மேதகு
மேதகு (Methagu) என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இப்படத்தை கிட்டு இயக்கியுள்ளார்.[2] இப்படத்தை மேதகு திரைக்களம் உலக தமிழர்கள் பேராதரவோடு தயாரித்துள்ளது. இப்படத்திற்கான இசை பிரவீன் என்பவரால் அமைக்கபட்டுள்ளது.[3][4] ஆரம்பத்தில், இந்த திரைப்படம் நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், சில சிக்கல்களின் காரணமாகவும் அது ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியாக 25 சூன் 2021 அன்று மேலதிக ஊடக சேவை இயங்குதளமான 'BS Value' மூலம் நேரடியாக வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[5][6] இத் திரைப்படமானது தமிழீழத்தில் உண்மையாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகவும் அங்கு தமிழினத்திற்கு நடந்த துரோகங்கள் ஒடுக்குமுறைகளை கண்டு எப்படி, ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார் என்பதனைப் பற்றி உள்ளது. இந்த திரைப்படம் விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது. இத்திரைப்படம் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் படத்தின் கதையும் பெரும்பாலும் அவரைச் சுற்றி வருகிறது. இலங்கையில் நடந்த அரசியல் சூழ்நிலை, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைகளும், யாழ்ப்பாணத்தில் நடந்த உலகதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த சிங்கள தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கு உடந்தையாக இருந்த மேயர் அல்பிரட் துரையப்பாவை தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பின் பெயரில் தலைவர் பிரபாகரனும் அவர் தோழர்களும் கொலைசெய்ததை கடைசி காட்சியாக வைத்து இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும் வாழ்க்கைக் கதையும் நிகழ்வுகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.[4][7][8][9]
மேதகு | |
---|---|
மேதகு திரைப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டி | |
இயக்கம் | தி. கிட்டு |
தயாரிப்பு | மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம்
தயாரிப்பு நிர்வாகிகள் : சி.குமார், தஞ்சை & சுமேசு குமார், டென்மார்க் தயாரிப்பு நிர்வாக உதவி: தங்க பிரபாகரன், சதீசு குமார், ஈஸ்வர் பாட்ஷா |
கதை | கிட்டு, முத்து செழியன், திருக்குமரன் |
இசை | பிரவீன் குமார் |
நடிப்பு | லிசி ஆண்டனி வினோத் சாகர் குட்டி மணி ஈஸ்வர் பாஷா |
ஒளிப்பதிவு | ரியாஸ் |
படத்தொகுப்பு | இளங்கோ |
கலையகம் | தமிழ் ஈழ திரைக்களம் |
விநியோகம் | பிஎஸ் வேல்யூ (ஓ.டி.டி தளம்) |
வெளியீடு | 25 சூன், 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 60 லட்சம்[1] |
கதையின் சுருக்கம்
தொகுஇந்த திரைப்படம் தமிழ் இனத்தை அடக்குவதற்காக தமிழீழத்தில் நடந்த உண்மையான நிகழ்வுகளைக் காட்டுகிறது, மேலும் இது இந்தியப் பெருங்கடல் தீவு நாடான (இலங்கையில்) சிறீலங்காவில் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் எப்படி, ஏன் தோன்றியது என்பது பற்றி பேசுகிறது. புகழ்பெற்ற தமிழர் தலைவர் பிரபாகரனின் எழுச்சி பற்றியும் இந்த படம் பேசுகிறது.
