அபிசரவணன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

அபிசரவணன் (Abi Saravanan) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் டூரிங் டாக்கீஸ் (2015) மற்றும் சாகசம் (2016) உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.[1]

அபிசரவணன்
பிறப்புமதுரை
மற்ற பெயர்கள்சரவணகுமார்
பணிநடிகர்

தொழில்

தொகு

இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தபின்,  நடிகர் ஆக விரும்பி, திரைத் துறையில் நுழைய வாய்ப்புகளைத் தேடினார். துவக்கத்தில் அட்டகத்தி (2012) மற்றும் குட்டிப் புலி (2013) ஆகியவற்றில் சிறிய துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் இவர் எஸ். எஸ். குமரனின் தமிழ்-மலையாள இருமொழித் திரைப்படமான கேரளா நட்டிளம் பெண்களுடனே (2014) திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்திரத்தை ஏற்று நடித்தார்.[2][3][4] இவரது இரண்டாவது படம் டூரிங் டாக்கீஸ் (2015), இப்படத்தில் எஸ். ஏ. சந்திரசேகரின் இளவயது பாத்திரத்தில் நடித்தார்.[5] இவர் பின்னர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த சாகசம் (2016) படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்தார்.

2015 இல் இவர் பல குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களான அறிமுக இயக்குநரான ஜெய்யின் இயக்கத்தில்  பிளஸ் ஆர் மைனஸ் , சரவண பாண்டியனின் இறையன், அந்த ஒரு நாள்,  நாடகம்  போன்ற படங்களில் நடித்தார்.[6]

போராட்டங்களில்

தொகு

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்க ஆதரவாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார். தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் அவர்களோடு கடைசிவரை இருந்து போராடினார்.[7]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் பாத்திரம்
குறிப்பு
2012 அட்டகத்தி 
2013 குட்டிப் புலி
2014 கேரள நாட்டிளம் பெண்களுடனே  உண்ணிகிருஷ்ணன்
2015 டூரிங் டாக்கீஸ் ஆன்டணி
2016 சாகசம் 
2016 பட்டதாரி

சிவா
2017 பிளஸ் ஆர் மைனஸ் தயாரிப்பில்
2017 இறையான்  தயாரிப்பில்
2017 அந்த ஒரு நாள் தயாரிப்பில்
2017 நாடகம் தயாரிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/Kerala-Nattilam-Pengaludane/articleshow/32360216.cms
  2. http://www.deccanchronicle.com/140106/entertainment-mollywood/article/surprise-package
  3. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etcetera-slice-of-village-life/article4985392.ece
  4. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-kerala-nattilam-pengaludane-a-slice-of-kerala/article4817403.ece
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  6. http://www.thehindu.com/features/cinema/etcetra/article6945376.ece
  7. ஆர்.சி.ஜெயந்தன் (21 மார்ச் 2018). "நடிகரா, போராளியா? - நடிகர் அபிசரவணன் பேட்டி". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசரவணன்&oldid=3576429" இலிருந்து மீள்விக்கப்பட்டது