திரு. ஒலிம்பியா
திரு. ஒலிம்பியா (மிசுடர் ஒலிம்பியா, Mr. Olympia) என்பது உடல் கட்டுதல் துறையில் சிறந்து விளங்கும் ஆணழகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இதற்கான சர்வதேச உடல் கட்டுதல் போட்டி அல்லது ஆணழகன் போட்டியை சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB) வருடந்தோறும் நடத்துகிறது. இப்பட்டத்தை அதிகமுறை (8 முறைகள்) வென்றவர்கள் திரு. லீ கேனி (1984–1991) மற்றும் திரு. ரோனி கோல்மன் (1998–2005) ஆவார்கள். நடப்பு திரு. ஒலிம்பியா திரு. சே கட்லர் ஆவார். இதன் முதல் போட்டி 1965ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது, பட்டத்தை அமெரிக்காவின் லேரி ச்காட் தட்டிச் சென்றார். இதில் பெண்களுக்கான உடல் கட்டுதல் போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]
திரு. ஒலிம்பியா போட்டியில் கலந்து கொள்ள அடிப்படைத் தகுதிகள்
தொகு- முதல் தகுதியே திரு. உலகம் ஆணழகன் போட்டியில் முன்னிலை பெற்றிருப்பது தான்
- கடந்த 5 வருடங்களுக்குள் திரு. ஒலிம்பியா வென்றவராக இருத்தல் வேண்டும்.
- கடந்த திரு. ஒலிம்பியா போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.
- கடந்த ஆர்னால்ட் முதல்நிலை போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.
- கடந்த நியூயார்க் ஆண்களுக்கான தொழிற்சார் உடல்கட்டுதல் போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.
- ஏதேனும் சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.
வெற்றிகளின் எண்ணிக்கை வாரியாக பட்டியல்
தொகுவெற்றிகள் | பெயர் | வருடம் |
---|---|---|
8 | ரோனி கோல்மன் | 1998–2005 |
லீ கேனி | 1984-1991 | |
7 | ஆர்னோல்ட் ச்வார்செனேகர் | 1970–1975, 1980 |
6 | டோரியன் யேட்சு | 1992–1997 |
4 | ஜே கட்லர் | 2006–2007, 2009-2010 |
3 | செர்சியோ ஒலிவா | 1967–1969 |
ஃப்ரான்க் சேன் | 1977–1979 | |
2 | லாரி ச்காட் | 1965-1966 |
ஃப்ரான்கோ கொலும்பு | 1976, 1981 | |
1 | சமிர் பன்னவுட்Samir Bannout | 1983 |
க்ரிசு டிகெர்சன் | 1982 | |
டெக்சுடர் சாக்சன் | 2008 |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "IFBB.com - History of Mr. Olympia". Archived from the original on 2012-11-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-06.
- ↑ "Haney and Coleman: A Pair of Eights". https://www.muscleandfitness.com/flexonline/ifbb/haney-and-coleman-pair-eights/.
- ↑ "IFBB 2012 Masters Olympia". Muscle and Fitness. பார்க்கப்பட்ட நாள் July 25, 2021.