மெர்சிடிஸ்-பென்ஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மெர்சிடிஸ்-பென்ஸ் தானுந்துகள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி (Daimler AG) என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.
![]() | |
வகை | Division of டைம்லர் ஏஜி |
---|---|
முந்தியது | கார்ல் பென்ஸ் Daimler Motoren Gesellschaft |
நிறுவுகை | 1886 |
நிறுவனர்(கள்) | கார்ல் பென்ஸ் காட்லீப் டைம்லர் |
தலைமையகம் | இசுடுட்கார்ட்டுI, Germany |
சேவை வழங்கும் பகுதி | Worldwide |
முக்கிய நபர்கள் | Dieter Zetsche, Chairman |
தொழில்துறை | Manufacturing |
உற்பத்திகள் | Automobiles Trucks பேருந்துes உள் எரி பொறிs |
சேவைகள் | Financial services |
தாய் நிறுவனம் | Daimler AG |
இணையத்தளம் | www |
வரலாறு தொகு
1880களில் காட்லீப் டைம்லர் (1834–1900), வில்ஹெல்ம் மேபாஃக்குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த கார்ல் பென்ஸ் (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய உள் எரி பொறியால் உந்தப்பெற்ற தானுந்துதனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் டைம்லர்-பென்ஸ் என்னும் கம்பினி 1926ல் கூட்டாக உருவாகியது.
அருங்காட்சியகம் தொகு
இந்நிறுவனத்தின் அருங்காட்சியகம் இசுடுட்கார்ட்டு நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட இங்கு இந்நிறுவனத்தின் உலகின் முதன் தானுந்து முதல் இன்றைய தானுந்துகள் வரை வெளிவந்த தானுந்து, சரக்குந்து, பேருந்து முதலான பல வண்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.