நீர்ப்பறவை (திரைப்படம்)

சீனு இராமசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீர்ப்பறவை என்னும் தமிழ்த் திரைப்படம் 2012 அன்று வெளிவந்ததாகும். இதில் விசுணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, தம்பி இராமையா, சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர். இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிசு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வைரமுத்து. வசனம் ஜெய மோகன், சீனு ராமசாமி. எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்திற்கான வசனங்களை எழுதினார்.[1]

நீர்ப்பறவை
நீர்ப்பறவை
இயக்கம்சீனு ராமசாமி
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைசீனு ராமசாமி
திரைக்கதைசீனு ராமசாமி
இசைஎன். ஆர். இரகுநாதன்
நடிப்புவிசுணு
சுனைனா
நந்திதா தாஸ்
சரண்யா பொன்வண்ணன்
வடிவுக்கரசி
தம்பி இராமையா
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புமு. காசி விசுவநாதன்
கலையகம்ரெட் ஜெயண்ட் மூவிசு
வெளியீடுநவம்பர் 30, 2012 (2012-11-30)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

முதலில் விமல் நடிப்பதாக இருந்த இப்படத்தில்,[2] விமலால் தேதிகள் ஒதுக்க முடியாததால் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார் என்று பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[3]

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

நகரத்தில் இருந்து கடலோர கிராமத்துக்கு வரும் மகன் தனது அம்மா நந்திதாதாஸிடம் (வயதான சுனைனா), இந்த வீட்டை விற்றுவிட்டு தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்கிறான். கடலுக்கு போன அப்பா என்னை தேடி வருவாரு அவர் வரும் போது நான் இங்கே இருக்க வேண்டும். அதனால் என்னால் இந்த வீட்டை விற்கமுடியாது என்று சொல்ல, 25 ஆண்டுக்கு முன்னாடி கடலில் காணமபோன அப்பா இருக்கிறாரோ செத்துட்டாரோ, அவரு வருவாரு வருவாரு என்று சொல்லிட்டு இருக்கியே என்று கோபம் கொள்ள, அந்த வீட்டின் ஒரு இடத்தில் கல்லறையில் பாடும் பாடலை பாடி நந்திதாதாஸ் அழுகிறார். இதைப் பார்த்த அந்த மகன் தனது அம்மா இல்லாத நேரத்தில் அந்த இடத்தை தோண்டி பார்க்க, அந்த இடத்தில் எலும்பு கூடு ஒன்று இருக்கிறது.

அந்த எலும்புக்கூடு அருளப்பசாமியுடையது (விஷ்ணு) என்றும், விஷ்ணுவை கொன்றது தான் தான் என்றும் நந்திதாஸ் நீதிமன்றத்தில் கூறுகிறார். அதிலிருந்து பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், தேவாலயத்தில் ஊழியம் செய்யும் கன்னித்துறவியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆன காதலை மீனவ பின்னணியில் இயக்குநர் சீனு ராமசாமி சொல்லியிருக்கிறார்.

இளைஞன் அருளப்பசாமி (விசுணு) குடிகாரன இருக்கிறான். அவன் தந்தை லூர்தும் (பூ ராம்) தாய் மேரியும் (சரண்யா பொன்வண்ணன்) அவனை திருத்த முயல்கிறார்கள், அதில் வெற்றி கிடைக்கவில்லை. தேவாலய தந்தை உதவியுடன் மகனை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் பாதியில் ஓடி வந்துவிடுகிறான் அருளப்பசாமி. அன்று திருவிழா. போதையில் வரும் அருளப்பசாமி, தேவாலய வாசலில் படுத்திருக்கும் எஸ்தரின் (சுனைனா) பக்கத்தில் நிலை மறந்து படுத்துவிடுகிறான்.

இதைக்கண்ட ஊர் மக்களும் அவன் தந்தையும் அவனை அடிக்கிறார்கள், குடியை மறக்க விரும்பி அருளப்பசாமி தானே மறுவாழ்வு மையத்துக்குப் போகிறான். அங்கு திருந்தி தான் சொந்தமாக மீன் பிடிக்க வேண்டும் என்று முயலுகையில் அவன் மீனவன் அல்ல (அவனை பெற்ற தாயும் தந்தையும் படகில் குண்டடிபட்டு இறந்து விடுகிறார்கள் அவனை கண்டெடுத்த லூர்தும் மேரியும் அவனை தங்கள் பிள்ளை போல் வளர்க்கிறார்கள்) என்பதால் அவன் மீன் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. அவர்களின் தடைகளை மீறி சொந்தமாக படகு வாங்கும் அருளப்பசாமி சின்ன எதிர்ப்புக்கிடையில் சுனைனாவை திருமணம் செய்து வாழ்க்கையில் சிறிது நிலைபெறும் போது சிங்கள கடற்படையால் சுடப்படுகிறான்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Seenuramasamy ropes in Jeyamohan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 October 2011 இம் மூலத்தில் இருந்து 14 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120714092405/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-19/news-interviews/30297308_1_film-mani-ratnam-thenmerku-paruvakkaatru. 
  2. "Vimal and Seenu Ramasamy teams up". Sify. 19 October 2011. Archived from the original on 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 19 October 2011.
  3. "Vimal loses, Vishnu wins". IndiaGlitz. 28 December 2011. Archived from the original on 8 January 2012. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ப்பறவை_(திரைப்படம்)&oldid=4160807" இலிருந்து மீள்விக்கப்பட்டது