ஏஞ்சலினா ஜோலி

அமெரிக்க நடிகை (பிறப்பு 1975)

ஏஞ்சலினா ஜோலி (இயற்பெயர் ஏஞ்சலினா ஜோலி வோய்ட் , பிறப்பு: ஜூன் 4, 1975) அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார்.[1]

ஏஞ்சலினா ஜோலி
ஜோலி 2010 ல் சால்ட் திரைப்படத்தின் வெளியீட்டின் போது.
பிறப்புஏஞ்சலினா ஜோலி வோய்ட்
சூன் 4, 1975 (1975-06-04) (அகவை 49)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க
பணிநடிகை, இயக்குனர்.
செயற்பாட்டுக்
காலம்
1982; 1991–தற்போதும்
துணைவர்பிராட் பிட் (2005–தற்போதும்; 6 குழந்தைகள்)
வாழ்க்கைத்
துணை
ஜானி லீ மில்லர் (1996–1999)
பில்லி பாப் தார்ன்டன் (2000–2003)
பிள்ளைகள்6

1982 ஆம் ஆண்டில் வெளிவந்த லுக்கிங் டூ கெட் அவுட் என்கிற திரைப்படத்தில் குழந்தையாக, தனது அப்பா ஜோன் வோய்ட் உடன் தோன்றியதன் மூலம் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தாலும், குறைந்த முதலீட்டில் தயாரான சைபோர்க் 2 (1993) திரைப்படத்தின் மூலம் தான் அவரது பிரதான நடிப்பு வாழ்க்கை துவங்கியது. ஒரு பெரிய படத்தில் அவரது முதல் பிரதான பாத்திரம் என்பது ஹேக்கர்ஸ் (1995) திரைப்படத்தில் நிகழ்ந்தது. விமர்சனரீதியாக பாராட்டுப் பெற்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களான ஜார்ஜ் வாலஸ் (1997) மற்றும் ஜியா (1998) ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார். அத்துடன் கேர்ள், இன்டர்ரப்டட் (1999) என்கிற குணச்சித்திரப் படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வென்றார். லாரா கிராப்ட்: டோம்ப் ரைடர் (2001) என்னும் காணொளி விளையாட்டு நாயகி லாரா கிராப்டாக அவர் தோன்றிய பின் ஜோலி பரந்த புகழைப் பெற்றார். அன்று முதல் இவர் ஆங்கிலத் திரையுலகின் மிகவும் அறியப்பட்ட மிகவும் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.[2] மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் (2005) திரைப்படமும் குங் ஃபு பான்டா (2008) என்னும் அசைவூட்டத் திரைப்படமும் அவரது மிகப்பெரும் வர்த்தக வெற்றிப் படங்களாக அமைந்தன.[3]

ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின், ஜோலி இப்போது நடிகர் பிராட் பிட் உடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினர் உலகளவில் ஊடகங்கள் கவனம் ஈர்ப்பவர்களாய் திகழ்கின்றனர். ஜோலிக்கும் பிட்டுக்கும் மடோக்ஸ், பாக்ஸ், சகரா ஆகிய மூன்று தத்தெடுத்த குழந்தைகளும், ஷிலோ, க்னாக்ஸ், விவியென் ஆகிய மூன்று ரத்தவழி குழந்தைகளும் உள்ளனர்.

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜோன் வோய்ட், மர்செலின் பெர்ட்ரான்ட் தம்பதியருக்கு மகளாய் ஜோலி பிறந்தார். தந்தை வழியில், ஜோலி செக்கோஸ்லேவாக்கிய மற்றும் ஜெர்மனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4][5] தாயின் வழியில் பிரெஞ்சு-கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.[6][7][8]

1976 ஆம் ஆண்டில் ஜோலியின் பெற்றோர்கள் பிரிந்த பிறகு, ஜோலியும் அவர் சகோதரரும் தாயினால் வளர்க்கப்பட்டனர்.[9] குழந்தையாக இருந்த சமயத்தில், தனது தாயுடன் ஜோலி நிறைய திரைப்படங்களைப் பார்த்து வந்தார். இது தனது நடிப்பு ஆசைக்கு மிகவும் உத்வேகமளித்ததாய் பின்னர் அவர் விளக்கமளித்தார். ஜோலியிடம் அவரது தந்தை செல்வாக்கு செலுத்தவில்லை.[10] ஜோலிக்கு பதினொரு வயதான போது, அந்த குடும்பம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபெயர்ந்தது. தான் நடிக்க விரும்புவதாய் தீர்மானித்த ஜோலி லீ ஸ்ட்ராஸ்பெர்க் மேடைநடிப்புப் பயிலகத்தில் பயிற்சி பெற பதிவு செய்தார். இரண்டு ஆண்டுகள் இங்கு பயிற்சி பெற்ற இவர் பல்வேறு மேடைத் தயாரிப்புகளில் தோன்றினார்.

