ஆளவந்தான் (திரைப்படம்)

சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஆளவந்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆளவந்தான் (Aalavandhan) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அப்ஹெ என்று ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

ஆளவந்தான்
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
இசைசங்கர் மகாதேவன்
நடிப்புகமல்ஹாசன்
மனிஷா கொய்ராலா
ரவீணா டாண்டன்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
வெளியீடு2001
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகை

நாடகப்படம் / திகில்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நந்தகுமார் (கமல்ஹாசன்) தனது சித்தியின் கொடுமைகளால் சிறு வயதிலேயே பெண்களை மீது வெறுக்கிறான். சித்தியினைக் கொலை செய்து சிறுவர்களுக்கான மன நோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். நந்தகுமாரின் சகோதரனோ இந்திய இராணுவத்தில் பணியாற்றுபவராகவும் விளங்குகின்றார். தீவிரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பொது மக்களை விடிவிப்பதற்காகத் தன் உயிரையும் பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றார். திடீரென ஒரு நாள் இவர் தன் மனைவியுடம் நந்துவைப் பார்ப்பதற்கு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். அங்கு இவரின் மனைவியை பார்த்து கோபம் கொள்கின்றான். பின்னர் அவளைக் கொலை செய்வதற்காகவும் சிந்தனைகளை வளர்க்கின்றான். அனைத்துப் பெண்களையும் சித்தியின் அவதாரங்களாக எண்ணும் மனதைக் கொண்ட நந்து சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக திட்டம் தீட்டுகின்றான்.

அங்கு தன் நண்பர்களான இருவரிடமும் நாம் மூவரும் சிறையிலிருந்து தப்பிச் செல்லப் போகின்றோம் என்று வஞ்சகமான முறையில் ஆசை காட்டி பின்னர் அவர்களை சிறையிலிருந்து தப்பிச் செல்லும் வழியிலேயே கொலையும் செய்கின்றான் நந்து. பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நந்து இறந்துவிட்டான் எனக் கருதும் காவல் துறையினர் நந்து அவன் சகோதரனின் மனைவியைக் கொலை செய்யும்பொருட்டுடன் பல முறை முயற்சிகள் செய்கின்றான். இதனை அறிந்து கொள்ளும் அவன் சகோதரனும் தடுக்க முனைகின்றான். கட்டிடங்கள்,வீடுகள் மூலம் தாவிச் செல்லும் சற்றும் பயமில்லாத நந்து இறுதியில் தன் உயிரை மாய்த்தும் கொள்கின்றான்.

மேற்கோள்கள்