கிளின்ட் ஈஸ்ட்வுட்
கிளின்டன் "கிளின்ட்" ஈஸ்ட்வுட், ஜூனியர் (Clint Eastwood, பி. மே 31, 1930) ஒரு அமெரிக்க நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பியானோ வாசிப்பாளர், தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1][2]
ஈஸ்ட்வுட் முதலில் ராஹைடு(1959-1966) என்ற டிவி தொடரில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார்.அவர் 1960களின் பிற்பகுதியில் செர்ஜியோ லியோனின் டாலர்கள் முப்படத்தில் (எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964),ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965) மற்றும் தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966)) பெயரில்லாத கதாநாயகனாகவும் மற்றும் டர்ட்டி ஹாரி படங்களில் (டர்ட்டி ஹாரி, மேக்னம் ஃபோர்ஸ், தி என்ஃபோர்ஸர், சடன் இம்பேக்ட், மற்றும் தி டெட் பூல்) ஹாரி கலஹனாகவும் (1970 மற்றும் 1980 முழுவதும்) முரட்டுத்தனமான வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.இந்த பாத்திரங்கள், அவரை ஒரு பண்பாட்டு சின்னமாக புகழ்பெறச்செய்தன.அவரது அன்பர்கிவன் (1992) மற்றும் மில்லியன் டாலர் பேபி (2004),படங்களுக்காக ஈஸ்ட்வுட் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த தயாரிப்பாளருக்கான அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.மொத்தம் ஐந்து தடவைகள் அக்கடமி விருதினைப் பெற்ற இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.[3]
சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த இவர் 1950 களின் நடுப்பகுதியில் திரைப்படத்துறையில் நடிகராக நுழைந்தார். 1958 இல் றோகைட் எனும் தொகைக்காட்சித் தொடரில் 'ரௌடி யேற்'சாக நடித்துப் புகழ் பெற்றார். 1959 சனவரி முதல் ஏழு ஆண்டுகள் அத்தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பானது. அத்தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்தார்.1960 களில் தொடங்கி 1980 களின் தொடக்கம் வரை வெஸ்டர்ன் என அழைக்கப்படும் சாகசத் திரைப்படங்களில் இவர் நடித்தமை குறிப்பிடத்தக்கது. 1971 இலிருந்து திரைப்படங்களை இயக்கியும் வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஈஸ்ட்வுட் சான் பிரான்சிஸ்கோ,கலிபோர்னியாவில் கிளின்டன் ஈஸ்ட்வுட், சீனியர் (1906-70), ஒரு எஃகு தொழிலாளி,மற்றும் மார்கரெட் ரூத் (ரன்னர்) ஈஸ்ட்வுட் (1909-2006), ஒரு தொழிற்சாலை தொழிலாளி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.அவர் பிறந்தபோது 11 பவுண்டுகள் 6 அவுன்ஸ் (5.2 கிலோ) எடையிருந்த்தால் மருத்துவமனை செவிலியர்களால் "சாம்சன்" என செல்லப்பெயரிடப்பட்டார்.ஈஸ்ட்வுட் ஆங்கிலம், ஐரிஷ், ஸ்காட்டிஷ் மற்றும் டச்சு வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் அவரது இளைய சகோதரி, ஜீன் (1934 இல் பிறந்தவர்) உடன் வளர்க்கப்பட்டார்.அவரது தந்தை வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வேலை தேடியதால் அவரது குடும்பத்தினர் அடிக்கடி புலம்பெயர்ந்தனர்.குடும்ப இறுதியாக பிட்மான்ட், கலிபோர்னியாவில் வசித்தபோது ஈஸ்ட்வுட் பிட்மான்ட் ஜூனியர் உயர்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டார்.அவர் பிட்மான்ட் உயர்நிலை பள்ளியில் சேருவதன் முன்பு,பைக்கை பள்ளி விளையாட்டு துறை மைதானத்தில் ஓட்டி சேதாப்படுத்தினார்,இதன் காரணமாக பள்ளியில் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.அதற்கு பதிலாக, அவர் ஓக்லாண்ட் தொழில்நுட்ப உயர்நிலை பள்ளியில் படித்தார் அங்கு நாடக ஆசிரியர்கள் அவரை பள்ளி நாடகங்களில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார். எனினும், ஈஸ்ட்வுட் ஆர்வமாக இல்லை.அவர் மெய்க்காப்பாளர்,, மளிகை எழுத்தர், வன தீயணைக்கும் பணியாளர்,செய்தித்தாள் அளிப்பவர் மற்றும் கோல்ஃப் காடியாகவும் பணியாற்றினார்.1951 ல் கொரிய போரின் போது, ஈஸ்ட்வுட் அமெரிக்க இராணுவத்தில் ஒரு மெய்க்காப்பாளராக கலிபோர்னியாவில் உள்ள ஃபோர்ட் ஓர்டில் பணியாற்றினார்.1951 ஆம் ஆண்டு விடுப்பின்போது, அவர் பயணித்த ராணுவ விமானம் எரிபொருளின்றி கடலில் விழுந்து நொறுங்கியது,மூழ்கிய விமானத்தில் இருந்து தப்பிய, அவர் மற்றும் பைலட் 3 மைல் (5 கிமீ) நீந்தி கரைசேர்ந்தனர்.
