மனிதன் (2016 திரைப்படம்)
மனிதன் (Manithan) 2016 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எல். அகம்மது இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் நடிகர்களாக உதயநிதி ஸ்டாலின், ராதா ரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2013 இல் இந்திமொழியில் வெளியான சுபாஷ் கபுரின் "ஜாலி எல்எல்பீ" படத்தினை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படம் டெல்லி கிட் அன்ட் ரன் வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஏப்ரல் 29, 2016 இல் வெளிவந்தது.[1]
மனிதன் | |
---|---|
இயக்கம் | ஐ.அகமது |
தயாரிப்பு | உதயநிதி ஸ்டாலின் |
கதை | அஜயன் பாலா (திரைக்கதை) ஐ.அகமது (மேலதிக திரைக்கதை) |
மூலக்கதை | ஜொலி எல்எல்பீ படைத்தவர் சுபாஷ் கபூர் |
திரைக்கதை | மூலத் திரைக்கதை: சுபாஷ் கபூர் தழுவல் திரைக்கதை: ஐ. அகமது (நன்றி தெரிவிக்கப்படவில்லை) |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | உதயநிதி ஸ்டாலின் ஹன்சிகா மோத்வானி ஐஸ்வர்யா ராஜேஷ் ராதா ரவி பிரகாஷ் ராஜ் விவேக் |
ஒளிப்பதிவு | ஆர்.மதி |
படத்தொகுப்பு | ஜெ.வீ மணிகண்ட பாலாஜி |
கலையகம் | ரெட் ஜியண்ட் மூவிஸ் |
விநியோகம் | பொக்ஸ் ஸ்டார் ஸ்ரூடியோஸ் |
வெளியீடு | 29 ஏப்ரல் 2016 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- உதயநிதி ஸ்டாலின்-சக்திவேல் (சக்தி)
- ஹன்சிகா மோத்வானி-பிரியா தர்மலிங்கம்
- ஐஸ்வர்யா ராஜேஷ்-ஜெனிபர்
- பிரகாஷ் ராஜ்-ஆதிஷேஷன்
- விவேக்-சூர்யா
- ராதாரவி-தனபால்
- மோகன் அகாசே-ராம் திவான்
- கிருஷ்ண குமார்-விஜய் நாயர்
- ஸ்ரீனிவாசன்-டாக்டர் குழந்தைசாமி
- கலைராணி-நீதிபதி
- யார் கண்ணன்-வக்கீல் பழனி
- சுவாமிநாதன்-வக்கீல்
- சங்கிலி முருகன்-மூர்த்தி
- மயில்சாமி-கான்ஸ்டபிள் குருஜி
- பாலு ஆனந்த்-கான்ஸ்டபிள்
- அங்கனா றோய்-பிரியாவின் சகோதரன்
- லொல்லு சபா மனோகர்-கூகிளு
- கடம் கிஷான்
- சேரன் ராஜ்-இன்ஸ்பெக்டர் செல்வம்
- செல் முருகன்-வக்கீல்
- சைனத்-ஆதிசேசனின் யூனியர்.
- கஜராஜ்-தர்மலிங்கம்
- ராஜா ரிஷி-கமலக்கண்ணன்
- சக்திவேல்-முத்துபாண்டி
- அஸ்வின் ராவோ-ராவோ
- சுப்பர் குட் சுப்ரமணி
- லொல்லு சபா அந்தோணி
- சதிஷ் குமார் சுந்தரம்
- ராஜு
தயாரிப்பு
தொகு2014 ல் இயக்குநர் ஐ. அகமதுவும் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஹன்சிகா மோத்வானி மற்றும் அசோக் செல்வன் [2] ஆகியோரை வைத்து இதயம் முரளி எனும் திரைப்படத்தை எடுக்க திட்டமிடனர். அது இயலாமல் போக 2013 ல் இந்தி மொழியில் வெளியான சுபாஷ் கபூரின் ஜொலி எல்எல்பீ [3] எனும் திரைப்படத்தை எடுக்க எண்ணினர். ஹன்சிகா மோத்வானி, பிரகாஷ் ராஜ், ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமானார்.[4] இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2015 ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. படத்தின் தொடக்கம் முதலே படத்தின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.[5]
இதன்பின்னர் அக்ஷரா கௌடாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு கையெழுத்திட்டார்.
இசை
தொகுஇத்திரைப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு மேலாக இத்திரைப்படத்தில் வெளிவிடாத பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை மதன் கார்க்கி, விவேக் ஆகியோர் எழுதியுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manithan Tamil Movie Review - Chennaivision" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
- ↑ Udhaynidhi announces movie with Hansika பரணிடப்பட்டது 2014-09-05 at the வந்தவழி இயந்திரம். Sify.com. Retrieved on 2 July 2016.
- ↑ Udhayanidhi Stalin to remake `Jolly LLB`! பரணிடப்பட்டது 2015-06-13 at the வந்தவழி இயந்திரம். Sify.com. Retrieved on 2 July 2016.
- ↑ Hansika to romance Udhayanidhi Stalin! பரணிடப்பட்டது 2016-08-18 at the வந்தவழி இயந்திரம். Sify.com. Retrieved on 2 July 2016.
- ↑ Udhay to kick start `Jolly LLB` remake பரணிடப்பட்டது 2015-08-18 at the வந்தவழி இயந்திரம். Sify.com. Retrieved on 2 July 2016.