காதலும் கடந்து போகும்

நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.[1]

காதலும் கடந்து போகும்
சுவரொட்டி
இயக்கம்நளன் குமாரசாமி
கதைநளன் குமாரசாமி
இசைசந்தோசு நாராயணன்
நடிப்புவிஜய் சேதுபதி
மடோனா செபாசுடியன்
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுதினேசு கிருட்டிணன்
படத்தொகுப்புலியோ சான் பால்
கலையகம்திருக்குமரன் எண்டர்டைன்மண்ட்
விநியோகம்சுடியோசு கிரீன்
அபி அண்ட் அபி பிக்சர்சு
வெளியீடுமார்ச்சு 11, 2016 (2016-03-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

நடிகர் : விஜய் சேதுபதிநடிகை : மடோனா செபஸ்டியான்இயக்குனர் : நலன் குமாரசாமிஇசை : சந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

இஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். எதிர்பாராத விதமாக அவர் வேலை பார்த்த கம்பெனி மூடப்படுகிறது. இதனால் வேலையை இழக்கிறார். வீட்டுக்கு சென்றால் எங்கே தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று எண்ணி சென்னையில் வாடகைக்கு வீடெடுத்து வேறு வேலைத்தேடி வருகிறார்.

மடோனாவின் வீட்டருகே ரவுடி கும்பலிடம் வேலை செய்து வரும் விஜய் சேதுபதி வசிக்கிறார். இவர் பார் ஓனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவருக்கும் மடோனாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது.

இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மாறியதா? விஜய் சேதுபதியின் பார் ஓனர் கனவு நிறைவேறியதா? மடோனாவிற்கு வேலை கிடைத்ததா? என்பவையே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலும்_கடந்து_போகும்&oldid=3724119" இலிருந்து மீள்விக்கப்பட்டது