நெஞ்சில் துணிவிருந்தால் (2017 திரைப்படம்)

சுசீந்திரன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நெஞ்சில் துணிவிருந்தால் (Nenjil Thunivirundhal), சுசீந்தனின்இயக்கத்தில், தமிழில் ஆண்டனியின் ,சக்ரி தெலுங்கில் சிக்ருபட்டி ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகியுள்ள தமிழ், தெலுங்கு திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தீப் கிசன், மெக்ரீன் பிர்சடா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சூரி, ஹரிஷ் உத்தமன்ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இலக்சுமன் குமார் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், காசி விசுவநாதனினின் படத்தொகுப்பிலும் உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டு 10நவம்பர் 2017இல் படம் வெளியானது.[1][2][3][4]

'நெஞ்சில் துணிவிருந்தால்'
இயக்கம்சுசீந்திரன்
தயாரிப்புஆண்டனி (தமிழில்)
சக்ரி சிக்ருபட்டி(தெலுங்கில்)
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுபாலசுப்ரமணியம்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்அன்னை பிலிம் பேக்டரிஸ் (தமிழில்)
இலட்சுமி நரசிம்மா எண்டர்பிரைசஸ் (தெலுங்கில்)
விநியோகம்கிளாப் போர்டு புரடக்சன்ஸ் (தமிழில்)
வெளியீடு10 நவம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

படப்பணிகள்

தொகு

இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டு ஜூன் 2017 இல் முடிந்தது. இப்படம்10நவம்பர் 2017இல் படம் திரையரங்குகளில் வெளியானது.[5]

மகேசு, குமார் ஆகிய இரண்டுபேரும் நெருக்கமான நண்பர்கள். குமார் தங்கை சாதிகாவிற்கும் மகேசுக்கும் காதல். ஒரு சதியின் பொருட்டு மகேசை கொன்றிட துரைப்பாண்டியாக குழுவினர் திட்டமிடுகின்றனர் ஆள்மாறாட்டம் ஏற்பட்டதால், அவருக்கு பதில் அவரின் நண்பன் குமாருக்கு வலை விரிக்கின்றனர். குறி வைக்கப்பட்டதில் இருந்து தப்பிய குமார். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையின் உதவியுடன் துப்பு துலக்குகின்றார். துரைப்பாண்டியின் இலக்கு தனது தங்கை எனவும் தனது நண்ப இல்லை எனவும் அறிகின்றார். தன் நண்பனையும், தங்கையையும் அவர் காத்தாரா? துரைப்பாண்டியின் கொடுஞ் செயல்களுக்கு முடிவு காணப்பட்டதா என்பதே கதை.[6][7]

இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்கு வைரமுத்து, யுகபாரதி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சான்றுகள்

தொகு
  1. http://www.gulte.com/movienews/58801/First-Look-Sundeep-Mehreen-in-C-o-Surya
  2. "Actors and producers refused to knock on my door after Rajapattai". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
  3. "Suseenthiran gets new title for Aram Seidhu Pazhagu". Top 10 Cinema. 16 August 2017 இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816105809/https://top10cinema.com/article/43647/suseenthiran-gets-new-title-for-aram-seidhu-pazhagu. 
  4. "Director Suseenthiran's film undergoes a title change" (in en). deccanchronicle.com/. 16 August 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/160817/director-suseenthirans-film-undergoes-a-title-change.html. 
  5. "Suseenthiran wraps up next with Maanagaram actor". Top 10 Cinema. 7 June 2017 இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170816105152/https://www.top10cinema.com/article/42787/suseenthiran-wraps-up-next-with-maanagaram-actor. 
  6. http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20449001.ece
  7. https://tamil.filmibeat.com/reviews/nenjil-thunivirunthal-review-049777.html

வெளியிணைப்புகள்

தொகு