தரமணி (திரைப்படம்)

ராம் இயக்கத்தில் 2017 இல் வெளியான தமிழ்த்திரைப்பபடம்

தரமணி (Taramani) ராம் இயக்கத்தில், டாக்டர் எல். கோபிநாத், ராம் தயாரிப்பில், ஆண்ட்ரியா,அஞ்சலி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2017 இல் திரையரங்குகளில் வெளியானது.[1][2]

தரமணி
இயக்கம்ராம்
தயாரிப்புடாக்டர் எல். கோபிநாத்
ராம்
கதைராம்
ஜெ. சத்திஷ் குமார்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆண்ட்ரியா
அஞ்சலி
வசந்த் இரவி
அட்ரியன் நைட் ஜெஸ்ட்லி
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புஏ. சிறீகர் பிரசாத்
கலையகம்கட்டமரன் புரடக்சன்ஸ்
ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
விநியோகம்ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடு11ஆகத்து 2017
ஓட்டம்150
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

கதை தொகு

சமூகத்தின் இரு நிலைகளில் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலையும், அதன் விளைவாய் எழும் சிக்கலையும் உலகப் பொருளியல் பார்வையில் சொல்லும் படம்தான் தரமணி.[3] இத்திரைப்படதில் இயக்குநர் ராம் நகர்மயமாக்கம், தொழில்மயமாக்கம், தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்னும் பெயரால் சென்னையின் அழக்கப்பட்ட புற நகரின் இயற்கைச்சூழல், அழிந்து பறவைகளின் புகலிடங்கள், துடுப்பாட்டத்தில் தோற்றால் கூட எல்லைக் கடலில் சுடப்படும் தமிழக மீனவர்கள், ஏழைகளுக்கு தீங்கு விளைவித்த பண மதிப்பிழப்பு, அலைபேசி சார் குற்றங்கள், வணிக நிறுவனத் தலைமைகளின் தீய எண்ணங்கள்... என்று நிகழ்காலத்தில் குரலாக இயக்குநர் ஒலித்துள்ளார்.[4][5]

இசை தொகு

யுவன் சங்கர் ராஜா இப்படத்தின் ஏழு பாடல்களுக்கு இசை, பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார்.[6]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரமணி_(திரைப்படம்)&oldid=3557363" இருந்து மீள்விக்கப்பட்டது