மு. இராசேசு
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
மு. இராசேசு (M. Rajesh, பிறப்பு: நாகர்கோவில்) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார்.[1][2][3]
மு. இராசேசு | |
---|---|
பிறப்பு | இராசேசு முத்துக்குமாரசாமி |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசியப் பொறியியல் கல்லூரி |
பணி | இயக்குநர், திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 – தற்போது வரை |
குறிப்பிடத்தக்க தகவகல்கள்
தொகு- இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
- இவருடைய இரண்டாவது திரைப்படமான, பாஸ் என்கிற பாஸ்கரனில் முதல் திரைப்படத்தின் கதாநாயகனான ஜீவா (திரைப்படம்: சிவா மனசுல சக்தி), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
- இவருடைய மூன்றாவது திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), மறுபடியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
- இவருடைய அனைத்து திரைப்படங்களிலும், சந்தானம் நகைச்சுவைத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
திரை வாழ்க்கை
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி | முடிவு | குறிப்புகள் |
2009 | சிவா மனசுல சக்தி | ஜீவா, அனுயா, சந்தானம் | தமிழ் | வெற்றி | |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | ஆர்யா, நயன்தாரா, சந்தானம் | தமிழ் | வெற்றி | |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | உதயநிதி இசுட்டாலின், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் | தமிழ் | வெற்றி | |
2013 | ஆல் இன் ஆல் அழகு ராஜா | கார்த்திக் சிவகுமார், சந்தானம் | தமிழ் | ||
2015 | வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க | ஆர்யா, சந்தானம் | தமிழ் | படபிடிப்பில் |