பிரவீன் கே. எல்

பிரவீன் கே.எல். (Praveen K.L.) என அழைக்கப்படும் குச்சிப்புடி லதா பிரவீன் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இவர் முக்கியமாகத் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.[1]

பிரவீன் கே.எல்.
Praveen K. L.
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று

ஆரம்ப வாழ்க்கையும் படத்தொகுப்பு பணியும் தொகு

பிரவீன் தன் தந்தையுடன் சேர்ந்து ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாரிப்பு துறையில் பகுதி நேர படத்தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பிரவின் ஈடிவி குழுமத்தின் செய்திகளையும், அன்வேசிதா போன்ற நெடுந்தொடரையும் படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.

பாலு மகேந்திரா இயக்கிய தொலைக்காட்சித் தொடரான கதைநேரம் தொடருக்குப் பின், என்.பி.ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நிறைய வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களைத் தொகுத்துள்ளார். இதில் வெங்கட்பிரபு இயக்கிய படங்களும் அடங்கும். 4 மொழிகளில் 50 இற்கும் மேற்பட்ட படங்களை முடித்துள்ளார். சென்னையையும் சிங்கப்பூரையும் அடித்தளமாக கொண்டுள்ளார். 2008ம் ஆண்டுக்கான தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைபட தொகுப்பாளருக்கான விருதை சரோஜா படத்திற்காக இந்த இரட்டையர்கள் வாங்கினர். இவர் ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருதிலும் சிறந்த திரைப்பட தொகுப்பாளர் விருதினைப் பெற்றார்.

திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. P. 10 ஈநாடு Daily News paper, Award winning editor, Eenadu Cinema, Friday March 9, 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_கே._எல்&oldid=3493442" இருந்து மீள்விக்கப்பட்டது