ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்
ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (For a Few Dollars More, இத்தாலியம்: Per qualche dollaro in più) 1966 இல் வெளியான ஒரு ஸ்பாகெட்டி மேற்கத்தியப் பாணி இத்தாலிய மொழித் திரைப்படம். செர்ஜியோ லியோனி இயக்கிய இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட், லீ வான் கிளீஃப், ஜியான் மரியா வோலான்ட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான இரண்டாம் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது.
ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் | |
---|---|
அமெரிக்க வெளியீடு ஒட்டி | |
இயக்கம் | செர்ஜியோ லியோனி |
தயாரிப்பு | ஆல்பெர்டோ கிரிமால்டி |
கதை | கதை: செர்ஜியோ லியோனி ஃபல்வியோ மோண்டெல்லா திரைக்கதை: செர்ஜியோ லியோனி லூசியானோ வின்சென்சோனி |
இசை | என்னியோ மோரிக்கோனே |
நடிப்பு | கிளின்ட் ஈஸ்ட்வுட் லீ வான் கிளீஃப் ஜியான் மரியா வோலான்ட்டி |
ஒளிப்பதிவு | மசீமோ டல்லாமானோ |
படத்தொகுப்பு | யூஜீனியோ அலபிசோ ஜியார்ஜியோ செரலோங்கா |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் |
வெளியீடு | நவம்பர் 18, 1965(Italy) மே 10, 1967 (US) |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இத்தாலி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் |
மொழி | இத்தாலியம், ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $ 600,000[1][2] |
“எல் இண்டியோ” (வோலான்ட்டி) என்னும் கொள்ளைக்கூட்டத் தலைவன் சிறையிலிருந்து தப்பி, அமெரிக்காவின் எல் பாசோ நகரில் இருக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அவனையும் அவனது கூட்டாளிகளையும் உயிருடன் பிடித்தாலோ கொன்றாலோ கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரு துப்பாக்கி வீரர்கள் (ஈஸ்ட்வுட் மற்றும் வான் கிளீஃப்) போட்டியிடுகிறார்கள். இருவரும் சேர்ந்து இண்டியோவை எதிர்ப்பதே திரைப்படத்தின் கதைக்களம்.
எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் வெற்றிக்குப் பின்னால், அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பகெட்டி மேற்கத்திய பாணி திரைப்படத்தை செர்ஜியோ லியோனி உருவாக்கினார். “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் மற்றொரு சாகச நிகழ்வைக் கூறுவதாக இப்படம் அமைந்தது. அமெரிக்க கதைக்களம், இத்தாலிய மொழி வசனங்களுடன், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடந்தது. முந்தைய படத்தைப் போலவே என்னியோ மோரிக்கோனி இதற்கு இசையமைத்தார். 1965 இல் இத்தாலியில் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பின்பு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் உலகின் பிற நாடுகளிலும் வெளியானது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. தற்போது தலைசிறந்த மேற்கத்தியப் பாணி படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Hughes, Howard (2009). Aim for the Heart. London: I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845119027.
- Munn, Michael (1992). Clint Eastwood: Hollywood's Loner. London: Robson Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 086051790X.