எஸ். ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]
எஸ். ஏ. சந்திரசேகர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1945 தங்கச்சிமடம், ராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1979 - தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | சோபா |
பிள்ளைகள் | விஜய் |
தனிப்பட்ட வாழ்க்கை தொகு
சந்திரசேகர் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரத்தில் சேனாதிபதி பிள்ளைக்கு மகனாக பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார்.[3] இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார்.[4] தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார்.[5]
திரைப்பட வாழ்க்கை தொகு
சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவற்றில் வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்துள்ளார்.[6] எஸ்.சங்கர்,எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரிடம் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள்.[7][8]
டூரிங் டாக்கிஸ்(2015)[9] திரைப்படம் சந்திரசேகர் இயக்கிய 69 வது படமாகும்
திரைப்படங்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.filmibeat.com/celebs/s-a-chandrasekhar/biography.html
- ↑ http://www.thehindu.com/thehindu/mp/2005/03/21/stories/2005032101490100.h
- ↑ http://profiles.lakshmansruthi.com/index.php?uid=684
- ↑ http://www.filmibeat.com/celebs/vijay-tamil-actor/biography.html
- ↑ https://in.movies.yahoo.com/post/122230622292/birthday-special-5-facts-about-vijay-you-must
- ↑ SAC breaks silence on proxy direction – IBNLive பரணிடப்பட்டது 2015-04-13 at Archive.today. Ibnlive.in.com (2012-06-07). Retrieved on 2015-10-16.
- ↑ http://articles.economictimes.indiatimes.com/2010-10-03/news/27570278_1_tamil-film-first-film-robot
- ↑ http://www.thehindu.com/features/metroplus/master-of-bromance/article5171133.ece
- ↑ 'Touring Talkies' film with Amitabh … Thanu produced Director SAC! ~ Amigos Crowd பரணிடப்பட்டது 2015-04-13 at the வந்தவழி இயந்திரம். Amigoscrowd.com (2015-01-27). Retrieved on 2015-10-16.