மதன் கார்க்கி

மதன் கார்க்கி வைரமுத்து, இந்தியாவை சேர்ந்த ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர். குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கார்க்கி, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக தன்னுடைய தொழில்முறைப் பணிவாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் அவர் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்தார், அங்கு பாடலாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணியாற்றத் தொடங்கினார். 2013ன் தொடக்கத்தில் அவர் தன்னுடைய ஆசிரியப் பணியைத் துறந்தார், திரைத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார், அதேநேரத்தில் அவர் கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை (KaReFo) என்ற மொழிக் கணிமை மற்றும் மொழிக் கல்வியறிவு ஆகியவற்றில் முதன்மையாகக் கவனம் செலுத்தும் ஒரு கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கினார். அவர் மெல்லினம் கல்வி நிறுவனத்தை தோற்றுவித்தார், இந்த நிறுவனம் குழந்தைகள் மத்தியில் கற்றலைப் பரவச்செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி விளையாட்டுகள் மற்றும் கதைப் புத்தகங்களை உருவாக்குகிறது. அவர் உருவாக்கிய இன்னொரு நிறுவனம், டூபாடூ (DooPaaDoo) இந்த இணையம் சார்ந்த இசைத்தளமானது திரைப்பட இசை அல்லாத தனியிசையை முன்னிறுத்துகிறது, திரைப்பட இசைத் தொகுப்புகளை விநியோகிக்கும் ஓர் அமைப்பாகவும் செயல்படுகிறது.[1][2][3]

மதன் கார்க்கி வைரமுத்து
பிறப்புமதன் கார்க்கி
மார்ச்சு 10, 1980 (1980-03-10) (அகவை 44)
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா மற்றும் ஆசுதிரேலியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிபாடலாசிரியர்,துணைப் பேராசிரியர்,மெல்லினம் நிறுவனர்.
பெற்றோர்வைரமுத்து
பொன்மணி
வாழ்க்கைத்
துணை
நந்தினி
பிள்ளைகள்ஹைக்கு கார்க்கி
வலைத்தளம்
http://karky.in
மதன் கார்கி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஏழு முறை தேசிய விருது வென்ற பாடலாசிரியராகிய வைரமுத்து மற்றும் தமிழ் அறிஞர், மீனாட்சி பெண்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியரான பொன்மணி ஆகியோரின் மூத்த மகன் கார்க்கி. அவருடைய இளைய சகோதரர் கபிலன், நாவல்களை எழுதி வருகிறார், தமிழ்த் திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றுகிறார்.

கல்வி

தொகு

கார்க்கி சென்னையில் வளர்ந்தவர், கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வி கற்றவர். பள்ளியில் தான் ஒரு நல்ல மாணவராக இருக்கவில்லை என்று தானே ஒப்புக்கொள்ளும் கார்க்கி, முதன்மையாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்மட்டும்தான் சிறந்து விளங்கினாராம். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்குக் கணிணி அறிவியலில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) அவருக்கு இடம் கிடைத்தது. 1997ம் ஆண்டில் கணிணிப் பொறியியல் துறையில் அவர் தன்னுடைய இளநிலைக் கல்வியைத் தொடங்கினார்.

CEGல் படித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய இறுதி ஆண்டுப் பணித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தமிழ் ஒலி எந்திரம் என்ற நிரலியை உருவாக்கினார் கார்க்கி, இது பேராசிரியர் T.V. கீதா அவர்களுடைய நேர்பார்வையின்கீழ் நிறைவுசெய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், தமிழ் மொழிக்கான "உரையிலிருந்து பேச்சை உருவாக்கும்” ஓர் இயந்திரத்தை உருவாக்குவதாகும். இந்தத் திட்டம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையானது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் அவர் பணியாற்றிய பிற திட்டங்கள்: பெயர் உருவாக்கி, இது படைப்புணர்வு, புதுமைச் சிந்தனை, புதிய பொருள்களை உருவாக்குவதுபற்றிய அவருடைய பாடத்தின் ஒரு பகுதியாகச் செய்யப்பட்டது, இதன் நோக்கம் இந்திய ஒலிப்பியலின்படி ஒலிக்கக்கூடிய பெயர்களை வரிசைமுறையற்று உருவாக்குவதாகும், ஒரு தொகுப்பு வடிவமைப்பு, இதற்காக ஓர் உயர் நிலை நிரல் எழுதுதல் மொழியைச் சிந்தித்தார் கார்க்கி, இதன் நோக்கம், மொழி சார்ந்த விதிமுறைகள், இலக்கண விதிமுறைகளை முறையாக்க குறிப்பிடுதல் மற்றும் புரிந்துகொள்ளுதல்.

சென்னைக் கவிகள்க்காக, தமிழ்ச் சொல் செயலிக்கான எழுத்துப்பிழையைச் சரிபார்க்கும் ஒரு நிரலியையும் அவர் உருவாக்கினார். இந்தத் திட்டத்தில் நிறைய இயற்கை மொழிச் செயல்படுத்துதல் அம்சங்கள் நிறைந்திருந்தன, இவை தமிழ் மொழிக்கான உருவவியல் பகுப்பாய்வு ஒன்றின் பகுதியாக உருவாக்கப்பட்ட ஓர் வேர் அகரமுதலியின் அடிப்படையில் அமைந்தன. இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரு சொல் சரியானதா, இல்லையா என்பதைக் கண்டறிதலாகும்.

2001ல் தன்னுடைய இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்த கார்க்கி, 2003ம் ஆண்டில் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார். அங்கு அவர் கணக்கிடுதல் கோட்பாடு மற்றும் வலுவான கணிதத்தில் அடிப்படையில் அமைந்த ஒரு திட்டத்தை உருவாக்கினார் (இது டாக்டர் ஜார்ஜ் ஹாவாஸ் அவர்களுடைய மேற்பார்வையின்கீழ் நிகழ்த்தப்பட்டது) இந்தத் திட்டமானது எந்த ஓர் அணி வடிவமைப்பையும் ‘ஹெர்மைட் இயல்பு வடிவம்’ என்கிற பொதுவான ஒரு வடிவத்துக்குக் (இது ஓர் அலகு மேல் முக்கோண அணி ஆகும்) குறைப்பதற்கான ஏற்கனவே உள்ள ஒரு செயல்முறையை ஆராய்வதில் கவனம் செலுத்தியது.

இந்தக் கல்வியின்போது அவருடைய வேறு சில திட்டங்கள்: ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மென்பொருள் செயல்முறைத் திட்டம் (இதன் நோக்கம், தனிப்பட்ட மென்பொருள் செயல்முறை என்கிற தனிநபர்களுக்கான மென்பொருள் உருவாக்கச் செயல்முறையை அறிமுகப்படுத்திப் பின்பற்றுதலாகும்), இணையக் கலைப்பொருள் கடை இணையத்தளம் (இதற்காக இணையத்தின்வழியே ஓவியங்களை வர்த்தகம் செய்கிற ஓர் இணையத்தளம் உருவாக்கப்பட்டது) மற்றும் எழுத்து அடிப்படையிலான ஒலி அரட்டை (இதற்காக முதன்மையான கணக்கிடல் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பதிலி ஒலி அரட்டை அமைப்பு அமைக்கப்பட்டு விஷுவல் பேஸிக்கில் உருவாக்கப்பட்டது.)

