தி. கிட்டு (இயற்பெயர் : தி. கிருஷ்ணகுமார்[1]) ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய முதல் படமான மேதகு மாபெரும் வெற்றியடைந்தது.[2]

இளமை மற்றும் வாழ்க்கை தொகு

கிட்டுவின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி என்னும் கிராமம். கிட்டுவின் தாத்தா அடைக்கலம் ஒரு கூத்துக்கலைஞர். கிட்டுவின் தந்தை திருப்பதி ஒரு கால்நடை மருத்துவர். தந்தையின் பணிச்சூழலால் கிட்டுவின் குடும்பம் தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தது. கிட்டு, பி.டெக், எம்.டெக் பயோ டெக்னாலஜி படித்துவிட்டு தனியார் கல்லூரியில் ஐந்து வருடம் அமைப்பியல் துறையில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தார். தமிழ்த்தேசியவாதியாகிய கிட்டு, தமிழ்த்தேசிய அமைப்புகளில் பயணித்து பின் விலகி[3] தனது தமிழ்த்தேசிய கருத்துகளை நைய்யப்புடை என்னும் தனது வலையொளி மூலமாக பதிவிட்டு வந்தார். தனது துணைப்பேராசியிரர் பணியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்பட தளத்தில் தற்போது பயணிக்கிறார்[1]. இவர் திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி, பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பணியாற்றுகிறார்.

இயக்கிய திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 ""நீங்கள் காட்டியது அனைத்தும் உண்மை என கண்ணீர்விட்டு பாராட்டினர்" - 'மேதகு' கிட்டு பேட்டி". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  2. "All you want to know about #KittuT". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  3. நா.கதிர்வேலன். ""அண்ணாவின் நாடகம், கருணாநிதியின் பேச்சுகளில் நையாண்டி இல்லையா?"- `மேதகு' இயக்குநர் கிட்டு". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06. {{cite web}}: External link in |website= (help)
  4. "கரிகாலனின் எழுச்சி.! – வாழ்த்துக்கள் இயக்குநரே..! TAMIL SHORT FILM #நையப்புடை #TheRiseOfKarikaalan #கிட்டு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
  5. "'மேதகு' திரைப்படம்: ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._கிட்டு&oldid=3294274" இலிருந்து மீள்விக்கப்பட்டது