ஆர்னோல்டு சுவார்செனேகர்

அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார். அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.

ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
Arnold Schwarzenegger 2012.jpg
38வது கலிஃவோர்னிய ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 17 2003
Lieutenant Cruz Bustamante
(2003 - 2007)
John Garamendi
(2007 - Present)
முன்னவர் கிரே டேவிஸ்
பின்வந்தவர் பதவியில் உள்ளார்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 30, 1947 (1947-07-30) (அகவை 74)
ஆஸ்திரியா தாள் பீய் கிரஸ் ஆஸ்திரியா
அரசியல் கட்சி ரிபப்லிகன் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மரியா சிரிவர்
தொழில் மெய்வல்லுனர், நடிகர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.

சொந்த வாழ்க்கைதொகு

அர்னால்டும் அவரது மனைவி மரியா ஸ்ரிவர்-உம் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ஸ்வார்சுநேகர் ஆஸ்திரியாவில் உள்ள தாள் என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். ஸ்வார்சுநேகர் ஆஸ்திரிய ராணுவத்தில் பணியாற்றி ஒரு வருடம் பணி நிறைவு செய்தவர். இவர் ராணுவத்தில் பணியாற்றிய பொழுது ஜூனியர்.திரு.ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டதை வென்றவரும் ஆவார். அர்னால்ட் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக 1966 இல் லண்டன் நகருக்கு சென்றார். அப்பொழுது அவர் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. அந்த போட்டியில் நடுவராக இருந்த சார்லஸ் பென்னெட் என்பவர் அர்னால்டின் திறமைகளை கண்டு வியந்து அவராகவே அர்னால்டிற்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பின்னர் அர்னால்டின் வெற்றிகளின் வாயிலாக படி படியாக முன்னேறி உச்சத்தினை அடைந்தார்.

அர்னால்ட் நடித்த படங்களில் சிலதொகு

டோட்டல் ரீகால், ட்ரூ லைஸ் பிரடேட்டர் டெர்மினேட்டர் 1, 2, 3 கமாண்டோ

மேலும் பார்க்கதொகு