தன்னுடைய கற்றல் பணிகளுடன் கார்க்கி பல்கலைக்கழகத்தில் ஓர் கல்வியியல் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொடர்புடைய தரவுத்தள அமைப்புகள் மற்றும் நிரலெழுதும் மொழிகள் போன்ற பாடங்களில் அவர் வகுப்பறைப் பயிற்சிகள் மற்றும் ஆய்வக நிகழ்வுகளை நடத்தினார்.

தகவல் தொழில்நுட்பத்தில் தன்னுடைய PhD திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் ஜாவா அடிப்படையிலான ஓர் உருவகப்படுத்தும் தளத்தை உருவாக்கினார், SENSE (வலைப்பின்னலாக்கப்பட்ட உணர்விப் பரிசோதனைகளின் உருவகப்படுத்தப்பட்ட சூழல்) என்று பெயரிடப்பட்ட இந்தத் தளம் பலவிதமான பட்டறிவுகளைப் பரிசோதிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டமானது டாக்டர் மரியா ஒர்லோஸ்கா மற்றும் டாக்டர் ஷாஜியா சாதிக் ஆகியோருடைய வழிகாட்டுதலின்கீழ் நிறைவுசெய்யப்பட்டது. அவருடைய ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, “கம்பியில்லாத உணர்வி வலைப்பின்னல்களில் கேள்விப் பரவலுக்கான வடிவமைப்புக் கருத்தாய்வுகள்”.

ஆசிரியப் பணி

தொகு

தன்னுடைய முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிய கார்க்கி, டிசம்பர் 2007ல் CEG அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் மூத்த ஆராய்ச்சி நிபுணராகப் பணியாற்றினார், ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான மாணவர் திட்டங்கள் பலவற்றைக் கையண்டார். இவற்றுடன், அவர் முதுநிலைப் படிப்பு மாணவர்களுக்குப் பாடங்களையும் ஆய்வகங்களையும் கையாண்டார். ஜூலை 2008முதல் ஜூலை 2009வரை அவர் ஒரு திட்ட அறிவியலாளராகவும் பணியாற்றினார், ஆராய்ச்சிக் குழுக்கள், ME & MBA மாணவர்களுடைய திட்டங்களைக் கையாண்டார்.

ஆகஸ்ட் 2009லிருந்து அவர் அங்கு துணைப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவர் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்காக அங்கு சேர்ந்திருந்த கணிணி அறிவியல் மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார், பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கணிமை ஆய்வகத்தையும் ஒருங்கிணைத்தார். அவர் NRI மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஓர் ஆலோசகராகவும் பணியாற்றினார், கணிணி அறிவியல் பொறியியல் கழகத்தின் ஊழியர் காசளராகவும் பணியாற்றினார். அவர் பயிற்றுவித்த சில பாடங்கள்: மேம்பட்ட தரவுத்தளங்கள், பொறியாளர்களுக்கான நெறிமுறைகள், நிரலெழுதுதல் மொழிகளின் கொள்கைகள், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தமிழ்க் கணிமை (PhD மாணவர்களுக்கு).

குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஜூன் 22, 2008ல் கார்க்கி, நந்தினி ஈஸ்வரமூர்த்தியை மணந்தார், இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் அவருடன் படித்தவர் ஆவார். நந்தினி கார்க்கி இப்போது தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கான துணைத் தலைப்புகளை உருவாக்குபவராகப் பணியாற்றுகிறார். 2009ல் இவர்களுக்கு ஹைக்கூ கார்க்கி என்ற மகன் பிறந்தார்.

திரைத்துறை அனுபவம்

தொகு

அறிமுகம்

தொகு

கார்க்கி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் [[தமிழகத் திரைப்படத்துறை |தமிழ்த் திரைத்துறையிலும்]] தன்னுடைய பணியைத் தொடங்கினார், அவருடைய அறிமுகம், இயக்குநர் ஷங்கருடைய மாபெரும் படைப்பாகிய எந்திரன் (2010) என்ற அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் தொடங்கியது. கார்க்கி தான் எழுதிய சில பாடல்களுடன் இந்த இயக்குநரை 2008ல் அணுகியிருந்தார், இந்தத் திரைப்படத்தின் வசனங்களில் உதவுவதற்காக அவர் அழைக்கப்பட்டார், குறிப்பாக, தொழில்நுட்பச் சொற்கள் சார்ந்த குறிப்புகளை அவர் வழங்கினார். அநேகமாக இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் மூன்றுவகையான வசனங்கள் எழுதப்பட்டதாக குறிப்பிட்டார் அவர்; இவற்றில் ஒரு வசனம் ஷங்கரால் எழுதப்பட்டது, இன்னொரு வசனம் கார்க்கியால் எழுதப்பட்டது, மூன்றாவது வசனம் மறைந்த சுஜாதா ரங்கராஜனால் எழுதப்பட்டது, இந்த இயக்குநருடன் அடிக்கடி இணைந்து பணியாற்றியுள்ள சுஜாதா, இந்தத் திரைப்படத்தின் முன்தயாரிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் இறந்துவிட்டார். ஷங்கர் மூன்று வரைவுகளையும் வாசித்தார், அவற்றில் எது நன்றாகப் பொருந்தியதோ, அதை பயன்படுத்திக்கொண்டார். இந்தத் திரைப்படத்தின் உச்சக்காட்சியில்மட்டும்தான் பல வசனகர்த்தாக்கள் சேர்ந்து பணிபுரியவில்லை, அக்காட்சிக்கான வசனங்களை கார்க்கிமட்டுமே எழுதினார்.

வசனங்களை எழுதியதுடன் இந்தத் திரைப்படத்தில் கார்க்கி இரண்டு பாடல்களையும் எழுதினார் : “இரும்பிலே ஒரு இருதயம்” (அவருடைய திரைப்படப் பணி வாழ்க்கையின் முதல் பாடல், இதனை A.R. ரஹ்மான் பகுதியளவு பாடியிருந்தார்) மற்றும் “பூம் பூம் ரோபோ டா”. அதேசமயம், கண்டேன் காதலை (2009) என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ”ஓடோடிப் போறேன்” என்ற பாடல்தான் அவருடைய முதல் வெளியீடானது. எந்திரன் திரைப்படத்தில் கார்க்கி ஆற்றிய பணிக்காக, 2011 விஜய் விருதுகளில் ”இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு” என்கிற கெளரவத்தைப் பெற்றார் கார்க்கி.

பாடலாசிரியர்

தொகு

எந்திரன் திரைப்படத்தில் அவருடைய பணியைத் தொடர்ந்து, தமிழ்த் திரைத்துறையில் மிகவும் நாடப்படுகின்ற பாடலாசிரியர்களில் ஒருவரானார் கார்க்கி, அவர் பல இசையமைப்பாளர்களுடன் திரும்பத் திரும்ப பணியாற்றினார்: A.R ரஹ்மான், ஹாரிஸ் ஜயராஜ், D.இமான், M.M. கீரவாணி, யுவன் ஷங்கர் ராஜா, S. தமன், சஞ்சய் லீலா பன்சாலி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சாம் CS. தன்னுடைய தாய்மொழியான தமிழுடன், வேறு பல மொழிகளிலும் பாடல் எழுதிப் புகழ் பெற்றுள்ளார் கார்க்கி; அவற்றில் சில: நண்பன் திரைப்படத்திலிருந்து ”அஸ்க்கு லஸ்க்கா” (இதில் 16 வெவ்வேறு மொழிகள் இடம் பெற்றிருந்தன), ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் "தி ரைஸ் ஆஃப் டாமோ” (மாண்டரின் மொழியில் எழுதப்பட்டது). நூற்றெண்பது திரைப்படத்திலிருந்து “கன்டினியூவா” (போர்ச்சுகீசு மொழியில்). அவருடைய பணியின் இன்னொரு முக்கியமான அம்சம், அன்றாடப் பேச்சில் இயல்பாக இடம்பெறாத அபூர்வமான தமிழ்ச் சொற்களைத் தன்னுடைய பாடல் வரிகளில் நுழைப்பது, எடுத்துக்காட்டாக கோ திரைப்படத்தில் “குவியமில்லாக் காட்சிப் பேழை” மற்றும் திரைப்படத்தில் “பனிக்கூழ்”. தமிழ்த் திரைப்பட உலகின் முதல் மாலை மாற்றுப் பாடலையும் அவர் எழுதினார், இது விநோதன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. 2018ம் ஆண்டின் நிறைவில் அவர் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