நடிகர்கள்
தொகு- குட்டி மணி (இளம் வயது தலைவர் பிரபாகரன்)
- ஈஸ்வர் பாஷா (புத்த பிக்கு)
- வினோத் சாகர் (இராட்சசன் புகழ்)
- லிசி ஆண்டனி (சிறீமா பண்டாரநாயக்கா)
- சந்திரசேகர் (பண்டாரநாயக்கா)
- ராஜா (வேலுப்பிள்ளை - பிரபாகரனின் அப்பா)
- ரிந்து ரவி (பார்வதியம்மாள் - பிரபாகரனின் அம்மா)
- அரங்கநாதன் (யாழ்ப்பாணம் மேயர் அல்பிரட் துரையப்பா)
- ஆண்டோ சிரியத் (செல்வநாயகம்)
- மதுனிகா (வினோதினி - பிரபாகரனின் அக்கா)
- விஜய் சவுந்தர் (கலாபதி)
- ஆனந்தன் (கிருபாகரன்)
- இமானுவேல் (குட்டிமணி)
- ஆனந்த் சவுந்தராஜன் (தங்கதுரை)
- சதிஸ் (மதிவாணன்)
- அஜய் ஆல்வின் (பொன். சிவகுமாரன்)
- ராஜவேல் பெருமாள் தெருக்கூத்து கலைஞராக
தயாரிப்பு
தொகுவேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'மேதகு-1' முதல் பாகம் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தினை உலகத்தமிழர்கள் நன்கொடை வாயிலாக மேதகு திரைக்களம் என்று நிறுவனம் உருவாக்கியிருந்தது. இந்நிறுவனம் தஞ்சை குகன் குமார், கவிஞர் திருக்குமரன் மற்றும் சுமேஸ்குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிக்கப்படும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது ₹ 60 இலட்சம் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது. இந்த முதல் பாகமான மேதகு-1 இல் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனாக நடிக்க நடிகர் குட்டி மணியும் இலங்கையின் முன்னாள் பிரதமர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவாக லிசி ஆண்டனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குனராக கிட்டுவும், பிரவீன் குமார் இசையமைப்பாளராகவும், இளங்கோ படத் தொகுப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ரியாஸ் ஒளிப்பதிவை மேற்கொண்டார்.
பாடல்கள்
தொகுமேதகு திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பிரவீன் குமார் ஆவார்
வரிசை எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (m:ss) |
1 | வசந்தம் பூத்ததடி | உதய்பிரகாஷ் | தமிழீழ தேசியக்கவி. புதுவை இரத்தினதுரை | 03:52 |
2 | எட்டுத்தொகை ஏட்டுக்குள்ள | ரோஜா ஆதித்யா | கவிஞர் தி.திருக்குமரன் | 03:24 |
3 | உதிரம் வழிய | உதய்பிரகாஷ் | தி. கிட்டு | 03:14 |
4 | தாய் நிலமே | திவாகர் | தி.கிட்டு | 03:02 |
5 | பழி தீர்க்கவா | தி.கிட்டு & பிரவின் | தி.கிட்டு | 01:10 |
வெளியீடு
தொகுஇப் படம் 26 நவம்பர் 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, அது ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக 25 சூன் 2021 இல் மேலதிக ஊடக சேவை இயங்குதளமான 'BS Value' மூலம் வெளியிடப்பட்டது. படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 20 அன்று வெளியிடப்பட்டது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கொல்லப்பட்ட தலைவரின் வாழ்க்கை படம் என்பதை வெளிப்படுத்தியது. மேலும், அவரது ஆதரவாளர்கள் உலகளவில் டுவிட்டரில் #Methagu என்ற தமிழ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.[10] திரையுலக பிரபலங்கள் சத்யராஜ், வெற்றிமாறன், ஜி. வி. பிரகாஷ் குமார், நவீன், சசிகுமார் ஆகியோர் தங்களது டுவிட்டர் தளம் மூலம் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.[11][12]
வரவேற்பு
தொகுதிரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களுடன் படம் வெளியானது. ஆனந்த விகடனில் இருந்து ஒரு விமர்சகர், படம் ஒரு பாராட்டுக்குரிய முயற்சி, ஏனெனில் இது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வெளிப்படையான வாழ்க்கையை சித்தரித்துள்ளது" என எழுதினார்.[6] பிலிம் கம்பேனியன் திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன், "எல்லா தவறுகளுடனும், இது இலங்கை அரசியலில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் மிகவும் முக்கியமான ஒரு நபரைப் பற்றிய ஒரு முக்கியமான வாழ்க்கை வரலாறு" என எழுதினார்.[13] இந்து தமிழ் நாளிதனில் எஸ். எஸ். லெனின் எழுதிய விமர்சனத்தில் "படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம்." என பாராட்டியுள்ளார்.[1] தினமணி நாளிதழின் நசிகேதன், "இந்தப் படம் உண்மையைச் சித்தரித்ததால், படம் மக்களால் ரசிக்கப்பட்டது" என எழுதினார்.[14]
தொடர் பாகங்கள்
தொகுமேதகு இரண்டாம் பாகம் மேதகு 2 என்ற தலைப்பில் 19 ஆகத்து 2022 அன்று[15] tamilsott.com என்ற தளத்தில் வெளியாகிறது.[16] மேதகு மூன்றாம் பாகம் வரப்போவதாக மேதகு இரண்டாம் பாகம் திரைப்பட முடிவில் காட்டப்படுகிறது.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 எஸ். எஸ். லெனின், ஓடிடி உலகம்: திரும்பிப் பார்க்கவைத்த 2 படங்கள், கட்டுரை, இந்து தமிழ் 2021, சூலை, 2
- ↑ பிரபாகரன் பயோபிக் : ஓடிடியில் வெளியான ’மேதகு’ - வாழ்த்திய தமிழ் திரையுலகினர். புதிய தலைமுறை. 25 சூன் 2021.
