ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் (2010) தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அட்டகத்தி (2012) திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார். வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.[1]
ஐஸ்வர்யா ராஜேஷ் | |
---|---|
2024ஆம் ஆண்டீல் ஐஷ்வர்யா ராஜேஷ் | |
பிறப்பு | சனவரி 10, 1990 திருப்பூர், தமிழ்நாடு |
பணி | நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று |
பெற்றோர் | ராஜேஷ் -ரசிலா தேசாய் |
வாழ்க்கை
தொகுஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.
இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். இவர் ஒரு இளங்கலை பட்டதாரி ஆகும். இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்குப்பெற்று வெற்றியாளராக வந்தார். 2011ம் ஆண்டு 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து 'ஆச்சரியங்கள்' மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கின்றார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2010 | நீதானா அவன் | நந்தினி | தமிழ் | |
2011 | அவர்களும் இவர்களும் | சுவெத்தா | ||
உயர்திரு 420 | சாரு | |||
சட்டப்படி குற்றம் | சுமதி | |||
2012 | விளையாட வா | அனு | ||
அட்டகத்தி | அமுதா | |||
ஆச்சரியங்கள் | அனு | |||
2013 | புத்தகம் | தாரா | ||
2014 | ரம்மி | சொர்ணம் | ||
பண்ணையாரும் பத்மினியும் | மலர்விழி | |||
கதை திரைக்கதை வசனம் இயக்கம் | ஐஸ்வர்யா | சிறப்புத் தோற்றம் | ||
திருடன் போலீஸ் | பூர்ணிமா | |||
2015 | காக்கா முட்டை | தாய் | சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது பரிந்துரை: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | |
2016 | ஆறாது சினம் | மியா | ||
ஹலோ நான் பேய் பேசுறேன் | கவிதா | |||
மனிதன் | ஜெனிபர் | |||
தர்மதுரை | அன்புசெல்வி | சீமா சிறந்த நடிகை (துணை) விருது பரிந்துரை: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் | ||
குற்றமே தண்டனை | சுவத்தா | |||
காதலை | கலை | |||
பறந்து செல்ல வா | மாதவி | |||
மோ | பிரியா | |||
2017 | ஜோமொண்டே சுவிசேசங்கள் | வைதேகி | மலையாளம் | |
முப்பரிமாணம் | ஐஸ்வர்யா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
கட்டப்பாவ காணோம் | மீனா | |||
சகாவு | ஜானகி | மலையாளம் | ||
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் | பூஜா | தமிழ் | ||
டாடி | ஆசா | இந்தி | ||
2018 | இலட்சுமி | நந்தினி | தமிழ் | |
சாமி 2 | பிவனா | |||
செக்கச்சிவந்த வானம் | ரேணு | |||
வட சென்னை | பத்மா | |||
கனா | கௌசல்யா | பிலிம்பேர் விருது | ||
2019 | விளம்பரம் | ஐஸ்வர்யா | ||
கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி | கௌசல்யா | தெலுங்கு | ||
மெய் | உத்ரா | தமிழ் | ||
நம்ம வீட்டுப் பிள்ளை | துளசி | |||
மிஸ்மாட்ச் | மகாலட்சுமி | தெலுங்கு | ||
2021 | பொன்னியின் செல்வன் | தமிழ் | தயாரிப்பில் |
சின்னத்திரை
தொகுஆண்டு | நிகழ்ச்சியின் பெயர் | கதாபாத்திரம் | தொலைக்காட்சி |
---|---|---|---|
2020- தற்பொழுது | அன்பே வா | வைஷ்ணவி | சன் டிவி |
2021 | கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 | சிறப்பு விருந்தினர் | கலர்ஸ் தமிழ் |
விருதுகள்
தொகு- 2016 - ஆனந்த விகடன் நம்பிக்கை விருது[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து (Chennai, India). 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. பார்த்த நாள்: 14 July 2017.
- ↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017