கார்க்கியின் மிகப்பிரபலமான பாடல்களில் சில: “இரும்பிலே ஒரு இருதயம்” (எந்திரன்), “என்னமோ ஏதோ” (கோ), ”நீ கூறினால்” (நூற்றெண்பது), “அஸ்க்கு லஸ்க்கா” (நண்பன்), ”கூகுள் கூகுள்” (துப்பாக்கி), ”எலே கீச்சான்” (கடல்), “ஒசாக்கா” (வணக்கம் சென்னை), “செல்ஃபி புள்ள” (கத்தி), ”பூக்களே சற்று ஓய்வெடுங்கள்” (), “மெய் நிகரா” (24), “அழகியே” (காற்று வெளியிடை), “எந்திர லோகத்துச் சுந்தரியே” (2.0) மற்றும் “குறும்பா” (டிக் டிக் டிக்).

வசனகர்த்தா

தொகு

எந்திரன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருடைய நண்பன் திரைப்படத்திலும் கார்க்கி அவருடன் வசனகர்த்தாவாக இணைந்து பணியாற்றினார். ஹிந்தியில் பெரும் வெற்றியடைந்த 3 இடியட்ஸ் திரைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் அவர் கல்லூரி வாழ்க்கையைச் சற்று வித்தியாசமாகம் காட்டுவதற்காக வசனங்களில் ஒரு புதுமையை நுழைத்தார். 2.0 (எந்திரன் திரைப்படத்தின் அடுத்த பகுதி) படத்திலும் அவர் ஷங்கருடன் தொழில்நுட்ப ஆலோசகராக இணைந்து பணியாற்றினார், இது இந்தியத் திரைப்படங்களிலேயே மிகவும் அதிகப் பொருட்செலவில் தயாரானதாகும்.

தெலுங்கு இயக்குநர் S.S. ராஜமெளலியுடைய இரு பகுதிப் பிரமாண்டத் திரைப்படமாகிய பாகுபலியிலும் கார்க்கி அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார், அதற்காக அவர் மிகுந்த பாராட்டைப் பெற்றார், இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி, தென்னிந்தியாவிலேயே மிக அதிக லாபம் சம்பாதித்த ஒரு திரைப்படமாகும், அடுத்து வரவிருக்கும் RRR திரைப்படத்திலும் அவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். வசன எழுத்தாளராக அவருடைய பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: கோகுலின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வெங்கட் பிரபுவின் மாசு என்கிற மாசிலாமணி மற்றும் நாக் அஷ்வினின் நடிகையர் திலகம் (புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்திரியின் வாழ்க்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம்).

மொழி நிபுணர்

தொகு

பாகுபலி வரிசைக்காகக் கார்க்கி “கிளிக்கி” என்ற மொழியை உருவாக்கினார், திரைப்படத்தில் காலகேயா பழங்குடியினர் இந்த மொழியைப் பேசுகிறார்கள். கார்க்கி ஆஸ்திரேலியாவில் இருந்தபோது இந்த மொழி அவருக்குள் உருவானது, அங்கு அவர் பகுதி நேரமாகக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்பவராகவும் பணியாற்றினார், குழந்தைகளோடு ஒரு புதிய மொழியை உருவாக்கும் நோக்கத்துக்காக “க்ளிக்” என்ற மொழியை உருவாக்கினார். அச்சத்தை உண்டாக்குகிற ஒரு மொழியை உருவாக்கவேண்டும் என்பதற்காக இயக்குநர் ராஜமெளலி இவரை அணுகியபோது, தானே ஒரு மொழியை உருவாக்கினார் கார்க்கி. ”க்ளிக்” மொழியை ஓர் அடிப்படையாகக் கொண்டு, சுமார் 750 சொற்கள் மற்றும் 40 இலக்கண முறைகளைச் சேர்த்து உருவாக்கிய இந்தப் புதிய மொழிக்கு “கிளிக்கி” என்று பெயர் சூட்டினார் கார்க்கி. இந்த மொழியில் ‘இச்’ மற்றும் ‘இஸ்க்’ போன்ற சொல்ரீதியிலான க்ளிக்குகள் காலம் மற்றும் பன்மையைக் காட்டும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்ச் சொற்களுக்கு ஒலியியல் திருப்புதல்களும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன (’மின்’ என்பது ”நான்” என்பதற்கு எதிர்ச் சொல்லானது, ‘நிம்’ என்பது “நீ” என்பதற்கு எதிர்ச் சொல்லானது). இந்த மொழியில் வருத்தத்தைக் குறிப்பதற்கு எந்தச் சொற்களும் இல்லை, ஏனெனில், திரைப்படத்தில் இந்த மொழியைப் பேசும் பாத்திரங்கள் வருத்தம் என்கிற பண்பை வெளிப்படுத்துவதில்லை.

பெரு வெற்றியடைந்த திரைப்படங்கள்

தொகு

பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகத் தன்னுடைய முதல் பத்தாண்டில் நவீன இந்தியத் திரைப்படத்துறையின் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றியிருக்கிறார் கார்க்கி, எடுத்துக்காட்டாக: எந்திரன் (2010), கோ (2011), நான் ஈ (2012), துப்பாக்கி (2012), கத்தி (2014), (2015), பாஜிராவ் மஸ்தானி (2015), பாகுபலி வரிசை (2015; 2017), நடிகையர் திலகம் (திரைப்படம்)|நடிகையர் திலகம்]] (2018), பத்மாவத் (2018) மற்றும் 2.0 (2018).

பிற முயற்சிகள்

தொகு

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்

தொகு

2013 ஜனவரியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கார்க்கி தன்னுடைய ஆசிரியப் பணியைத் துறந்த பின்னர், தன்னுடைய மனைவி நந்தினி கார்க்கியுடன் இணைந்து கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் (KaReFo), என்கிற அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். லாப நோக்கில்லாத கல்வி ஆராய்ச்சி நிறுவனமான இது, மொழிக் கணிமை மற்றும் மொழிக் கல்வியில் கவனம் செலுத்துகிறது. அவர் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவராகப் பணியாற்றுகிறார்.

