லிசி ஆண்டனி

இந்திய நடிகை

லிசி ஆண்டனி (Lizzie Antony) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் துணை நடிகையாகப் பணிபுரிகிறார். தங்க மீன்கள் (2013), தரமணி (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [1] திரைப்படங்கள் தவிர, விளம்பரங்கள், குறும்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் லிசி நடித்துள்ளார். [2]

லிசி ஆண்டனி
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி
  • திரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது
அறியப்படுவதுதரமணி
தங்க மீன்கள்
பிள்ளைகள்1

ஒவ்வொரு ஆண்டும் 100 பெண் சாதனையாளர்களுக்காக தி இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA) ஏற்பாடு செய்துள்ள 'The Phenomenal She' என்ற விருதை 2022இல் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை லிசி ஆண்டனி ஆவார். [3]

தொழில் தொகு

புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளி ராம் இயக்கிய தங்க மீன்கள், படத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை ஸ்டெல்லா மிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபிறகு கவனிக்கப்படத்தக்கவராக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்புக்காக விமர்சகர்களும், பார்வையாளர்களும் பாராட்டப்பட்டார். [4] [5] [6]

லிசி சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் பயிற்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். தரமணி படத்தில் இவரது இயல்பான நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது [4] [7] பின்னர் இவர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார்.[8] [9] இப்படங்கள் இவரை தமிழ்ப் படங்களில் அடையாளம் காணக்கூடிய நடிகையாக்கியது. [10] மேலதிக ஊடக சேவையில் வெளியான மேதகு படத்தில் இலங்கையின் முன்னாள் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவாக நடித்தார். [11]

திரைப்படவியல் தொகு

திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம்
2011 தூங்கா நகரம் வட்டாச்சியரின் மனைவி
2012 நாங்க செய்தியாளர்
2013 தங்க மீன்கள் ஸ்டெல்லா மிஸ்
கருப்பம்பட்டி மீனாட்சி
2014 குக்கூ மகிமை
2017 பாம்பு சட்டை
தரமணி காவல் ஆணையரின் மனைவி
2018 பரியேறும் பெருமாள் கல்லூரி பேராசிரியர்
2019 பேரன்பு ஸ்டெல்லா
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் சாருலதா
கே-13 தங்கம்
போதை ஏறி புத்தி மாறி ஜனனியின் அம்மா
இக்லூ மாதங்கி
மிஸ்டர். லோக்கல் கீர்த்தனாவின் வழக்கறிஞர்
நாடோடிகள் 2 சௌமியாவின் அம்மா
2021 மேதகு சிறிமாவோ பண்டாரநாயக்கா
நெற்றிக்கண் சோபியாவின் தாய்
பெண் பாதி ஆடை பாதி அன்னி
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விளையாட்டு பயிற்சித் துறைத் தலைவர்
ரைட்டர் அமுதா
தீர்ப்புகள் விற்கப்படும் மருத்துவர்
2022 சாணி காயிதம் வழக்கறிஞர் ராணி
நட்சத்திரம் நகர்கிறது
கட்டா குஸ்தி வீராவின் அத்தை
கணெக்ட் லிஸி
ராங்கி பிரியா
2023 பொம்மை நாயகி
டி3

வலைத் தொடர் தொகு

ஆண்டு தலைப்பு பாத்திரம் வலை
2019 பிங்கர்டிப் மாதங்கி ஜீ5
போலீஸ் டைரி 2.0
2020 பப்கோவா
2022 பிங்கர்டிப் (பருவம் 2)
விக்டிம் கோமாதா சோனிலைவ்
2023 ஒரு கோடை கொலை மர்மம் ஜீ5

மேற்கோள்கள் தொகு

  1. "Lizzie Antony's elated about the feedback from audience". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
  2. "Eligible குணச்சித்திர நடிகை!". 18 July 2021. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18291&id1=3&issue=20210718. பார்த்த நாள்: 19 July 2021. 
  3. "Being part of good films, not screen time, matters: Lizzie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 April 2023. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  4. 4.0 4.1 Ahamed, Nabil (28 August 2017). "தரமணி'யில் பெண்களின் குரலைப் பேசியுள்ளார் ராம் - நடிகை லிஸி ஆண்டனி". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  5. CR, Sharanya (27 August 2017). "It was my friends who suggested I take up acting: Lizzy Antony". பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  6. Subramanian, Anupama (29 August 2017). "Lissy Antony wants to do meaty roles". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  7. "கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குனர்". IndiaGlitz. 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  8. "Lizzie Antony is on a roll". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
  9. "Ispade Rajavum Idhaya Raniyum Review". India Glitz. 15 March 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  10. "ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் 'தரமணி' லிஸி ஆண்டனி". 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  11. "'மேதகு' தந்த மகிழ்ச்சி". 28 June 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/687072-medhagu-movie.html. பார்த்த நாள்: 19 July 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசி_ஆண்டனி&oldid=3848259" இலிருந்து மீள்விக்கப்பட்டது