பீட்சா II: வில்லா

தீபன் சக்ரவர்த்தி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பீட்சா II: வில்லா (Pizza II: Villa) அறிமுக இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திகில் திரைப்படமாகும். அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர், வீகன் ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார். சி.வி. குமார் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில், 2013 நவம்பர் மாதம் வெளியானது. 2012யில் வெளியான பீட்சா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம், இதே பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.[1][2][3][4][5]

நடிகர்கள் தொகு

அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர், எஸ். ஜே. சூர்யா, காளி வெங்கட், அஞ்சலி ராவ், ராமதாஸ், ஜெயக்குமார், வீகன் ராஜேஷ்.

கதைச்சுருக்கம் தொகு

ஜெபின் எம். ஜோஸ் ஓர் அறிமுக நாவலாசிரியர் ஆவார். தன் தந்தையின் மறைவிற்கு பின் அவரது புதுச்சேரி வீட்டிற்கு வருகிறான். ஜோஸிற்கு இருக்கும் கடனை அடைக்க அந்த வீட்டை விற்க முடிவு செய்கிறான். அந்த வீட்டையும் வீட்டில் உள்ள மர்ம ஓவியங்களையும் பார்த்த ஜோஸின் காதலி ஆர்த்தி, அந்த வீட்டை விற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறாள்.

சில நாட்களிலேயே, அவனது முதல் நாவலிற்கு பெரிய சன்மானம் கிடைக்கிறது. அந்த நற்செயல் நடந்தமைக்கு அந்த வீடு தான் காரணம் என்று நினைத்த ஜோஸ், தனது அடுத்த நாவலை அங்கேயே தங்கி எழுத முடிவு செய்கிறான். அதே நேரம், தன் தந்தையிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்க, ஜோஸை அந்த வீட்டிலே தனியே விட்டுச் செல்கிறாள் ஆர்த்தி.

அவ்வாறாக ஓர் இரவு, அந்த வீட்டில் உள்ள பியானோவை ஜோஸ் வாசிக்க அதில் ஒரு சாவி கிடைக்கிறது. அந்த ஓவியங்களில் ஒன்று பார்ப்பதற்கு வரைபடம் போல் ஜோஸிற்கு தோன்றியது. அதை வைத்து வீட்டை நோட்டம்விட்ட பொழுது, ஒரு ரகசிய கதவை கண்டுபிடித்த ஜோஸ், கிடைத்த சாவியை வைத்து கதவை திறக்கிறான். பிறகு என்னவானது என்பது தான் மீதிக்கதை.

ஒலிப்பதிவு தொகு

கணேஷ் குமார். பி மற்றும் அருண் ராஜா எழுதிய பாடல் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். நடிகர் பிரசாந்தின் முன்னிலையில், 2 செப்டம்பர் 2013 அன்று ஒலித்தொகுப்பு வெளியானது.[6][7] ஒலித்தொகுப்பின் உரிமத்தை திங்க் மியூசிக் வாங்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. "articles.timesofindia.indiatimes.com". Archived from the original on 2013-05-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  2. "articles.timesofindia.indiatimes.com". Archived from the original on 2013-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  3. "www.rediff.com".
  4. "articles.timesofindia.indiatimes.com". Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  5. "articles.timesofindia.indiatimes.com". Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  6. "www.sify.com". Archived from the original on 2013-09-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.
  7. "www.thehindu.com".

வெளி-இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்சா_II:_வில்லா&oldid=3660477" இலிருந்து மீள்விக்கப்பட்டது