KaReFo உருவாக்கியுள்ள சில திட்டங்கள்: “சொல்” (இணையத்தில் ஒரு தமிழ்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி), “பிரிபொறி” (தமிழுக்கான ஓர் உருவவியல் பகுப்பாய்வு மற்றும் கூட்டுச்சொல் பிரிப்பான்) “ஒலிங்கோ” (ஓர் ஒலிபெயர்ப்புக் கருவி), ”பேரி” (தமிழ் ஒலிப்பியலின் அடிப்படையில் சுமார் 9 கோடி ஆண்/பெண் பெயர்களை உருவாக்கும் ஒரு பெயர் உருவாக்கி), “எமோனி” (எதுகை,மோனை போன்றவற்றைக் கண்டறியும் கருவி), “குறள்” (திருக்குறளுக்கான ஓர் இணையத்தளம்), “எண்” (எண்களை எழுத்துகளாக மாற்றும் ஒரு கருவி), “பாடல்” (பாடல் வரிகளை ஆராய்வதற்கும் வாசிப்பதற்கும் தமிழ்ப் பாடல் வரிகளைத் தொகுத்துத் தரும் ஓர் இணையத்தளம்) மற்றும் ”ஆடுகளம்” (சொல் விளையாட்டுகளுக்கான ஓர் இணையத்தளம்).

மெல்லினம் கல்வி நிறுவனம்

தொகு

2008 நவம்பரில் கார்க்கி மெல்லினம் கல்வி நிறுவனத்தைத் தோற்றுவித்தார், அதன் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான கல்விக் கருவிகளான புத்தகங்கள், விளையாட்டுகள், போன்றவற்றின் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது, இந்தக் கல்விக் கருவிகள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை அறிமுகப்படுத்துவதையும், குழந்தைகள் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் மற்றும் புதுமைச்சிந்தனைகளை ஆராய்வதற்கான ஆர்வத்தை உண்டாக்குவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் “ஐபாட்டி” என்ற வணிகப்பெயரில் தயாராகின்றன, பாடல் புத்தகங்கள், கதைகள், சொல் விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான சொற்றொடர் விளையாட்டுகள் போன்றவை இந்த வரிசையில் வெளியாகின்றன. இந்நிறுவனம் இப்போது பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இண்டீ இசைக்கான பங்களிப்பு.

டூபாடூ

தொகு

ஏப்ரல் 2016ல் கார்க்கி தன்னுடைய நண்பரான கௌந்தேயாவுடன் இணைந்து டூபாடூ என்ற இணைய இசைத்தளத்தைத் தொடங்கினார், சுதந்தரமான, மற்றும் திரைப்படம் சாராத இசையை முன்னிறுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இணையத்தளம் இது. அவருடைய நோக்கம், திரைப்படங்களுக்காக உருவாக்கப்படாத இசைத்தொகுப்புகளைக் கொண்ட ஒரு பாடல் வங்கியை உருவாக்குவது, இந்த வங்கியைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வழங்குவது, அவர்கள் இதிலிருந்து தங்களுடைய திட்டங்களுக்குப் பொருந்துகிற பாடல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சுதந்தர இசையை வெளியிடும் ஓர் இசை நிறுவனமாகப் பணியாற்றுகிற டூபாடூ, தமிழ்த் திரைப்படங்களுக்கான பாடல்களை விநியோகிக்கும் ஓர் அமைப்பாகவும் செயல்படுகிறது.

இந்தத் தளத்தில் வெளியிடப்பட்ட முதல் பாடலுக்கு இசையமைத்தவர், M.S விஸ்வநாதன் அவர்கள். இந்தத் தளத்துக்கான உள்ளடக்கங்களை வழங்குவதற்காக, தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இதில் இணைக்கப்பட்டார்கள், இந்தத் தளம் நாள்தோறும் ஒரு பாடலை வெளியிடும் நோக்கத்துடன் செயல்படத்தொடங்கியது.

பிக் FM 92.7 வானொலி நிலையத்தில் பிக் டூபாடூ என்ற நிகழ்ச்சிக்கான வானொலித் தொகுப்பாளராகவும் கார்க்கி பணியாற்றினார். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் மாலை 6மணிமுதல் 9மணிவரை ஒலிபரப்பானது.

டூபாடூவின் இயக்குநராகப் பணியாற்றுகிற அதே நேரத்தில், இந்தத் தளத்துக்காகத் தனிப்பட்ட முறையில் பல பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி, இசைத்துறையின் முன்னணி மற்றும் சுதந்திரமான பல ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், எடுத்துக்காட்டாக ஸ்ரீநிவாஸ், கார்த்திக், அனில் ஸ்ரீனிவாசன், ரிஸ்வான், கார்த்திகேய மூர்த்தி, விஜய் பிரகாஷ், ஆன்டிரியா ஜெர்மியா, அஜ் அலிமிர்ஜக், மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் (இவர் கார்க்கி எழுதிய பாடல்களுக்கான மூன்று இசை ஒளிப்படங்களையும் இயக்கினார், இவற்றில் டொவினொ தாமஸ், திவ்யதர்ஷினி, ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் அதர்வா ஆகிய நடிகர்கள் பங்கேற்றார்கள்). கார்க்கி எழுதிய சில முக்கியமான இண்டீ பாடல்கள்: “உலவிரவு”, “கூவா”, “போதை கோதை”, ”யாவும் இனிதே”, ”ஏதோ ஓர் அறையில்”, ”காதல் தோழி மற்றும் “பெரியார் குத்து”.

அனில் மற்றும் கார்க்கியுடன் ஞாயிற்றுக்கிழமைகள்

தொகு

பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநிவாசனுடன் இணைந்து அனில் மற்றும் கார்க்கியுடன் ஞாயிற்றுக்கிழமைகள் என்கிற இசை சார்ந்த மெய்ம்மை உரையாடல் நிகழ்ச்சியையும் கார்க்கி தொகுத்து வழங்கினார், இது டிசம்பர் 2017ல் தொடங்கி ஏப்ரல் 2018வரை ஜீ தமிழ் HDயில் 13 பகுதிகளாக ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் இசை, மற்ற பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற விருந்தினர்கள் பங்கேற்றார்கள், இசையமைத்தல் மற்றும் நிகழ்த்துதல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில முக்கிய விருந்தினர்கள்: இசையமைப்பாளர்கள் சீன் ரால்டன், G.V பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீநிவாஸ்; இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வசந்த், கெளதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன்; நடிகர்கள் சித்தார்த், RJ பாலாஜி மற்றும் குஷ்பூ; மற்றும் பாடகர்கள் கார்த்திக், ஆன்டிரியா ஜெர்மியா, கானா பாலா மற்றும் சைந்தவி.

ஆர்வங்கள்

தொகு

சிறுவயதிலிருந்தே கார்க்கிக்குப் புகைப்படக் கலையின்மீது பேரார்வம் உண்டு, சிறுவயதிலிருந்து தான் எடுத்த புகைப்படங்களைப் பெரிய தொகுப்பாகச் சேர்த்துவைத்திருக்கிறார். இந்தக் கலையின் நுட்பங்களை அவர் யூடியூப் வழியாகக் கற்றுக்கொண்டார். குறிப்பாக, வழக்கத்துக்கு மாறுபட்ட உணர்வுகளின் ஒளிவுமறைவற்ற கணங்களைக் காட்சிப்படுத்துதலில் அவர் சிறப்புக் கவனம் செலுத்துகிறார், குழந்தைகளைப் புகைப்படமெடுப்பதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். பயணம் செய்வதையும் தன்னுடைய ஒரு மிகப்பெரிய பேரார்வமாக அவர் குறிப்பிடுகிறார், இந்தியாவுக்கு வெளியே, இந்தியாவுக்குள் தமிழ்நாட்டுக்குள் இதற்குமுன் செல்லாத இடங்களுக்குச் செல்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மூன்று பொழுதுபோக்குப் பயணங்களை மேற்கொள்கிறார். அவர் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்துள்ளார், 2018ல் அன்டார்க்டிகாவுக்கும் சென்று வந்துள்ளார். அவருடைய பிற பொழுதுபோக்குச் செயல்பாடுகள், சமைத்தல், ஜாவாவில் நிரல் எழுதுதல் மற்றும் இறகு பந்து விளையாடுதல். அவர் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார், இந்த ஆராய்ச்சிகள் பாடல் வரிகள் சார்ந்தவையாகமட்டும் அமையாமல் தமிழ் தொடர்பான மற்ற தலைப்புகளிலும் அமைந்துள்ளன, ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்.

