அதிரடித் திரைப்படம்

அதிரடித் திரைப்படம் அல்லது சண்டைத் திரைப்படம் (Action Film) திரைப்படம் மற்றும் நாடகத் தொடர்களில் உள்ள ஒரு வகையாகும். ஒரு அதிரடித் திரைப்படம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகர்களைக் கொண்டு, அவர்களின் உடல் வலிமையையும், சண்டைக் கலையில் உள்ள திறன்களையும், நீட்டிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் மற்றும் பரபரப்பான சவால்களையும், துரத்தல் காட்சிகள் முதலியவை கொண்டு அமைந்துள்ள ஒரு பட வகையாகும். ஒரு தீயவன் (வில்லன்) அல்லது ஒரு தீய குழுவை, கதாநாயகர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், வன்முறை மூலம் போராடி இறுதியில் வெற்றி அடைவதாக காட்டப்படும். நம்புவதற்கு அரிய சாகசங்களை அவர்கள் செய்வதாகவும் காட்டப்படும். ஆயுதங்கள், வன்முறை நிறைந்த காட்சிகள் நிறைந்து காணப்பட்டாலும், அதிரடித் திரைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கின்றவை என்றும் உறுதியாக வருவாய் ஈட்டக் கூடியவை என்றும் நம்பப்படுகின்றது.

அதிரடித் திரைப்பட காட்சி ஒன்று

உலகின் முதலாவது அதிரடித் திரைப்படம் 1903 ஆம் ஆண்டில் வெளிவந்த "மிகப்பெரிய புகையிரதக் கொள்ளை" (The Great Train Robbery) எனும் திரைப்படமே என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[1][2] இந்த வகை திரில்லர், சாகசம் மற்றும் உளவுபார்க்கும் திரைப்பட வகைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது.

நடிகர்கள் தொகு

1950ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜான் வெயின், புரூசு லீ, சக் நோரிஸ், கிளின்ட் ஈஸ்ட்வுட், சோனி சிபா, சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஆர்னோல்டு சுவார்செனேகர், ஸ்டீவன் சீகல் போன்ற நடிகர்கள் அதிரடித் திரைப்படங்களில் நடித்தனர்.

1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசியா நாட்டு நடிகர்களான சொவ் யுன் ஃபட், யெற் லீ மற்றும் ஜாக்கி சான் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் அதிரடித் திரைப்படத்திற்கு இணையாக பல திரைப்படங்களில் நடித்தனர். இவர்கள் பல ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளர்.

தமிழ் திரைப்படங்களில் ம. கோ. இராமச்சந்திரன், விஜயகாந்த், அர்ஜுன், கமல்ஹாசன், ரசினிகாந்த், விஜய், அஜித் குமார்,சூர்யா போன்ற நடிகர்கள் சில அதிரடித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகைகள் தொகு

ஆண் நடிகர்ளுக்கு இணையாக பெண் நடிகைகளும் பல திரைப்படங்களில் அதிரடி காட்சிகளில் நடித்துள்ளர்னர்கள். லூசி லியு, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மிச்செல் ரோட்ரிக்வெஸ், சாண்ட்ரா புல்லக், சிகர்னி வேவர், ஜெனிஃபர் கானலி, ஏஞ்சலினா ஜோலி போன்ற பல நடிககைகளை குறிப்பிடலாம்.

தமிழ் திரைப்படங்களில் பெண் நடிகைகள் அதிரடித் திரைப்படங்களில் நடிப்பது மிகவும் குறைவு. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடிகை விஜயசாந்தி அதிரடித் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. சில்க் ஸ்மிதா, குஷ்பூ, சினேகா, ரோஜா, ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகள் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல அதிரடித் திரைப்படங்கள் தொகு

தொலைக்காட்சி தொகு

தமிழ் தொலைக்காட்சி அதிரடித் தொடர்கள் அல்லது சண்டைக்காட்சிகள் தயாரிப்பது மிகவும் குறைவு. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரேகா ஐ பி எஸ் என்ற தொடரில் அனு ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தமிழ் தொடர்களில் வேட்டை தொடரை குறிப்பிடலாம்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரடித்_திரைப்படம்&oldid=3540983" இருந்து மீள்விக்கப்பட்டது