- ↑ "Log into Facebook". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
{{cite web}}
: Cite uses generic title (help) - ↑ 4.0 4.1 "Methagu Movie Cast, Teaser, Trailer, Release Date, Review, Images". Newsminions (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
- ↑ Rathi, Aditi (25 May 2021). "'Methagu' Release Postponed Due To Legal Reasons, Fans Demand Its Release". ரிபப்ளிக் தொலைக்காட்சி. https://www.republicworld.com/entertainment-news/regional-indian-cinema/methagu-release-postponed-due-to-legal-reasons-fans-demand-its-release.html.
- ↑ 6.0 6.1 "மேதகு - சினிமா விமர்சனம்". ஆனந்த விகடன். 1 July 2021. https://cinema.vikatan.com/tamil-cinema/methagu-cinema-review.
- ↑ Jayakumar, G. Babu (2020-10-21). "LTTE supporters trend 'Methagu' hashtag on Twitter, praise Prabhakaran". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.
- ↑ "How a speech of Anita Pratap glorifying V. Prabhakaran ended up in 'Methagu', a biopic on the dreaded LTTE chief". IJR (in ஆங்கிலம்). 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "Methagu: தமிழீழ விடுதலை போராளி பிரபாகரனின் 'மேதகு' திரைப்படம் வெளியீடு!". News18 Tamil (in tm). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Jayakumar, G.Babu (21 October 2020). "LTTE supporters trend 'Methagu' hashtag on Twitter, praise Prabhakaran". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/nation/in-other-news/211020/ltte-supporters-trend-methagu-hashtag-on-twitter-praise-prabhakaran.html.
- ↑ "பிரபாகரன் பயோபிக் : ஓடிடியில் வெளியான 'மேதகு' - வாழ்த்திய தமிழ் திரையுலகினர்". புதிய தலைமுறை (இதழ்). 25 June 2021. https://www.puthiyathalaimurai.com/newsview/110513/44-died-in-Maharashtra-by-heavy-rainfall-and-landslide.html.
- ↑ A, Ashik (26 June 2021). "ஈழத்தின் போராட்டத்தை உலகுக்கு உரக்கச் சொல்லும் படம்: மேதகு குறித்து திரையுலக பிரபலங்கள்!". https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamil-cinema-celebrities-tweet-about-methagu-movie/articleshow/83869164.cms.
- ↑ Baradwaj Rangan (8 July 2021). "Methagu Is An Important Biopic About Prabhakaran But It Doesn't Create The Impact It Should". Film Companion. https://www.filmcompanion.in/reviews/tamil-review/methagu-movie-review-tamil-bs-value-important-biopic-about-prabhakaran-that-doesnt-create-the-impact-it-should-kutti-mani-eshwar-basha-lizzie-anthony/.
- ↑ ., Nasikethan (1 July 2021). "துணிச்சலுடன் வெளிவந்துள்ள மாவீரனின் தன் வரலாறு - மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல". தினமணி. https://www.dinamani.com/cinema/movie-reviews/2021/jun/29/methagu-review-prabhakaran-3650806.html.
- ↑ https://www.imdb.com/title/tt16077646/
- ↑ https://www.etvbharat.com/tamil/tamil-nadu/entertainment/movie/methagu-2-has-been-planned-to-be-out-on-aug-19/tamil-nadu20220814220955700700132
- ↑ https://www.tamillive.news/2022/08/methagu2moviereviewintamil.html