இயற்றிய பாடல்கள்

தொகு
ஆண்டு படம் பாடல்கள்
2009 கண்டேன் காதலை ஓடோடி போறேன்
இளமை இதோ இதோ அங்கதை அரம்பை,குலுக்கி குலுக்கி,வானம் புதிது & ஹோலோ அமிகோ
2010 எந்திரன் இரும்பிலே ஓர் இதயம் & பூம் பூம் ரோபோ டா
2011 பயணம் நீர்ச்சிறை
குருக்ஷேத்திரம் தீ தீராதே
180 அனைத்துப் பாடல்களும்
கோ என்னமோ ஏதோ & நெற்றிப் பொட்டில்
எங்கேயும் காதல் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
வந்தான் வென்றான் அஞ்சோ ,முடிவில்லா மழையோடு & திறந்தேன் திறந்தேன்(பாதி)
ஏழாம் அறிவு தி ரைஸ் ஆஃப் டேமோ
மெளனகுரு அனாமிகா
2012 நண்பன் எந்தன் கண்முன்னே & அஸ்க் லஸ்கா
காதலில் சொதப்புவது எப்படி தவறுகளை உணர்கிறோம்,அழைப்பாயா அழைப்பாயா & பார்வதி பார்வதி
தடையறத் தாக்க கேளாமளே & காலங்கள்
நான் ஈ அனைத்துப் பாடல்களும்
முகமூடி மாயாவி மாயாவி & வாயமூடி சும்மா இருடா
சுந்தரபாண்டியன் றெக்கை முளைத்தேன்
சாருலதா அனைத்துப் பாடல்களும்
மாற்றான் கால் முளைத்த பூவே
துப்பாக்கி அண்டார்டிகா & கூகுள் கூகுள்
2013 புத்தகம் மனி இஸ் ஸோ ஃப்ன்னி
கடல் ஏலே கீச்சான் & அன்பின் வாசலே
ஒன்பதுல குரு விதவிதமாக‌
சேட்டை அகலாதே அகலாதே & போயும் போயும் இந்த‌
கெளரவம் அனைத்துப் பாடல்களும்
நான் ராஜாவாகப் போகிறேன் ராஜா ராஜா &யாரிவனோ
மாசாணி நான் பாட‌
சொன்னா புரியாது காலியான சாலையில் & கேளு மகனே கேளு
பொன்மாலைப் பொழுது மசாலா சிக்ஸ்,வார்க்கோதுமை & நீ இன்றி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஏன் என்றால் & நீ எங்கே போனாலும்
வணக்க‌ம் சென்னை ஒசக்க ஒசக்க‌ & ஐலேசா ஐலேசா
பாண்டிய நாடு ஃபை ஃபை கலாச்சிஃபை
நவீன சரஸ்வதி சபதம் சாட்டர்டே ஃபீவர்
என்றென்றும் புன்னகை வான் எங்கும் நீ & போதும் போதும்
பிரியாணி பாம் பாம் பேண்ணே
விழா செத்துப்போ
2014 புலிவால் கிச்சு கிச்சு &நேற்றும் பார்ட்டி
ஆஹா கல்யாணம் அனைத்துப் பாடல்களும்
நிமிர்ந்து நில் நெகிழியினில்
விரட்டு போதும் போதும்
கூட்டம் நிகற்புதப் பிணங்கள் & இத்தனை தூரம்
மான் கராத்தே மாஞ்சா போட்டுதான்
அரிமா நம்பி யாரோ யாரவள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஒற்றை தேவதை
சதுரங்க வேட்டை முன்னே என் முன்னே
கதை திரைக்கதை வசனம் இயக்கம் அனைத்துப் பாடல்களும்
வாலிப ராஜா வா மதிவதனா
அமரகாவியம் சரிதானா சரிதானா
நம்பியார் சரோஜா தேவி, இது வரை யாரும், தூங்கும் பெண்ணே
அஞ்சான் பேங் பேங் பேங்
சிகரம் தொடு டக்கு டக்கு, சிகரம் தொடு
மீகாமன் மீகாமன் , ஏன் இங்கு வந்தான்
நாய்கள் ஜாக்கிரதை என் நெஞ்சில், டாகி ஸ்டைல்
ஜீவா ஒரு ரோசா, ஒருத்தி மேலே, எங்கே போனாய், நேற்று நான்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள், ஐலா ஐலா, லேடியோ
கத்தி பாலம், செல்ஃபி புள்ள
கல்கண்டு வீனஸ் விட்டு
பேங் பேங் அனைத்துப் பாடல்களும்
சித்திராம் பெத்துதடி 2 உலா
கப்பல் ஒரு கப் ஆசிட் & காதல் கசாட்டா
இசை புத்தாண்டின் முதல் நாள், அதோ வானிலே நிலா, நீ பொய்யா, இசை வீசி
லிங்கா மோனா கேஸலீனா
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் & ரோபோ ரோமியோ
வை ராஜா வை பச்சை வண்ணப் பூவே & பூக்கமழ் ஓதியர்
நண்பேன்டா என்னை மறுபடி மறுபடி
2015 மூணே மூணு வார்த்தை சயோரே சயோரே
ராஜதந்திரம் ஏன் இந்தப் பார்வைகள்
ரோமியோ ஜூலியட் அடியே அடியே இவளே, ரோமியோ ரோமியோ, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் & கண்கள் திறக்கும்
இனிமே இப்படித்தான் இனிமே இப்படித்தான்
மாசு என்கிற மாசிலாமணி நான் அவள் இல்லை , தெறிக்குது மாஸ் & பிறவி
அவம் காரிருளே, தேவையா, சன சன சன & ஏன் என்னை
யாகாவராயினும் நாகாக்க பப்ரபேம்பேம்
பாகுபலி அனைத்துப் பாடல்களும்
சகலகலா வல்லவன் சதிகாரி, மண்டையும்
சாகசம் தேசி கேர்ள்
வில் அம்பு குறும்படமே
10 எண்றதுக்குள்ள வ்ரூம் வ்ரூம், கானா கானா
