மு. காசிவிசுவநாதன்

தமிழக திரைப்பட படத் தொகுப்பாளர்
(காசிவிசுவநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காசிவிசுவநாதன் (Kasi Viswanathan, பிறப்பு: சனவரி 28, 1968) என்பவர் ஒரு இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். [1]

மு. காசிவிசுவநாதன்
Kasi.jpg.jpg
பிறப்பு28 சனவரி 1968 (1968-01-28) (அகவை 55)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட படத் தொகுப்பாளர்

தொழில்தொகு

காசிவிசுவநாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் திரைப்படத் துறையில் நுழைந்தார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, மலையாள திரைப்பட தொகுப்பாளரான கே. நாராயணனின் உதவியாளராக பணியாற்றுமாறு கூறி சேர்த்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் தேவர் மகன் (1992), குருதிபுனல் (1996) போன்ற படங்களில் இணை படத் தொக்குப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்தின் கீழ் ஒரியா, சிங்களம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளின் படங்களில் பயிற்சி பெற்றார்.[சான்று தேவை]

கமலகாசனின் ஆளவந்தான் (2001) மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகமானார். அதில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சர் ஒளிப்படமிகள் சம்பந்தப்பட்ட நுட்பங்களை பரிசோதித்துப்பார்த்தார். இவரது இந்த முதல் படத்திற்கே இவருக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை பெற்றார் . பின்னர் காதல் நகைச்சுவை படமான பம்மல் கே. சம்மந்தம் (2002) இல் பணியாற்றினார். காசி விஸ்வந்தன் பின்னர் டூயட் மூவிசு பதாகையில் பிரகாஷ் ராஜ் தயாரித்த பல தயாரிப்புகளில் படத் தொகுப்பாளராக பணியாற்றினார். [2] பின்னர் இவர் ராதா மோகன், சுசீந்திரன், சீனு இராமசாமி, சுந்தர் சி. உள்ளிட்ட இயக்குனர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டில், சுசீந்திரனின் மாவீரன் கிட்டு (2016) படத்தில் நடிகராக அறிமுகமானார். [3] [4]

திரைப்படவியல்தொகு

படத் தொகுப்பாளராகதொகு

நடிகராகதொகு

குறிப்புகள்தொகு

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-09-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.behindwoods.com/new-videos/tamil-actors/kasi-viswanathan/kasi-viswanathan-interview.html
  3. http://www.indiaglitz.com/editor-mukasi-viswanathan-acting-debut-in-maveeran-kittu-vishnu-vishal-sridivya-tamil-news-164852.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-05-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._காசிவிசுவநாதன்&oldid=3567817" இருந்து மீள்விக்கப்பட்டது