டை ஹார்ட் 5

டை ஹார்ட் 5 (ஆங்கில மொழி: A Good Day to Die Hard) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜோன் மூரே இயக்க, ப்ரூஸ் வில்லீஸ், ஜெய் கோர்ட்னி, செபாஸ்டியன் கோச், கோல் ஹாஸர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டை ஹார்ட் 5
A Good Day to Die Hard
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோன் மூரே
தயாரிப்பு

அலெக்ஸ் யங்

  • விக் கோட்ஃபிரே
திரைக்கதைஸ்கிப் வூட்ஸ்
நடிப்பு
ப்ரூஸ் வில்லீஸ்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசனவரி 31, 2013 (2013-01-31)(World premiere)
பெப்ரவரி 14, 2013 ( அமெரிக்கா/கனடா)
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
உருசியா
ஆக்கச்செலவு$92 மில்லியன்
மொத்த வருவாய்$304,654,182

கதைச்சுருக்கம்தொகு

சிறு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தந்தை ப்ரூஸ் வில்லீஸ் மற்றும் மகன் ஜெய் கோர்ட்னி. மகன் ஜெய் கோர்ட்னி ரஷியாவில் சிறைவைத்து இருப்பதை அறிந்து அங்கு செல்லும் ப்ரூஸ் வில்லீஸ், பல போராட்டங்களுக்கு பிறகு மகனை காப்பாற்றுகிறார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி தனது மகனும் தன்னைப்போல ஒரு உளவாளி என்று அறிகின்றார். ரஷியாவில் அமெரிக்காவுக்கு எதிராக ராணுவம் அணு ஆயுதங்கள் தயாரிப்பது தெரியவர அந்தத் திட்டங்களை தந்தையும் மகனும் எப்படித் தடுத்தார்கள் என்பதுதான் கதை.

நடிகர்கள்தொகு

தமிழில்தொகு

இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் டை ஹார்ட் 5 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டை_ஹார்ட்_5&oldid=2919045" இருந்து மீள்விக்கப்பட்டது