சீனு இராமசாமி

சீனு இராமசாமி (ஆங்கிலம்:Seenu Ramasamy) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி யில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பை படித்தார். மேலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் பரத், பாவனா மற்றும் சந்தியா நடித்த கூடல் நகர் ஆகும்.[1] இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்றுத், திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.[2][3]

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் நடிப்பு குறிப்புகள்
2007 கூடல் நகர் பரத், பாவனா, சந்தியா
2010 தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன், வசுந்தரா சியேர்ட்ரா சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2012 நீர்ப்பறவை விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ் பரிந்துரைப்பு—சிறந்த இயக்குனர்க்கான சிம்மா விருது
2014 இடம் பொருள் ஏவல் விஷ்ணு விஷல், விஜய் சேதுபதி, நந்திதா தாஸ் தயாரிப்பில்
2016 தர்மதுரை விஜய்செதுபதி, தமன்னா, ஐஸ்வரியா ராஜேஷ் தேசிய விருது - கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர்

ஆதாரங்கள்தொகு

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனு_இராமசாமி&oldid=2704986" இருந்து மீள்விக்கப்பட்டது