பரபரப்பூட்டும் திரைப்படம்
பரபரப்பூட்டும் திரைப்படம் (Thriller film) சஸ்பென்ஸ் திரைப்படம் அல்லது சஸ்பென்ஸ் பரபரப்பூட்டும் திரைப்படம் என்றும் அழைக்கப்படும் ஒரு திரைப்பட வகையாகும். இந்த வகை திரைப்படம் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுகிறது. பெரும்பாலான திரைப்படங்களின் கதைகள் பதற்றத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்படுகின்றது.[1][2]
ஒரு பரபரப்பூட்டும் திரைப்படத்தின் கதை பொதுவாக வாழ்க்கை அச்சுறுத்தப்படும் காட்சி அமைப்புடன் எடுக்கப்படுகின்றது. பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்க போகுது என்று ஆவலுடன் எதிர் பார்க்கவைக்கின்றது. பரபரப்பூட்டும் திரைப்படங்கள் பொதுவாக மற்ற வகை திரைப்படங்களுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றது. உதாரணம் (அதிரடி பரபரப்பூட்டல், சாகச பரபரப்பூட்டல், கனவுருப்புனைவு மற்றும் அறிவியல் புனைகதை பரபரப்பூட்டல்) போன்ற வகைகள் இதற்குள் அடங்கும்.[3]
திரில்லர் திரைப்படம் திகில் திரைப்படங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டது, இவை இரண்டும் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றன. குற்றம் பற்றிய கதைக்களங்களில், பரபரப்பூட்டும் திரைப்படங்கள் குற்றவாளி அல்லது துப்பறியும் நபர்களிடமும், பதற்றத்தை உருவாக்குவதிலும் குறைவாகவே கவனம் செலுத்துகின்றன. இந்த வகை திரைப்படம் பயங்கரவாதம், அரசியல் சதி, நாட்டம் மற்றும் கொலைக்கு வழிவகுக்கும் முக்கோணக் காதல் போன்ற பொதுவான கருப்பொருள்களை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது.
தமிழ் திரைப்படத்துறையின் வளர்சிக்கு பரபரப்பூட்டும் வகைத் திரைப்படம் மிகமுக்கிய பெரும் பங்கை வகித்துள்ளது. திரைப்படத்துறை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அதே கண்கள், ஊமை விழிகள், நூறாவது நாள், விசாரணை, ராட்சசன், விக்ரம் வேதா, துருவங்கள் பதினாறு, கைதி போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் கண்டது.
பரபரப்பூட்டும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Konigsberg 1997, ப. 421
- ↑ Konigsberg 1997, ப. 404
- ↑ Dirks, Tim. "Thriller – Suspense Films". Filmsite.org. பார்க்கப்பட்ட நாள் July 25, 2010.