தொழில்
தொகுஆரம்ப காலம்
தொகுசிபிஎஸ் செய்தி வெளியீட்டின் படி,ஃபோர்ட் ஓர்டில் படப்பிடிப்பு நடந்தபோது ஈஸ்ட்வுட் ஒரு உதவி இயக்குனரால் அடையாளம் காணப்பட்டார்.ஏப்ரல் 1954 இல் அவரது ஆரம்ப ஒப்பந்தம் வாரத்திற்கு $ 100 (2013ன் படி $869) அமெரிக்க டாலர்கள்.ஒப்பந்தமான பிறகு, ஈஸ்ட்வுட் ஓர கண்ணால் பார்த்தல் போன்ற அம்சங்களால் விமர்சிக்கப்பட்டார்,பின்னாளில் இவையே அவரது ஸ்டைலாக மாறின.
ஈஸ்ட்வுட் முதல் கதாபாத்திரம் ஒரு ஆய்வக உதவியாளராக 1955ம் ஆண்டு திரைப்படமான ரிவென்ச் ஆஃப் த க்ரியேச்சரில் கிடைத்தது.அடுத்த மூன்று ஆண்டுகளில், அவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.1959 ஆம் ஆண்டில் நட்புக்காக "மேவ்ரிக்" படத்தில்,பணத்துக்காக ஒரு பணக்கார பெண்ணை திருமணம் செய்யும் ஒரு கோழைத்தனமான வில்லனாக நடித்தார்.ஈஸ்ட்வுட் பிரஞ்சு படமான "லஃபாயெட்டெ எஸ்காட்ரில்லெ"வில் ஒரு ஓட்டுநரான சிறு வேடத்தில் நடித்தார்.
நீண்ட இடைவேளைக்குப்பின், ஈஸ்ட்வுட் 1958ல் சிபிஎஸின் வெஸ்டர்ன் தொடரான ராஹைடில் ரவுடி யேட்ஸ் என்ற துணை பாத்திரத்தில் நடித்தார்."ராஹைடு" ஆண்டுகள் (1959-65) ஈஸ்ட்வுட் வாழ்க்கையில் மிகவும் கடினமானவையாக இருந்தன, அவர் பெரும்பாலும் ஒரு நாள் சராசரியாக பன்னிரெண்டு மணி நேரமும், ஒரு வாரத்திற்கு ஆறு நாட்களும் நடித்தார்,எனினும் சில இயக்குனர்கள் கடினமாக உழைக்கவில்லை என அவரை விமர்சித்தனர்.
1963 இறுதியில் ராஹைடு தொடரின் புகழ் குறைந்தது.அவர் தனது முதல் இயக்குனர் முயற்சியாக பல டிரைலர்களை இத்தொடரில் படமாக்கினார்,எனினும் தயாரிப்பாளர்களை அவரால் திருப்திபடுத்த முடியவில்லை.நிகழ்ச்சியின் முதல் பருவத்தில் ஈஸ்ட்வுட் ஒரு எபிசோடுக்கு $ 750(2013ல் $ 6,068) அமெரிக்க டாலர்கள் மற்றும் இத்தொடர் இரத்து நேரத்தில், அவர் இழப்பீடாக $119,000(2013ல் $881,505) அமெரிக்க டாலர்கள் பெற்றார்.
திரைவாழ்க்கை
தொகு1963ம் ஆண்டு இறுதியில், ஈஸ்ட்வுட்டின் "ராஹைடு" இணை நட்சத்திரம், எரிக் பிளெமிங்,செர்ஜியோ லியோன் மூலம் ஸ்பெயினின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் எடுக்கப்படும்,எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் என்ற ஒரு வெஸ்டர்ன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தார்.ரிச்சர்ட் ஹாரிசன் என்பவர் ஈஸ்ட்வுட்டிற்கு இப்படத்தில் நடிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.அவருக்கு பதினோரு வார வேலை ஊதியத்தியமாக $15,000 (2013ல் $112,902) மற்றும் படப்பிடிப்பின் முடிவில் போனஸாக ஒரு மெர்சிடிஸ் கார் என நிர்ணயிக்கப்பட்டது.ஈஸ்ட்வுட் பின்னர் வெஸ்டர்ன் தொடரான "ராஹைடிலிருந்து" எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸில் நடிக்கும் மாற்றம் பற்றி பேசும்போது:"நான் ராஹைடில் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் ஹீரோவாக நடித்து சோர்வடைந்தேன், எனவே இத்தருணம் ஒரு எதிர்ப்பு ஹீரோவகும் முடிவெடுத்தென்" என்றார்.ஈஸ்ட்வுட் பெயரில்லாத கதாநாயகனின் தனித்துவமான பாணியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் லியோனின் வெஸ்டெர்ன் படங்களில், ஒரு மைல்கல் என நிரூபித்தது.படத்தின் வெற்றி ஈஸ்ட்வுட்டை இத்தாலியில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாற்றியது.
திரைப்படங்கள்
தொகுஇவரது திரைப்படங்களில் சில:
உசாத்துணைகள்
தொகு- ↑ Fischer, Landy & Smith, p. 43
- ↑ Kitses, p. 307
- ↑ "Clint Eastwood Movie Box Office Results". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் January 17, 2014.