்க அவர்களை மருது காப்பாற்றுகிறான். அதற்கான காரணத்தை பாக்கியதின் தந்தையிடம் வினவுகிறான்.

பாக்யத்தின் தாய் மாரியம்மா (ஆதிரா பாண்டிலட்சுமி) துணிவான பெண். கூட்டுறவு சங்கத் தலைவர் ரோலக்ஸ் பாண்டியன் (ஆர். கே. சுரேஷ்) செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கிறார். தேர்தலில் அவனை எதிர்த்துப் போட்டியிட முடிவுசெய்யும் மாரியம்மாவைக் கொடூரமாகக் கொல்கிறார்கள். போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றத்தில் அவன் விடுதலையாகிறான். தொடர்ந்து அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான் என்று மருதுவிடம் நடந்ததை விளக்குகிறார். இதை அறிந்த அப்பத்தா தான் மாரியம்மாவைக் கொன்றதைப் பார்த்ததாகக் கூறுகிறார். பாக்கியத்தைத் திருமணம் செய்யும் மருது மாரியம்மாவின் இறப்புக்குத் தான் பழிதீர்ப்பதாக உறுதியளிக்கிறான்.

மருது - பாண்டியன் இடையே சண்டை தொடங்குகிறது. பாக்கியம் மற்றும் அப்பத்தா நீதிமன்றத்திற்குச் செல்வதை பாண்டியன் தடுக்க முயல்கிறான். அதைமீறி அப்பத்தா நீதிமன்றத்தில் பாண்டியனுக்கு எதிராக சாட்சியளிக்கிறாள். அப்பத்தாவைக் கடத்தும் பாண்டியன் அவளைக் கொல்கிறான். இதை அறிந்த மருது பழிக்குப் பழியாக பாண்டியன் மற்றும் அவன் ஆட்களைக் கொல்கிறான்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

மருது படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் துவங்கியது.[1] நடிகர்சங்கத் தேர்தலால் எதிரிகளான விஷாலும் ராதாரவியும் இப்படத்தில் இணைந்து நடித்தனர்.[2] இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களைவிட விரைவாக முடிந்தது.[3] மருது’ மண் மனம் மாறாத ஒரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் ‘மருது’.[4] படத்தில் கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார். அவருக்கு இதுதான் தமிழில் முதல் படம்.[5] இந்த படம் வெளியான 3 நாட்களில் சென்னையில் 21 திரையரங்குகளில் 257 காட்சிகள் ஓடி ரூ.69,85,455 வசூல் செய்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 85% பார்வையாளர்கள் நிறைந்துள்ளனர்.[6]

விமர்சனம்

தொகு

தினமலர்: காதல், சண்டை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் நிறைந்த ஜனரஞ்சகமான திரைப்படம்.[7]

தமிழ் சினிடாக்: சண்டை காட்சிக்காக அனல் அரசுவை பாராட்டியே ஆக வேண்டும்.[8]

தி இந்து தமிழ் திசை: மலையாளப் படவுலகில் சிறந்த நகைச்சுவை நடிகையாக விளங்கும் கொளப்புள்ளி லீலா தமிழுக்கு மிகச் சிறந்த வரவு. நாடக அரங்கில் இருந்து வந்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமியும் முத்திரை பதிக்கிறார்.[9]

விகடன் : வில்லனாக 'தாரை தப்பட்டை' ஆர்.கே.சுரேஷ் அவ்வளவு கச்சிதம்.[10]

படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்

வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 சூறாவளிடா யுகபாரதி ஜினேஷ் பிரபு 5:05
2 ஒத்தசடை ரோசா யுகபாரதி சாய்சரண், பூஜா ஏ.வி. 4:40
3 கருவக்காட்டு கருவாயா வைரமுத்து வந்தனா ஸ்ரீனிவாசன், ஜிதின் ராஜ், ஜெயமூர்த்தி 4:50
4 அக்கா பெத்த ஜக்காவண்டி யுகபாரதி அனிருத் ரவிச்சந்திரன், நிரஞ்சனா ரமணன் 4:03
5 மருது மருது இசைக்கருவி 3:23

மேற்கோள்கள்

தொகு
  1. "விஷாலின் ‘மருது’ படம் ராஜபாளையத்தில் துவங்கியது..!". http://www.tamilcinetalk.com/marudhu-movie-starts-today-at-rajapalayam/. 
  2. "விஷால் vs ராதாரவி". http://www.tamilcinetalk.com/radharavi-will-actor-with-vishal-in-marudhu-movie/. 
  3. "இயக்குனர் முத்தையா பேட்டி". http://www.tamilcinetalk.com/radharavi-will-actor-with-vishal-in-marudhu-movie/. 
  4. "பத்திரிகையாளர் சந்திப்பு". http://www.tamilcinetalk.com/marudhu-movie-press-meet-news/. 
  5. "மலையாள நடிகை லீலாவின் முதல் படம்". http://www.tamilcinetalk.com/vishal-speech-about-radharavi/. 
  6. "பட வசூல்". https://www.indiaglitz.com/Marudhu-Chennai-boxoffice-report-tamilfont-news-159471.html. 
  7. "மருது விமர்சனம்". https://cinema.dinamalar.com/movie-review/2050/marudhu/. 
  8. "மருது விமர்சனம்". http://www.tamilcinetalk.com/marudhu-movie-reviews/. 
  9. "மருது விமர்சனம்". https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article8644339.ece. 
  10. "வில்லன் ஆர். கே. சுரேஷ்". https://cinema.vikatan.com/movie-review/64416-maruthu-movie-review.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருது_(திரைப்படம்)&oldid=4102833" இலிருந்து மீள்விக்கப்பட்டது