திருடன் போலீஸ் (திரைப்படம்)

2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம்

திருடன் போலீஸ் (Thirudan Police) 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது அடிதடி நிறைந்த நகைச்சுவைப் படம். இப்படத்தில் அட்டக்கத்தி தினேசு, ஐசுவர்யா ராஜேசு ஆகியோர் கதை முன்னனி நாயகர்களாக நடித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். ராஜேந்திரன், ஜான் விசய், பாலா சரவணன், நிதின் சத்தியா, ரேணுகா, உமா ஐயர், ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை கார்த்திக் ராசு இயக்கினார் இதுவே இவர் இயக்கத்தின் முதல் படமாகும். எசு. பி. பி. சரண் கன்னய்யா பிலிம்சின் செல்வக்குமாருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

திருடன் போலீஸ்
இயக்கம்கார்த்திக் ராசு
தயாரிப்புஎசு. பி. பி. சரண்
செல்வகுமார்
திரைக்கதைகார்த்திக் ராசு
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅட்டக்கத்தி தினேசு
ஐசுவர்யா ராஜேசு
பாலா சரவணனன்
ஒளிப்பதிவுசித்தார்த்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
என். பி. சிறிகாந்த்
கலையகம்கேபிடல் பிலிம் வொர்க்சு
கன்னய்யா பிலிம்சு
வெளியீடுநவம்பர் 14, 2014 (2014-11-14)
ஓட்டம்137 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

விசுவா வேலை இல்லாமல் இருக்கிறார். அவர்கள் காவலர் குடியிருப்பில் குடியிருக்கின்றனர். கண்டிப்பானவரா இருப்பதால் விசுவாவிற்கு காவலரான அவர் அப்பாவை பிடிக்காது. விசுவாவிற்கும் நிதின் சத்யாவிற்கும் ஆகாது. நிதின் ஏகாம்பரம் போல் பேசி மாணிக்கம் மூலம் ஒரு பெண்ணை கடத்தி கெடுத்து கொலை செய்துவிடுகிறார். ஒரு சமயத்தில் சிங்காரம் ஏகாம்பரம் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவிக்கப் போவதாக கூறுகிறார். மாணிக்கத்தையும் மரவட்டையையும் போலி மோதலில் கொல்ல ஆணையர் உத்தரவிடுகிறார். அக்குழுவில் சிங்காரத்தையும் இணைத்து மாணிக்கம் மூலம் அவரை ஏகாம்பரம் கொன்று விடுகிறார். சிங்காரத்தின் வேலை விசுவாவிற்கு கிடைக்கிறது.

காவலர் வேலையின் சிரமங்களை விசுவா உணர்கிறார். அவருக்கு அவர் அப்பா மீது இப்போது மதிப்பு வருகிறது. அவருக்கு வணங்காமுடி நண்பராக இருக்கிறார். சிறையில் கைதிகளாக உள்ள மாணிக்கத்தையும் மரவட்டையையும் அடித்து விடுகிறார். அவர்களுக்கு இவர் தான் சிங்காரத்தின் மகன் என தெரியவருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விசுவா மூலம் தங்களை கொல்ல ஏகாம்பரம் முயல்வதாக ஐயம் கொள்கின்றனர். இவர்கள் தான் தன் அப்பாவை கொன்றவர்கள் என தெரிந்து பல முயற்சிகளுக்குப் பின் இவர்கள் இருவரையும் ஏகாம்பரத்தையும் ஆணையரிடம் பிடித்து கொடுக்கிறார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.