விஜய் சேதுபதி

இந்திய நடிகர்

விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

விஜய் சேதுபதி
பிறப்புவிஜய குருநாத சேதுபதி
16 சனவரி 1978 (1978-01-16) (அகவை 46)
இராஜபாளையம், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்சேதுபதி
படித்த கல்வி நிறுவனங்கள்தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி
பணிநடிகர், தயாரிப்பாளர். பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது வரை[1]
வாழ்க்கைத்
துணை
ஜெஸ்ஸி (2003)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும், சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

திரை வாழ்க்கை

தொகு

இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு இராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார்.

2012ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தர்மதுரையில் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது பாணியில் ஆடியிருப்பார்.[2] 2017 ஆம் ஆண்டு நடிகர் மாதவனுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இருவருக்கும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

2018 ஆம் ஆண்டில் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் மற்றும் ஜூங்கா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஜூங்கா என்ற திரைப்படத்தை இயக்குனர் கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம்[3] என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதை தொடர்ந்து 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட[4][5] போன்ற திரைப்படங்களில் நடித்தார். 96 என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிசா நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேட்பையும் பெற்றது.

2019 ஆம் ஆண்டு சாய் ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாகும்.[6][7]

திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  2. "விஜய் சேதுபதி!". Vikatan. 10 August 2017. http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/77899-vijay-sethupathi-birthday-special-article.html. பார்த்த நாள்: 10 August 2017. 
  3. Subramanian, Anupama (29 September 2018). "Chekka Chivantha Vaanam review: Mani Ratnam's drama will leave you spellbound". Deccan Chronicle.
  4. Saltz, Rachel (28 March 2019). "'Super Deluxe' Review: A Tamil Film, With a Cosmic Indie Vibe" – via NYTimes.com.
  5. Ramanujam, Srinivasa (10 January 2019). "'Petta' review: A real Rajinikanth feast" – via www.thehindu.com.
  6. "I'm playing myself in Jayaram's Marconi Mathai: Vijay Sethupathi". The New Indian Express.
  7. Subramanian, Anupama (12 December 2018). "Vijay Sethupathi's looks from 'Sye Raa' leaked". Deccan Chronicle.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சேதுபதி&oldid=3605022" இலிருந்து மீள்விக்கப்பட்டது