பாகுபலி 2

இராஜமௌலி இயக்கத்தில் 2017 இல் வெளியான திரைப்படம்

பாகுபலி 2 (Baahubali: The Conclusion), என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய வரலாற்றுத் திரைப்படம் ஆகும். இராஜமௌலி இயக்கிய[5] இத்திரைப்படத்தை ஆந்திராவின் அர்க்கா மீடியா வர்க்சு நிறுவனம் தயாரித்திருந்தது. இது 2015 இல் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், ரானா தக்குபாடி, அனுஷ்க்கா, சத்தியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாகுபலி 2
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்பு
  • ஷோபு
  • பிரசாத்]
திரைக்கதைஇராஜமௌலி
இசைகீரவாணி
நடிப்பு
ஒளிப்பதிவுகே.கே.செந்தில்குமார்
படத்தொகுப்புகோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
கலையகம்ஆர்கா மீடியா ஒர்க்ஸ்
வெளியீடு28 ஏப்ரல் 2017 (2017-04-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
ஆக்கச்செலவு250 கோடி
(US$32.78 மில்லியன்)
[2]
மொத்த வருவாய்1,573 கோடி
(US$206.22 மில்லியன்)
[3][4]

தற்போதைக்கு இந்தியாவின் மிகச்செலவில் தயாரிக்கப்படும் படமாக விளங்கும் பாகுபலி 2, படவெளியீட்டுக்கு முன்பேயே ஐந்து பில்லியன் செலவில் விற்பனையாகிவிட்டது.[6] 2017 ஏப்ரல் 28 அன்று இத்திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது.[7]

தயாரிப்புதொகு

இராஜமௌலியின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள கே. வி. விஜயேந்திர பிரசாத்தே பாகுபலிக்கும் திரைக்கதை எழுதி வருகின்றார். கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பில் ஈடுபட்டு வருவதுடன், சண்டைக்காட்சிகள் பீட்டர் ஹீன் துணையுடன் படமாக்கப்பட்டன. கடந்த 2015 டிசம்பர் 17இல் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க, இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

முன்னோட்ட நிகழ்படம்தொகு

திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்திய முன்னோட்ட நிகழ்படமானது, 2017 மார்ச் 16 அன்று யூடியூப்பில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட அனைத்து முன்னோட்டங்களும் ஏழு மணி நேரத்துக்குள் ஒரு கோடி பார்வைகளைத் தாண்டின.[8]

பாடல் இசைதொகு

பாகுபலி 2
 
இசைத் தட்டு அட்டைப் படம்
இசை
வெளியீடு
ஒலிப்பதிவு2016
இசைப் பாணிதிரைப்பட இசைப்பாடல்
நீளம்18:00 (தமிழ் )
மொழிதமிழ்
தெலுங்கு
இந்தி
இசைத்தட்டு நிறுவனம்
கீரவாணி chronology
'ஓம் நமோ வெங்கடேசாய (தெலுங்கு)'
(2017)
பாகுபலி 2
(2017)

பாகுபலி 2இன் இசை வெளியீடானது 2017 ஏப்ரல் 10 அன்று சென்னையில் இடம்பெற்றது.[9] நடிகர் தனுஷ் இசையை வெளியிட்டு வைத்தார். இதன் தெலுங்குப் பதிப்பின் இசைவெளியீடானது கடந்த மார்ச்சு 29 அன்று இடம்பெற்றது.

தமிழ்ப் பாடற்பட்டியல்[10]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பலே பலே பலே"  மதன் கார்க்கிதலேர் மெகந்தி, கீரவாணி, மௌனிமா 3:21
2. "ஒரேயொரு ஊரில்"  மதன் கார்க்கிசோனி, தீபு 3:25
3. "கண்ணா நீ தூங்கடா"  மதன் கார்க்கிநயனா நாயர் 4:51
4. "வந்தாய் ஐயா"  மதன் கார்க்கிகாலபைரவா 3:30
5. "ஒரு யாகம்"  மதன் கார்க்கிகாலபைரவா 2:53
மொத்த நீளம்:
18:00

மேலும் காணதொகு

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபலி_2&oldid=3348268" இருந்து மீள்விக்கப்பட்டது