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் வெண் மேகங்கள்
கோ 2 கோகிலா
உப்புக் கருவாடு உப்புக் கருவாடு, புது ஒரு கதவு
வேதாளம் (திரைப்படம்) டோன்ட் யு மெஸ் வித் மி
பசங்க 2 சோட்டா பீமா, பூக்களைக் கிள்ளிவந்து
மெய்மறந்தேன் பாராயோ அனைத்துப் பாடல்களும்
இஞ்சி இடுப்பழகி அனைத்துப் பாடல்களும்
பாஜிராவ் மஸ்தானி அனைத்துப் பாடல்களும்
2016 மிருதன் அனைத்துப் பாடல்களும்
பெங்களூர் நாட்கள் அனைத்துப் பாடல்களும்
இது நம்ம ஆளு மாமன் வெய்ட்டிங், கிங்காங்
கணிதன் மார்டன் பொண்ணத்தான்,யெப்பா சப்பா,மையல் மையல்
ஜீரோ வேறெதுவும் நிஜமே இல்லை, இந்தக் காதல் இல்லையேல்
தோழா பேபி ஓடாதே, ஐஃபிள் மேல, தோழா, நகரும், எனதுயிரே
மனிதன் கொண்டாட்டம், முன் செல்லடா
இருபத்து நான்கு மெய்நிகரா, நான் உன், ஆராரோ, இருபத்து நான்கு
ரம் ஹோலா அமீகோ, ஹோலா சீனோரிட்டா
மீன்குழம்பும் மண்பானையும் அதே நிலா, ஹே புத்ரஜெயா பூவே, வாகோ வ்வ்வ்ரா
அச்சம் என்பது மடமையடா இது நாள் வரையில்
தில்லுக்கு துட்டு காணாமல் போன காதல்
முடிஞ்சா இவனப் புடி அனைத்துப் பாடல்களும்
இருமுகன் கண்ணை விட்டு, ஹெலேனா
போங்கு தங்கமே
சென்னை 600028 2 ஹவுஸ் பார்ட்டி
பாம்பு சட்டை நீயும் நானும்
போகன் வாராய் வாராய், ஸ்போக்கி போகன் தீம், கூடுவிட்டு கூடு
கோடிட்ட இடங்களை நிரப்புக நா ரீ நா
2017 விநோதன் பாலின்ட்ரோம் சாங்
காற்று வெளியிடை அழகியே
கடுகு கடுகளவு, நிலவெது கரையெது
ஒரு முகத்திரை மாயா மாயா நேற்று என்
7 நாட்கள் அனைத்துப் பாடல்களும்
பாகுபலி 2 அனைத்துப் பாடல்களும்
வனமகன் அனைத்துப் பாடல்களும்
பிருந்தாவனம் அனைத்துப் பாடல்களும்
சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் அனைத்துப் பாடல்களும்
பண்டிகை சில வாரமா
நிபுணன் காக்கிச் சட்டைக்கு மறுபக்கம்
சத்யா யௌவனா, சங்கு, யவ்வனா - தாயின் குரல்
ஸ்பைடர் அனைத்துப் பாடல்களும்
அபியும் அனுவும் அனைத்துப் பாடல்களும்
நெஞ்சில் துணிவிருந்தால் சோபியா சோபியா
இப்படை வெல்லும் குலேபா வா
செய் நடிகா நடிகா, நடிகா நடிகா - விடுதலை
வேலைக்காரன் இதயனே
சொல்லிவிடவா சொல்லிவிடவா, உயிரே
2018 பாஸ்கர் ஒரு ரஸ்கல் இப்போது ஏன் இந்த காதல்
பாஸ்கர் ஒரு ரஸ்கல் இப்போது ஏன் இந்த காதல்
கீ ராஜா பாட்டு
டிக் டிக் டிக் அனைத்துப் பாடல்களும்
பத்மாவத் அனைத்துப் பாடல்களும்
தியா அனைத்துப் பாடல்களும்
2.0 ராஜாளி, எந்திர லோகத்து சுந்தரியே
நடிகையர் திலகம் அனைத்துப் பாடல்களும்
கஜினிகாந்த் ஹோலா ஹோலா
கோலிசோடா 2 கண்ணம்மா ரெப்ரைஸ்
லக்‌ஷ்மி அனைத்துப் பாடல்களும்
தமிழ் படம் 2.0 கலவரமே
பியார் பிரேமா காதல் சர்ப்ரைஸ் மி
வஞ்சகர் உலகம் தீயாழினி, கண்ணாடி நெஞ்சன்
நோட்டா அனைத்துப் பாடல்களும்
சண்டக்கோழி 2 ஆலாலா
ஓம் அன்புள்ள காதலா, பேபி
காற்றின் மொழி அனைத்துப் பாடல்களும்
சிலுக்குவார்பட்டி சிங்கம் அனைத்துப் பாடல்களும்
சர்வம் தாளமாயம் சர்வம் தாளமாயம், வரலாமா
சீதக்காதி அவன்
தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் அனைத்துப் பாடல்களும்
2019 காஞ்சனா 3 காதல் ஒரு விழியில்,கேட்ட பய சார் காலி
மணிகர்னிகா அனைத்துப் பாடல்களும்
தடம் இணையே,விதி நதியே
சத்ரு காதலிக்க இங்கு நேரமில்லை
ஐரா காரிகா
ராஜா பீமா தூயா, கணேசா
தும்பா புதுசாட்டம்
வெள்ளை பூக்கள் அனைத்துப் பாடல்களும்
ஹவுஸ் ஓனர் நயனமே நயனமே,சாயாமல் சாய்கின்ற
தேவி 2 லவ் லவ் மி
பக்கிரி அனைத்துப் பாடல்களும்
அலாதின் அனைத்துப் பாடல்களும்
பொன் மாணிக்கவேல் உதிரா உதிரா
தி லயன் கிங் (2019 திரைப்படம்) அனைத்துப் பாடல்களும்
சாகோ காதல் சைக்கோ,மழையும் தீயும்,உண்மை எது பொய் எது
என்னை நோக்கி பாயும் தோட்டா ஹே நிஜமே,போய் வரவா
சங்கத்தமிழன் அழகு அழகு,மாறாத
சைரா அனைத்துப் பாடல்களும்
வார் (2019 film) சலங்கைகள், ஜெய் ஜெய் சிவ் சங்கரா
தனுசு ராசி நேயர்களே யாரு மேல

