அனு ஹாசன்
நடிகர்
அனு ஹாசன் (பிறப்பு - சூலை 15, 1970) தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இயக்குனர் சுஹாசினி தனது இந்திரா திரைப்படத்தின் மூலம் அனு ஹாசனை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தமிழ்ப்படங்களில் முக்கியமான துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் காஃபி வித் அனு என்னும் பிரபலங்களை நேர்காணும் நிகழ்ச்சியை மூன்று பருவங்களிற்கு தொகுத்து வழங்கினார். இவர் தொழில் முனைவோர், வடிவழகி, இசைக்கலைஞர், தற்காப்புக் கலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
அனு ஹாசன் | |
---|---|
இயற் பெயர் | அனுராதா சந்திரஹாசன் |
பிறப்பு | சூலை 15, 1970![]() |
தொழில் | நடிகை, வடிவழகி, தொகுப்பாளர், தொழில் முனைவோர் |
நடிப்புக் காலம் | 1995-இன்றளவும் |
திரைப்படங்கள் தொகு
ஆண்டு | திரைப்படம் | பாத்தரம் | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
1995 | இந்திரா | இந்திரா | தமிழ் | |
2001 | ஆளவந்தான் | கமலின் அம்மா | தமிழ் | விருந்தினர் தோற்றம் |
2002 | ரன் | சிவாவின் அக்கா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது |
2003 | நள தமயந்தி | பத்ரியின் மனைவி | தமிழ் | |
ஆஞ்சநேயா | பரமகுருவின் அக்கா | தமிழ் | ||
2008 | அக்கு | அனு | தமிழ் | |
சந்தோஷ் சுப்ரமணியம் | தமிழ் | விருந்தினர் தோற்றம் | ||
தாம் தூம் | சரசு | தமிழ் | ||
2009 | சர்வம் | கீதா ஈஸ்வர் | தமிழ் | விருந்தினர் தோற்றம் |
ஆதவன் | அனு | தமிழ் | ||
Evaraina Epudaina | வெங்கட்டின் மைத்துனி | தெலுங்கு | ||
2010 | மாஞ்சா வேலு | கார்த்திக்கின் மனைவி | தமிழ் | |
இரண்டு முகம் | தமிழ் | |||
தொட்டுப்பார் | தமிழ் | |||
2011 | கோ | அவராக | தமிழ் | கௌரவ தோற்றத்தில் |
2011 | Red Building Where The Sun Sets | ஆங்கிலம் | தேசிய விருது பெற்றது | |
2012 | Endhukante... Premanta! | ரம்யா | தெலுங்கு | |
ஏன் என்றால் காதல் என்பேன் | தமிழ் | |||
டெட் பொயின்ட் | அன்வரின் தாய் | அரபு | மிலாட் லடூஃப் இயக்கியுள்ளார் | |
ஆயிரம் கனவுகள் | அனு / அனிதா | தமிழ் | நந்ததுரை இயக்கத்தில், தற்போது இலண்டனில் படப்பிடிப்பில் | |
கானகம் | அனு | தமிழ் | மாமணி இயக்கத்தில், தற்போது சென்னையில் படப்பிடிப்பில் | |
குந்தபுரா | கௌரி ஐயர் | மலையாளம் | சுதந்தரத்திற்கு, முன் பின் வரலாற்றைபற்றியது, தயாரிப்பிற்கு பிந்தைய பணியில்[1] |