அரிமா நம்பி

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அரிமா நம்பி 2014-ம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கிய இத்திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படமாகும்.[1] நடிகர் விக்ரம் பிரபு, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக அறிமுகமானார்.[2] ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பில் உருவான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சூன் 2013, 3-ம் தேதியன்று சென்னையில் தொடங்கியது.[3] 2014 சூலை 4 அன்று வெளியான இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.

அரிமா நம்பி
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ஆனந்த் சங்கர்
தயாரிப்புகலைப்புலி எஸ். தாணு
கதைஆனந்த் சங்கர்
இசைசிவமணி
நடிப்புவிக்ரம் பிரபு
பிரியா ஆனந்த்
ஜே. டி. சக்கரவர்த்தி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புபுவன் ஸ்ரீநிவாசன்
கலையகம்வி கிரியேசன்ஸ்
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 4, 2014 (2014-07-04)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்71 (89¢ US)

கதைச்சுருக்கம் தொகு

அர்ஜுன் சென்னையிலுள்ள பிஎம்டபள்யு மகிழுந்தை விற்கும் நிறுவனமொன்றின் வணிகப் பிரிவில் பணிபுரிகின்றான். கல்லூரி மாணவியான அநாமிகாவை ஆர்ட்டு ராக் கபேவில் தன் நண்பர்களுடன் சந்திக்கிறான். பார்த்ததும் காதல் கொள்ளும் அவர்கள் நிறைய வைன் குடிக்கிறார்கள். அர்ஜுன் நிதானம் இழக்காததாலும் இரவு ஆனதாலும் அநாமிகாவை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவள் வீடு வரை சென்று விட தானூர்தியில் செல்கிறான். அவள் வீட்டுக்கு வந்து வோட்கா குடிக்க அழைக்கிறாள். வீட்டில் அவளை இருவர் கடத்திச் செல்கின்றனர். அச்சமயம் குளியலறையில் இருந்த அர்ஜுன் இதைப் பார்த்து விடுகிறான். பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கிறான். அங்கிருந்த துணை ஆய்வாளர் ஆறுமுகம் குற்றம் நடந்த இடத்துக்கு அர்ஜுனுடன் விரைகிறார். வீட்டில் குற்றம் சுவடு இல்லை, அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவியை பார்க்கிறார் வேறு யாரும் அந்நேரத்தில் அங்கு வந்த அறிகுறி அதில் இல்லை.

ஆறுமுகம் சேனல் 24ன் உரிமையாளரான அநாமிகாவின் தந்தையைத் தொடர்பு கொள்கிறார் அவர் தான் கோவாவில் இருந்ததாகவும் தன் மகள் கடத்தப்பட்டது தெரியாது என்றும் சொல்கிறார். ஆறுமுகத்திற்கு ஐயம் வருகிறது அர்ஜுன் பொய் சொல்லவில்லை என்று அறிகிறார். ஆறுமுகமும் அர்ஜுனும் அநாமிகாவின் தந்தை இரகுநாத்தை சந்திக்க அவர் வீட்டுக்கு செல்லும் போது அநாமிகாவைக் கடத்திய இருவரும் இரகுநாத்தை வீட்டில் உள்நுழைவதை பார்க்கின்றனர். மேலும் அவர்களுடன் பெசன்ட் நகர் காவல் நிலைய ஆய்வாளரும் செல்கிறார். அங்கு அவர்கள் இரகுநாத்திடம் மெமரி கார்டு பற்றி மிரட்டி விசாரிக்கின்றனர். அது கிடைத்ததும் அநாமிகா பாதுகாப்பாக வந்துவிடுவாள் என்கின்றனர். இரகுநாத் தன் துனை ஆசிரியரிடம் மூன்று பேர் வருவார்கள் என்றும் அவர்களிடம் கார்டை கொடுக்கும்படி கூறுகிறார். அதன் பின் அவர்கள் இரகுநாத்தைக் கொன்று விடுகிறார்கள். அவர்கள் அர்ஜுன் அங்கு இருப்பதை அறிந்து அவரைத் துரத்துகிறார்கள். ஆறுமுகமும் அர்ஜுனுடன் இணைந்து வண்டியில் தப்பி செல்கிறார். அப்போது பெசன்ட் நகர் காவல் நிலைய ஆய்வாளரை அர்ஜுன் கொன்றுவிடுகிறார். மற்ற இருவரும் தப்பிவிடுகிறார்கள். அச்சண்டையில் ஆறுமுகமும் இறந்து விடுகிறார்.

அர்ஜுன் சேனல் 24 அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு கடத்தல் காரர்கள் இருவரும் கார்டைப் பெற்றுக்கொண்டு வெளியேறுகின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்ததில் அவர்கள் விபச்சார விடுதிக்குச் செல்வதைக் கவனிக்கிறார். அநாமிகா அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அநாமிகாவுடன் தப்பிச் செல்கிறார் அச்சமயம் அவர்களிடம் இருந்த கார்டை எடுத்துக்கொள்கிறார். அக்கார்டில் மத்திய அமைச்சர் ரிசி தேவ் தன் காதலியான திரைப்பட நடிகை மேக்னா சர்மாவைக் கொலை செய்ததையும் அதை அவர்கள் திறமையாக மறைப்பதையும் பார்த்து விடுகிறார்கள். அதை யு டியூபில் ஏற்றும் போது அமைச்சரின் அடியாட்கள் அங்கு வந்து விடுவதால் இவர்களால் அசைபடத்தை யு டியூபில் பதிவேற்றமுடியாமல் போகிறது.

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

T2014 சூலை 4 அன்று வெளியான இத்திரைப்படம் சிறப்பான வசூலை ஈட்டி சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.[4]

விமர்சனங்கள் தொகு

இத்திரைப்படம் சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது.[5]

சான்றுகள் தொகு

  1. "'Arima Nambi' First Look". indiaglitz.com. Archived from the original on 8 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2013.
  2. "Sivamani is the new music director - Tamil Movie News". Indiaglitz.com. 2013-06-05. Archived from the original on 2013-06-08. பார்க்கப்பட்ட நாள் 2013-09-24.
  3. "Vikram Prabhu & Priya Anand come together". Sify.com. 2013-06-03. Archived from the original on 2013-06-08. பார்க்கப்பட்ட நாள் 2013-09-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-07-31.
  5. http://www.ibtimes.co.in/arima-nambi-movie-review-roundup-decent-thriller-603704

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமா_நம்பி&oldid=3730082" இலிருந்து மீள்விக்கப்பட்டது