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு

ஆராய்ச்சி வெளியீடுகள்

தொகு
  • அனிதா நரசிம்மன், ஆர்த்தி ஆனந்தன், மதன் கார்க்கி, புதையல்: தமிழ்ச் சொற்களுக்கான சிக்கலறை அடிப்படையிலான ஒரு புதையல் வேட்டை விளையாட்டு, ICLL 2018 : 20 வது சர்வதேச மொழிக் கற்றல் கருத்தரங்கம், மும்பை, பிப்ரவரி 2018.
  • அனிதா நரசிம்மன், ஆர்த்தி ஆனந்தன், மதன் கார்க்கி, சுபலலிதா CN, பொருள்: தமிழ்க் காட்சி அட்டை விளையாட்டு ஒன்றுக்கான தெரிவு உருவாக்குதல் மற்றும் தேர்ந்தெடுத்தல் மற்றும் மதிப்பிடல் வழிமுறைகள், ICLL 2018: 20 வது சர்வதேச மொழிக் கற்றல் கருத்தரங்கம், மும்பை, பிப்ரவரி 2018.
  • ராஜபாண்டியன் C, அனிதா நரசிம்மன், ஆர்த்தி ஆனந்தன், மதன் கார்க்கி, சொல்லைக் கணிக்கும் விளையாட்டுக்கான எழுத்துகளை அகற்றுதல் வழிமுறை மற்றும் மதிப்பிடல் மாதிரி: சொர்கௌ, ICLL 2018 : 20 வது சர்வதேச மொழிக் கற்றல் கருத்தரங்கம், மும்பை, பிப்ரவரி 2018.
  • சூரியா M, கார்த்திகேயன் S, மதன் கார்க்கி, கணபதி V, பாடல் வரிக் கூடை: பாடல் வரிகளில் தமிழ்ச் சொற்களுடைய சந்தைக் கூடை ஆராய்ச்சி, தூய மற்றும் பயன்படுத்தப்பட்ட கணக்குக்கான சர்வதேசச் சஞ்சிகை, தொகுதி:115 எண்.8, 2017. இளஞ்செழியன் K, தமிழ்ச் செல்வி E, ரேவதி N, சாந்தி G P, ஷிரீன் S, மதன் கார்க்கி, உவமை உருவாக்கம், 13வது சர்வதேசத் தமிழ் இணையக் கருத்தரங்கம், புதுச்சேரி, செப்டம்பர்-2014.
  • இளஞ்செழியன் K, தமிழ் செல்வி E, சூர்யா.M, கார்த்திகேயன்.S, மதன் கார்க்கி.V, தமிழ் எழுத்திலிருந்து பேச்சுக்கான ஒரு குறைந்தபட்ச-அதிகபட்ச அசைக் கச்சிதமாக்கல் முறை, ICON-2013, 10வது சர்வதேச இயற்கை மொழிச் செயல்முறைப்படுத்தல் கருத்தரங்கம், C-DAC நொய்டா, டிசம்பர்-2013.
  • கார்த்திகேயன்.S, நந்தினி கார்க்கி, இளஞ்செழியன்.K, ராஜபாண்டியன்.C, மதன் கார்க்கி.V, தமிழ்ச் சொற்களுக்கான ஒரு மூன்று நிலை வகை பிரிப்பான், 12வது இணையச் சர்வதேசக் கருத்தரங்கம், மலேசியா, ஆகஸ்ட்-2013.
  • கார்த்திகேயன்.S, இளஞ்செழியன்.K, ராஜபாண்டியன்.C, மதன் கார்க்கி.V, தமிழ்ப் பாடல் வரித் தேடுதல் இயந்திரமாகிய "பாடல்”க்கான பாடல் வரிப் பொருள் மற்றும் இட அட்டவணைகள், 12வது சர்வதேசத் தமிழ் இணையக் கருத்தரங்கம், மலேசியா, ஆகஸ்ட்-2013.
  • இளஞ்செழியன் K, தமிழ் செல்வி E, கார்த்திகேயன் S, ராஜபாண்டியன் C, மதன் கார்க்கி V, தமிழ்ப் பாடல் வரிகளுக்கான மதிப்பிடல் மாதிரிகள், 12வது சர்வதேசத் தமிழ் இணையக் கருத்தரங்கம், மலேசியா, ஆகஸ்ட்-2013.
  • இளஞ்செழியன் K, கார்த்திகேயன்.S, ராஜபாண்டியன்.C, மதன் கார்க்கி.V ஒலிங்கோ – தமிழுக்கான ஓர் ஒலிபெயர்ப்புத்தரம், 12வது சர்வதேசத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா ஆகஸ்ட் 2013.
  • ராஜபாண்டியன்.C, நந்தினி கார்க்கி.K, கார்த்திகேயன்.S, மதன் கார்க்கி.V, பாடல் வரிகளைக் காட்சிப்படுத்துதல், 12வது சர்வதேசத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா, ஆகஸ்ட் 2013.
  • ராஜ பாண்டியன்.C, இளஞ்செழியன்.K, கார்த்திகேயன்.S, மதன் கார்க்கி.V, பேரி: தமிழ்ப் பெயர் உருவாக்க வழிமுறையை மேம்படுத்துதல், 12வது சர்வதேசத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா, ஆகஸ்ட் 2013.
  • பாலாஜி J, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி, மதன் கார்க்கி, UNL பிரதிநிதித்துவப்படுத்துதலைப் பயன்படுத்தி தமிழ்ச் சொல் உணர்வுத் தெளிவின்மையை அகற்றுதல்பற்றி, இயற்கை மொழிச் செயல்முறைப்படுத்துதல்பற்றிய 9வது சர்வதேச மாநாடு, டிசம்பர் - 2011, சென்னை, இந்தியா.
  • உமா மகேஸ்வரி E, கார்த்திகா ரங்கநாதன், T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி, மதன் கார்க்கி, கூட்டு, எண் மற்றும் பேச்சு வழக்குச் சொல் கையாளலைப் பயன்படுத்தி உருவவியல் பகுப்பாய்வானை மேம்படுத்துதல், இயற்கை மொழிச் செயல்முறைப்படுத்துதலுக்கான 9வது சர்வதேச மாநாடு, டிசம்பர் – 2011, சென்னை, இந்தியா.
  • பாலாஜி J, கீதா T V, R. பார்த்தசாரதி, மதன் கார்க்கி, சர்வதேச வலைப்பின்னலாக்கல் மொழியைப் பயன்படுத்தித் தமிழில் அந்தாதித் தொடையைக் கண்டறிதல், செயற்கை அறிவுக்கான 5வது இந்தியச் சர்வதேசக் கருத்தரங்கம் (IICAI-2011), சென்னை, இந்தியா.
  • J.H. ராஜு J., I.ரேகா P.,நந்தவி K.K., மதன் கார்க்கி, ஒரு கிரிக்கெட் போட்டியின் தமிழ்ச் சுருக்கத்தை உருவாக்குவதற்கான சுவைத்தன்மை மாதிரியாக்கம் மற்றும் மனிதத்தன்மை மதிப்பீடு, செயற்கை அறிவுக்கான 5வது இந்தியச் சர்வதேசக் கருத்தரங்கம், IICAI-2011, பெங்களூரு, இந்தியா.
  • G. பியூலா S E, மதன் கார்க்கி, K. ரங்கநாதன், சூரியா M, தமிழ்ப் பாடல் வரிகளுக்கான இனிமை மதிப்பீட்டு மாதிரிகள், செயற்கை அறிவுக்கான 5வது இந்தியச் சர்வதேசக் கருத்தரங்கம், IICAI-2011, பெங்களூர், இந்தியா. ஜெய் ஹரி R, இந்து ரேகா, நந்தவி, மதன் கார்க்கி, ஒரு கிரிக்கெட் போட்டிக்கான தமிழ்ச் சுருக்க உருவாக்கம், தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • கிருபா B, கீதா T.V, ரஞ்சனி P, மதன் கார்க்கி, நரம்பு வலைப்பின்னலைப் பயன்படுத்தித் தமிழ் உரையிலிருந்து உணர்வுகளைக் கண்டறிதல்பற்றி, தமிழ் இணைய மாநாடு, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA. சூரியா M, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, லாலலா பாடல் வரி ஆராய்ச்சி மற்றும் உருவாக்கக் கட்டமைப்புக்கான சிறப்புக் குறியீடுகள், தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • சுபலலிதா C.N, E.உமா மகேஸ்வரி T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, வார்ப்புரு அடிப்படையிலான பன்மொழிச் சுருக்க உருவாக்கம் 2011, தமிழ் இணைய மாநாடு 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • கார்த்திகா ரங்கநாதன், T.V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, பாடல் வரிகளைத் தோண்டுதல்: சந்தம், மற்றும் கருத்து உடனமைதல் பகுப்பாய்வு, தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • இளஞ்செழியன்.K, கார்த்திகேயன் S, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, தமிழ்ச் சொல் விளையாட்டுகளுக்கான புகழ் அடிப்படையிலான மதிப்பீட்டு மாதிரி, தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • இளஞ்செழியன்.K, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, குறளகம், திருக்குறளுக்கான கருத்து உறவு அடிப்படையிலான தேடுதல் கட்டமைப்பு, தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • N.M..ரேவதி, G.P.சாந்தி, இளஞ்செழியன்.K, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, தமிழ் உரையைச் சுருக்குகின்ற ஒரு செயல்திறன் மிக்க அமைப்பு, தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • இளஞ்செழியன்.K, கார்த்திகேயன் S, T V கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி , அகராதி: ஒரு புதுமையான இணைய அகரமுதலிக் கட்டமைப்பு, தமிழ் இணைய மாநாடு 2011, ஜூன் 2011, ஃபிலடெல்ஃபியா, USA.
