வசந்த் ரவி

தமிழ்த் திரைப்பட நடிகர், மருத்துவர்

வசந்த் குமார் ரவி அல்லது வசந்த் ரவி என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் தமிழ்த் திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வருகிறார். மருத்துவராக இருந்து நடிகரானவர் இவர். [1] இவர் தனது முதல் படமான தரமணியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் வழியாக தமிழ்த் திரையுலகில் முக்கியத்துவம் பெற்றார். இப்படத்தில் நடித்ததற்காக நிறந்த அறிமுக நடிகராக 10 வது விஜய் விருதுகள் மற்றும் ஜியோ 65 வது தென் பிலிம்பேர் விருதுகளிலும் 2018 ஆண்டு பெற்றார். [2] வசந்த் திரைப்பட நடிகராக ஆவதற்கு முன்பு மான்செஸ்டரில் பகுதிநேர மருத்துவராக பணியாற்றினார். [3]

வசந்த் ரவி
பிறப்புஇந்தியா, தமிழ்நாடு, சென்னை
இருப்பிடம்இந்தியா சென்னை
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்வசந்த் குமார் ரவி
பணிநடிகர், மருத்துவர்
செயற்பாட்டுக்
காலம்
2017–தற்போதுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தரமணி
சொந்த ஊர்ஐக்கிய இராச்சியம், மன்செஸ்டர்
விருதுகள்சிறந்த அறிமுக நாயகனுக்கான 10ஆவது விஜய் விருதுகள்
சிறந்த அறிமுக நாயகனுக்கான 65 வது பிலிம்பேர் விருது

திரைப்பட வாழ்க்கை தொகு

கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களுக்காக பரவலாக அறியப்பட்ட திரைப்பட இயக்குனர் ராம் மூலம் இவர் 2013 ஆம் ஆண்டில் தனது முதல் நடிப்பு வாய்ப்பைப் பெற்றார். [4] 2013 ஆம் ஆண்டில் தரமணி படத்தை தயாரிக்க முயற்சியைத் தொடங்கிய ராமிடம் இந்தப் படத்தில் நடிக்க வசந்த் ரவி ஒப்புக் கொண்டார். ஆனால் இதன் தயாரிபில் ஏற்பட்ட தாமதத்தால் 2017 ஆகத்தில் படம் வெளியானது. என்றாலும் இவரது முதல் திரைப்படமான தரமணி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. [5] இவருக்கு திருப்புமுனையாக அமைந்த இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு 2017 ஆனந்த விகடன் சினிமா விருதுகளில் சிறந்த அறிமுக நாயகன் விருது, 2018 ஆம் ஆண்டு விஜய் விருதுகளில் சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது போன்றவற்றை பெற்றார். [6] [7]

தரமணி படத்தில் நடித்ததற்காக 2018 ஆண்டு சூன் 16 இல் 65 வது பிலிம்பேர் விருதுகள் தெற்கு விருதுகளில் இவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. [8] [9] வசந்த் ரவியின் அடுத்தபடத்துக்கு ராக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது. வசந்த் ரவியின் அடுத்த திட்டம் என்று பெயரிடப்பட்டது

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
2017 தரமணி பிரபுநாத் தமிழ் அறிமுக படம்
2019 ராக்கி ராக்கி தமிழ் எதிர்வரும்
2023 ஜெயிலர் மகன் வேடம்

குறிப்புகள் தொகு

  1. . 
  2. . 
  3. . 
  4. . 
  5. . 
  6. . 
  7. . 
  8. . 
  9. . 

வெளி இணைப்புகள் தொகு

  • வசந்த் ரவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்_ரவி&oldid=3778360" இலிருந்து மீள்விக்கப்பட்டது