ஆண்ட்ரியா ஜெரெமையா

இந்தியத் திரைப்பட நடிகை

ஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார்.[1] இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

ஆண்ட்ரியா ஜெரெமையா
இசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா
பிறப்புஆண்ட்ரியா ஜெரெமையா
திசம்பர் 21, 1985 (1985-12-21) (அகவை 38)
அரக்கோணம், இராணிப்பேட்டை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியா
பணிபின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
2007—தற்போது

வாழ்க்கை தொகு

ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[4] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[4] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[5][6] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[7]

பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு,[3] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[6] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கருவாகக் கொண்டது.[8] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[6] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகஸ்ட் 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[10] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[11]

நடிகையாக தொகு

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 கண்ட நாள் முதல் தமிழ் சிறப்புத் தோற்றம்
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் கல்யானி வெங்கடேஷ் தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள்
2010 ஆயிரத்தில் ஒருவன் லாவன்யா சந்திரமெளலி தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள்
2011 மங்காத்தா சபிதா ப்ரித்விராஜ் தமிழ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 புதிய திருப்பங்கள் தமிழ்
2013 விஸ்வரூபம் அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ்
2014 அரண்மனை மாதவி தமிழ்
2017 தரமணி ஆல்த்தியா ஜான்சன் தமிழ்
2017 துப்பறிவாளன் பிரிதா தமிழ்
2017 அவள் லஷ்மி தமிழ்
2018 விஸ்வரூபம் 2 அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ்
2018 வட சென்னை சந்திரா தமிழ்
2020 மாஸ்டர் வானதி தமிழ்
2021 அரண்மனை 3 ஈஷ்வரி "ராணி" தமிழ்

பின்னணிப் பாடகியாக தொகு

வருடம் பாடல் திரைப்படம் மொழி இசையமைப்பாளர்
2005 கண்ணும் கண்ணும் நோக்கியா அந்நியன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்
2006 வீ ஹேவ் எ ரோமியோ பொமரில்லு தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2006 கற்க கற்க வேட்டையாடு விளையாடு தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்
2006 சர சர ராக்கி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2006 கிலி தேசமுத்துரு தெலுங்கு சக்ரி
2008 ஓஹ் பேபி ஓஹ் பேபி யாரடி நீ மோகினி தமிழ் யுவன் சங்கர் ராஜா
2008 நேனு நீ ராஜா கிங் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2009 அம்மாயிலு அப்பாயிலு கரண்ட் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2010 மாலை நேரம் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2010 ஓஹ் ஈசா
2010 ஏனோ ஏனோ ஆதவன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்
2010 தீராத விளையாட்டு பிள்ளை தீராத விளையாட்டு பிள்ளை தமிழ் யுவன் சங்கர் ராஜா
2010 இது வரை கோவா தமிழ் யுவன் சங்கர் ராஜா
2010 பூக்கள் பூக்கும் மதராசபட்டினம் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2010 தேடியே தேடியே தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்
2010 ஹூ இஸ் த ஹீரோ? மன்மதன் அம்பு தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்
2010 நா பேரே மல்லீஸ்வரி சையி ஆட்டா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2011 எனக்காக உனக்காக காதல் 2 கல்யானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா
2011 நோ மணி நோ ஹனி வானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா
2011 திவாலி தீபானி தாதா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்
2011 காதலிக்க வெடி தமிழ் விஜய் ஆண்டனி[12]
2011 ஒரு முறை முப்பொழுதும் உன் கற்பனைகள் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்[13]
2012 யேலேலோ மெரீனா தமிழ் கிரீஷ்

பின்னணிக் குரல் கொடுப்பவராக தொகு

வருடம் திரைப்படம் பிண்ணனி குரல்
2006 வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜி
2010 ஆடுகளம் டாப்ஸி[14]
2012 நண்பன் இலியானா[15]

குறிப்புகள் தொகு

  1. "Andrea Jeremiah : காஷ்மீர் சென்றுள்ள நடிகை ஆண்ட்ரியா! ஜில் ஜில் போட்டோஸ்."
  2. "Andrea | Tamil Actress Andrea Jeremiah | TSMGO Productions | Interview - Interviews". CineGoer.com. 2011-05-26. Archived from the original on 2011-06-01. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  3. 3.0 3.1 "Glam show is not bad: Andrea Jeremiah". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  4. 4.0 4.1 Chowdhary, Y. Sunitha (2011-05-25). "Andrea tests new waters in Tollywood". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2047642.ece. 
  5. "For Andrea, the show must go on". Chennai, India: The Hindu. 2006-01-18. http://www.hindu.com/2006/01/18/stories/2006011804240200.htm. பார்த்த நாள்: 2008-11-17. 
  6. 6.0 6.1 6.2 "My first break - Andrea Jeremiah". The Hindu (Chennai, India). 2009-06-19. http://www.hindu.com/cp/2009/06/19/stories/2009061950311600.htm. 
  7. "The show just went on...". Chennai, India: The Hindu. 2006-01-23. http://www.hindu.com/mp/2006/01/23/stories/2006012300440100.htm. பார்த்த நாள்: 2008-11-17. 
  8. 8.0 8.1 "Gautham on Pachai Kili Muthucharam - Bollywood Movie News". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  9. "Welcome to". Sify.com. 2007-01-20. Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  10. "Andrea Strikes Back In Style! - Irandam Ulagam - Selvaraghavan - Dhanush - Andrea - Richa - Tamil Movie News". Behindwoods.com. 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  13. http://www.indiaglitz.com/channels/tamil/musicreview/12779.html
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  15. http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/andrea-turns-dubbing-artiste-377

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரியா_ஜெரெமையா&oldid=3542502" இலிருந்து மீள்விக்கப்பட்டது