  • தம்மநேனி S. மற்றும் மதன் கார்க்கி. முக அலைகள்: 2D – தமிழ் உணர்வு விவரிப்பான்களின் அடிப்படையில் முக உணர்வுகள். உலகச் செவ்வியல் தமிழ்க் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • தமிழரசன் மற்றும் மதன் கார்க்கி. முக அலைகள்: ஓரு 2D கணினிமூலம் உருவாக்கப்பட்ட முகத்துக்கான உதட்டு ஒத்திசைவிடனான உரையிலிருந்து பேச்சு. உலகச் செவ்வியல் தமிழ்க் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • ராஜு J.H., I.R P மற்றும் மதன் கார்க்கி. நேரடி உரை ஓடைகளில் தமிழ்ப் பயன்பாட்டின் புள்ளிவிவரப் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்துதல். உலகச் செவ்வியல் தமிழ்க் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • மதன் கார்க்கி, T.V. கீதா, மற்றும் R. வர்மன். முக அலைகள்: ஒரு தமிழ் "உரையிலிருந்து வீடியோ” கட்டமைப்பு. உலகச் செவ்வியல் தமிழ்க் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • கீதா, T.V., R.பார்த்தசாரதி, மற்றும் மதன் கார்க்கி. கோர் – கருத்து உறவு அடிப்படையிலான மேம்பட்ட தேடல் இயந்திரத்துக்கான ஒரு கட்டமைப்பு. உலகச் செவ்வியல் தமிழ் மாநாட்டுடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • இளஞ்செழியன், கீதா, T.V., R.பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, மையத்தேடல் கட்டமைப்பு: கருத்து அடிப்படையில் தேடலை விரிவாக்குதல். உலகச் செவ்வியல் தமிழ்க் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • தர்மலிங்கம், S. மற்றும் மதன் கார்க்கி. லாலலா – தமிழ்ப் பாடல் பகுப்பாய்வு மற்றும் உருவாக்கத்துக்கான ஒரு கட்டமைப்பு. உலகச் செவ்வியல் கருத்தரங்குடன் இணைந்து தமிழ் இணையக் கருத்தரங்கில். 2010. கோயம்பத்தூர், இந்தியா.
  • சுப லலிதா, T.V. கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி மற்றும் மதன் கார்க்கி, “CoReX- கருத்து அடிப்படையிலான ஒரு சொற்பொருள் சார்ந்த குறியீட்டாக்க நுட்பம்”, இணைய அறிவு அமைப்புகள் ICWIS09Y, pp 76–84 8-10 ஜனவரி 2009, சென்னை, இந்தியா.
  • மதன் கார்க்கி வைரமுத்து, சுதர்சனன் நேசமணி, மரியா E. ஒர்லோஸ்கா மற்றும் ஷாஜியா W.சாதிக், உணரி வலைப்பின்னல்களில் விசாரணைக் கேள்விகள், 9வது ஆசிய பசிஃபிக் இணையக் கருத்தரங்கம், இணையக் காலகட்டத் தகவல் மேலாண்மைக்கான 8வது சர்வதேசக் கருத்தரங்கம், DBMAN 2007, APஇணையம்/WIAM 2007 உடன் இணைந்து, வலைப்பின்னல்களில் தரவுத்தர மேலாண்மை மற்றும் பயன்படுத்துதலுக்கான பயிற்சிப் பட்டறை
  • சுதர்சனன் நேசமணி, மதன் கார்க்கி வைரமுத்து மற்றும் மரியா E. ஒர்லாஸ்கா, உணரி வலைப்பின்னல்களில் பல நகர்வுத்திறன் சேரிடங்களின் கடந்து வருதல்பற்றி, தகவல் தொடர்புக்கான 14வது IEEE சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் தகவல் தொடர்புபற்றிய IEEE மலேசிய சர்வதேசக் கருத்தரங்கம், ICT– MICC 2007
  • சுதர்சனன் நேசமணி, மதன் கார்க்கி வைரமுத்து, மரியா E. ஒர்லாஸ்கா மற்றும் ஷாஜியா W. சாதிக், நகர்ப்புற நீர்ப் பகுத்தளிப்புக் கண்காணிப்புக்கான உணரி வலைப்பின்னல் பிரிவாக்கம்பற்றி, 8வது ஆசிய பசிஃபிக் இணையக் கருத்தரங்கின் நடவடிக்கைகள், மின் நீருக்கான சிறப்பு நிகழ்வுகள், pp 974 – 985, APஇணையம் 2006, ஜனவரி 16-18, ஹர்பின், சீனா.
  • சுதர்சனன் நேசமணி, மதன் கார்க்கி வைரமுத்து மற்றும் மரியா E. ஒர்லாஸ்கா, ஒரு கம்பியில்லாத உணரி வலைப்பின்னலில் ஓர் அளவிடும் நகரும் சேரிடத்தின் சிறந்த வழி பற்றி, வலைப்பின்னலாக்கப்பட்ட உணரி அமைப்புகளுக்கான நான்காவது சர்வதேசக் கருத்தரங்கம், INSS 2007
  • மதன் கார்க்கி வைரமுத்து, சுதர்சனன் நேசமணி, மரியா E.ஒர்லாஸ்கா மற்றும் ஷாஜியா W. சாதிக், தொலை அளப்பியலுக்கான கம்பியில்லா உணரி வலைப்பின்னல்களின் வடிவமைப்புப் பிரச்னைகளைப்பற்றி, வலைப்பின்னல் அடிப்படையிலான தகவல் அமைப்புகளுக்கான 8வது சர்வதேசப் பயிற்சிப் பட்டறையின் நடவடிக்கைகள் pp 138–144, NBiS 2005, தரவுத்தளம் மற்றும் நிபுணர் அமைப்புப் பயன்பாடுகளுக்கான 16வது சர்வதேசக் கருத்தரங்குடன் இணைந்து, DEXA 2005, ஆகஸ்ட் 22-26, கோபன்ஹாகன், டென்மார்க்.
  • மதன் கார்க்கி வைரமுத்து, சுதர்சனன் நேசமணி, மரியா E. ஒர்லாஸ்கா மற்றும் ஷாஜியா W. சாதிக், தொலை அளப்பியலுக்காக நிறுவப்பட்ட கம்பியில்லா உணரி வலைப்பின்னல்களுக்கான அலைவரிசை ஒதுக்குதல் வியூகம், வலைப்பின்னலாக்கப்பட்ட உணரும் அமைப்புகளுக்கான இரண்டாவது சர்வதேசப் பயிற்சிப் பட்டறையின் நடவடிக்கைகள், pp 18–23, INSS 2005, ஜூன் 27-28, சான் டியாகோ, கலிஃபோர்னியா, USA.

வெளி இணைப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. T. Krithika Reddy (5 May 2011). "Life & Style / Money & Careers : Carry On Karky". The Hindu இம் மூலத்தில் இருந்து 25 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140325021616/http://www.thehindu.com/life-and-style/money-and-careers/article1993594.ece. 
  2. "Karky | Desk | Faq". karky.in. Archived from the original on 2015-02-23.
  3. Limited, Mellinam Education Private. "எம்மைப் பற்றி | About Us". Mellinam Education Private Limited (in ஆங்கிலம்). Archived from the original on 4 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-01-07.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_கார்க்கி&oldid=4101700" இலிருந்து மீள்விக்கப்பட்டது