நெற்றிக்கண் (2021 திரைப்படம்)
நெற்றிக்கண் (Netrikann) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல் திரைப்படமாகும். இது 2011இல் வெளியான பிளைன்ட் என்ற தென் கொரிய திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். தொடர் கொலையாளியைத் தேடும் ஒரு பார்வையற்ற நடுவண் புலனாய்வுச் செயலக அதிகாரியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.[1] இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரௌடி பிக்சர்ஸ் பதாகையின் கீழ் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.[2], கிராஸ் பிக்சர்ஸ் என்ற பன்னாட்டு திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமும் கே. எஸ் மயில்வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர்.[3] படத்தின் இணைய உரிமையை ஹாட் ஸ்டார் வாங்கியது.[4] இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜ்மல் அமீர் ஒரு வில்லனாக நடிக்கிறார். அதேசமயம், கே. மணிகண்டன், சரன் சக்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[5]
நெற்றிக்கண் | |
---|---|
இயக்கம் | மிலிந்த் ராவ் |
தயாரிப்பு |
|
கதை | மிலிந்த் ராவ் நவின் சுந்தரமூர்த்தி |
இசை | கிரிஷ் கோபாலகிருஷ்ணன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
கலையகம் |
|
விநியோகம் | ஹாட் ஸ்டார் |
வெளியீடு | 13 ஆகத்து 2021 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் |
படத்தின் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கையாண்டுள்ளார். பாடல்களை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். படத்தில் இடம் பெற்ற சித் ஸ்ரீராம் பாடிய 'இதுவும் கடந்து போகும்' பாடல் சூன் 2021இல் வெளியிடப்பட்டது. பாடலின் மறுபதிப்பு செய்யப்பட்ட பதிப்பை பாம்பே ஜெயஸ்ரீ பாடினார்.[6]
வெளியீடு
தொகுபடம் 2021 ஆகஸ்ட் 13 அன்று ஹாட் ஸ்டாரில் [7] வெளியானது.
இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கில் இணைய தளமான ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
வரவேற்பு
தொகுபடத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.[8]
தி வீக் பத்திரிக்கையின் ஆன்சி கே சன்னி இந்த படத்தை "யூகிக்கக்கூடிய பரபரப்பூடும் படம்" என்று விவரித்தார். மேலும் படம் ஒரு சமூக செய்தியை தெரிவிக்க முயன்றதாகவும் கூறினார்.[9]
இருப்பினும், இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸின் பிரபல திரைப்பட விமர்சகர் நிர்மல் நாராயணன் "நயன்தாராவின் நடிப்பு மனதை கவர்ந்தது. ஆனால் படம் கொஞ்சம் நீளமானது. நயன்தாராவின் தனி நடிப்பு இந்தத் திரைப்படத்தைப் பார்க்க போதுமானதாக உள்ளது" என படத்தை பாராட்டி எழுதினார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sekar, Raja (17 September 2019). "Nayanthara to play visually challenged character in Netrikann, remake of 2011 Korean movie Blind". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Vignesh Shivan on Nayanthara's Netrikann: Director Milind's script is an intriguing thriller". India Today. 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Is Nayanthara's new film, Netrikann, a remake of a Korean film?". Cinema Express. 15 September 2019. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Nayanthara starrer 'Netrikann' to release on Disney+ Hotstar". India TV. 21 July 2021. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ Sharma, Anurag (18 November 2020). "'Netrikann' Cast And Everything You Need To Know About It; Take A Look". Republic World. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Watch: First song from Nayanthara's upcoming 'Netrikann' is out". The News Minute. 10 June 2021. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "The trailer of the film Netrikann released two weeks prior to its release". https://www.thehindu.com/entertainment/movies/netrikann-trailer-nayanthara-stars-in-high-stakes-murder-mystery/article35601008.ece.
- ↑ K, Janani (13 August 2021). "Netrikann Movie Review: Nayanthara's crime thriller is bland and illogical". India Today. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
- ↑ Sunny, Ancy K (13 August 2021). "'Netrikann' review: Nayanthara-starrer is a predictable thriller that tries to pass a social message". The Week. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
- ↑ Narayanan, Nirmal (13 August 2021). "Netrikann movie review: Nayanthara's crime thriller is mind-blowing, but little lengthy". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.