அட்டகத்தி
பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அட்டகத்தி (Attakathi) [1] 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். இதை இயக்கியவர் பா. ரஞ்சித், இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.
அட்டகத்தி | |
---|---|
அட்டகத்தி | |
இயக்கம் | பா. ரஞ்சித் |
தயாரிப்பு | சி. வி. குமார் |
திரைக்கதை | பா. ரஞ்சித் |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு | தினேஷ் நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | பி. கே. வர்மா |
படத்தொகுப்பு | லியோ ஜான் பவுல் |
கலையகம் | திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | ஸ்டியோ கிரீன் |
வெளியீடு | ஆகத்து 15, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுதினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கிலத் தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனைப் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லாக் காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றான். அவன் காதலில் ஜெயித்தானா? இலையா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- தினேஷ் தினகரனாக
- நந்திதா பூர்ணிமாவாக
- ஐஸ்வர்யா ராஜேஷ் அமுதாவாக
- கலையரசன் தினகரன் (கேமியோ)
- விஸ்வநாத் தினகரனின் சகோதரர்
- திவ்யாவாக சோபியா
- நதியாவாக ஷாலினி
- மகேந்திரன் மகேந்திரன்
- யோகி பாபு
- அபிசரவணன்
- ஜாங்கிரி மதுமிதா
- தில்சா
- அரி கிருஷ்ணன்