கே. மணிகண்டன்
கே.மணிகண்டன் (K. Manikandan) ஓர் இந்திய திரைப்பட எழுத்தாளரும், நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார் .
கே.மணிகண்டன் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | திரைக்கதை ஆசிரியர், நடிகர், இயக்குநர், வானொலி தொகுப்பாளர், வசன எழுத்தாளர், பின்னணிக் கலைஞர். |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | விக்ரம் வேதா, காலா, ஏலே, விசுவாசம், தம்பி, சில்லுக்கருப்பட்டி |
தொழில்
தொகுமணிகண்டன் ஒரு பிரபலமான உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . பின்னர், இவர் ஒரு பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சேர்ந்தார். அதே நேரத்தில் பல படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பின்னணி பேசி வந்தார்.[1]
இவர் பீட்சா II: வில்லா (2013) என்ற படத்துடன் எழுத்தாளராக அறிமுகமானார்.[2] இந்தியா பாகிஸ்தான் (2015) படத்தில் நடிகராக அறிமுகமான இவர், நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் (2016) படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.[1] எம். எசு. பாசுகர், லல்லு ஆகியோர் நடிப்பில் ஸ்ரீ கணேஷ் என்ற இயக்குனரின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் (2017) படத்தில் மணிகண்டன் ஒரு வில்லனாக நடித்தார்.[3] புஷ்கர்-காயத்ரியின் மூன்றாவது இயக்கமான விக்ரம் வேதா (2017) படத்திற்கான வசனங்களை எழுதினார். மேலும் இப்படத்தில் ஒரு காவலர் வேடத்திலும் நடித்தார். 2018 இல், பா. ரஞ்சித் தனது காலா (2018) படத்தில் ஒரு வேடத்தை இவருக்கு அளித்தார்.[1][4][5] இவர், இயக்குநர் சிவாவின் விஸ்வாசம், ஜீது ஜோசப் இயக்கிய தம்பி (2019) ஆகிய படத்தில் உரையாடல் எழுத்தாளராக இருந்தார்.[4][6][7] ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி (2019) என்ற காதல் படத்தில் நிவேதிதா சதீஷுடன் இணைந்து நடித்தார்.[8][9] ஏலே (2021) படத்தில் நடித்ததற்காக மணிகண்டன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'நாரை எழுதும் சுயசரிதம்' (ஆங்கில தலைப்பு: Endless) என்ற சுயாதீன திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார்.[10][11] 'இந்திய சினிமா போட்டி'யின் கீழ் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் (2016) பங்கேற்க இது தேர்வு செய்யப்பட்டது.[12][13][14] 16 வது நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (2016) திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படங்களில் இதுவும் ஒன்றாகும்.[15][16][17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Purushothaman, Kirubhakar (2017-08-02). "A versatile talent in demand". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 2018-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ Prakash, R. S. (November 15, 2013). "Movie review - Pizza 2: Villa". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ Ramanujam, Srinivasa (2017-04-07). "8 Thottakkal: Engaging thriller let down by lengthy sequences" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/8-thottakkal-a-neat-engaging-thriller/article17859130.ece.
- ↑ 4.0 4.1 "'Kaala' actor works as a writer for 'Viswasam' - Tamil News". IndiaGlitz.com. 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Manikandan on Superstar Rajinikanth, Kaala and Vikram Vedha". Behindwoods. 2018-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Ajith wanted Viswasam to be 'sure-shot entertainer', his performance has an added dimension, says director Siva- Entertainment News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2018-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Karthi-Jyotika starrer 'Thambi' is based on a documentary". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ Rao, Subha J. (2019-01-07). "Halitha Shameem opens up on 'Sillu Karuppatti'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/halitha-shameem-about-sillu-karuppatti/article25930426.ece.
- ↑ S, Srivatsan (2019-12-27). "'Sillu Karupatti' movie review: Life is like a box of chocolates" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/reviews/sillu-karupatti-movie-review-life-is-like-a-box-of-chocolates/article30410499.ece.
- ↑ Menon, Vishal (2015-07-25). "The odd couple" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/delhi-ganesh-acts-in-narai-ezhuthum-suyasaritham/article7464505.ece.
- ↑ Rao, Subha J. (2015-07-11). "Delhi Ganesh on staying with the times" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/delhi-ganesh-interview/article7411227.ece.
- ↑ Khajane, Muralidhara (2016-02-03). "Festivals groom future filmmakers" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/festivals-groom-future-filmmakers/article8184899.ece.
- ↑ "'Thithi' To Open The Bangalore International Film Festival, Announces Films In Competition!". Jamuura Blog. 2016-01-07. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Meenakshi Shedde: How movies start". mid-day (in ஆங்கிலம்). 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Tamil Films @ NYIFF 2016. book your tickets immediately! one week to Opening Night!". www.iaac.us. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "NYIFF 2016". www.iaac.us. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.
- ↑ "Umesh Kulkarni's 'Highway' Bags 'Best Film' & 'Best Director' Awards At NYIFF 2016!". Jamuura Blog. 2016-05-18. Archived from the original on 2020-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-02.