14 ஆம் வயதில், தனது நடிப்பு வகுப்புகளை கைவிட்ட இவர் ஒரு இறுதிச்சடங்கு நிர்வாகியாகும் கனவைக் கொண்டிருந்தார்.[11] இந்த காலகட்டத்தில், கறுப்பு ஆடை அணிந்து கொண்டார். தனது முடிக்கு கருஞ்சிவப்பு சாயமிட்டுக் கொண்டார்.[10] இரண்டு வருடங்களின் பின், தனது தாயின் வீட்டிற்கு சில கட்டிடங்கள் தள்ளி ஒரு வாகனப் பட்டறைக்கு மேலே ஒரு குடியிருப்பு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.[9] மீண்டும் திரைப் படிப்புகளுக்கு திரும்பிய அவர், உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். சமீப காலங்களில் இந்த காலகட்டம் குறித்து குறிப்பிடுகையில், "நான் இன்னும் மார்பில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு முரட்டு இளைஞியாகத் தான் உணர்கிறேன், எப்போதும் அப்படித்தான் உணர்வேன்” என்று கூறியிருக்கிறார்.[12]

பின்பு பெவர்லி ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் (பிற்காலத்தில் மோரெனோ உயர் நிலைப் பள்ளி) ஒரு மாணவியாக இருந்த காலத்தையும் அப்பகுதியின் மிகவும் வசதி படைத்த குடும்ப குழந்தைகளிடையே தனிமைப்பட்டு தான் உணர்ந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். ஜோலியின் தாய் சற்று கண்ணியமான வருமான அளவை மட்டுமே கொண்டு பிழைத்து வந்தார். ஜோலி பல சமயங்களில் கைமாறிய உடைகளையே உடுத்தினார். ரொம்பவும் ஒல்லியாக இருந்தது, கண்ணாடிகள் அணிவது மற்றும் பல்வளைகள் அணிந்தது ஆகியவை காரணமாக மற்ற மாணவர்களும் இவரை கேலி செய்தனர்.[10] வடிவழகு துறையில் இவரது ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்றபோது இவரது சுயமரியாதை இன்னும் சுருங்கிப் போனது. அவர் உடலில் வெட்டிக் கொள்ளத் துவங்கினார். இது குறித்து பின்னர் கூறுகையில், "சில காரணங்களால், நானே என்னை வெட்டிக் கொள்வதும் வலியை உணர்வதும் செய்து கொண்டிருந்தேன். ஒருவேளை உயிர் கொண்டிருப்பதை உணர்வதாலோ அல்லது ஒரு வகை சுதந்திரத்தை உணர்வதாலோ, அது எனக்கு ஒருவகை சிகிச்சை போல் அமைந்திருந்தது" என்று அவர் தெரிவித்தார்.[13]

 
1988 ஆஸ்கர் விழா சமயத்தில் ஜோன் வோய்ட். அவரது வலது தோளுக்கு பின்னால் ஜோலியைக் காணலாம்.

ஜோலி வெகு காலம் தனது தந்தையிடம் இருந்து ஒதுங்கியே வாழ்ந்தார். இருவரும் சமரசம் செய்து கொள்ள முயன்றனர். தந்தை இவருடன் லாரா கிராப்ட்: டோம் ரெய்டர் (2001) படைப்பில் உடன் தோன்றினார்.[9] 2002 ஆம் ஆண்டு ஜூலையில், தனது பெயரிலிருக்கும் வோய்ட் என்கிற துணைப்பெயரை நீக்கி விட்டு "ஏஞ்சலினா ஜோலி" என்று சட்டப்பூர்வமாய் தனது பெயரை மாற்றிக் கொள்வதற்கு ஜோலி விண்ணப்பித்தார்; இந்த பெயர் மாற்றம் செப்டம்பர் 12, 2002 அன்று அதிகாரப்பூர்வமாகியது.[14] அதே ஆண்டு ஆகத்து மாதத்தில், தனது மகளுக்கு "தீவிரமான மனநலப் பிரச்சினைகள்" இருந்ததாக வோய்ட் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். தனது தந்தையுடன் இனி உறவினைத் தொடர தனக்கு விருப்பமில்லை என்று பின்னர் ஜோலி சுட்டிக்காட்டினார். "நானும் எனது தந்தையும் பேசிக் கொள்வதில்லை. அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" என்று ஜோலி கூறினார். தனது தந்தையிடம் இருந்து தான் ஒதுங்கியதற்கான காரணங்களை தான் விளம்பரப்படுத்த விரும்பாததன் காரணம் தனக்கு ஒரு தத்துப் பிள்ளை இருக்கிறான் என்பதாலேயே என்றும், வோய்ட் உடன் உறவைப் பேணுவதை ஆரோக்கியமானதாக தான் கருதவில்லை என்றும் ஜோலி தெரிவித்தார்.[15]

ஆரம்ப தொழில் வாழ்க்கை, 1993-1997

தொகு

14 வயதாகும் போது ஜோலி ஒரு நாகரிக அணிவகுப்பு மங்கையாக தனது வாழ்க்கையைத் துவக்கினார். முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டனில் நாகரிக விளம்பரத் தொழிலில் அவர் ஈடுபட்டார். அந்த சமயத்தில் ஏராளமான இசை காணொளிகளிலும் தோன்றினார். மீட் லோஃப் ("ராக் & ரோல் ட்ரீம்ஸ் கம் த்ரூ"), அன்டோனெலோ வென்டிடி ("அல்டா மரியா"), லென்னி கிராவிட்ஸ் ("ஸ்டாண்ட் பை மை வூமன்"), மற்றும் தி லெமன்ஹெட்ஸ் ("இட்ஸ் எபவுட் டைம்") ஆகியோரது காணொளிகள் இதில் அடங்கும். 16 வயதில், மீண்டும் நாடகத்தின் பக்கம் திரும்பிய ஜோலி தனது முதல் பாத்திரமாக ஜெர்மானிய அல்லிராணியாக நடித்தார். ஒருவரைப் போல் நடந்து கொள்வதற்கு அவரை உற்றுக் கவனிக்கும் பழக்கத்தை தனது தந்தை பின்பற்றுவதைக் கவனித்த ஜோலி தனது தந்தையிடம் இருந்து அப்பழக்கத்தைக் கற்றுக் கொண்டார். இந்த காலத்தில் அவர்களது உறவு குறைந்த உரசலுடன் இருந்தது.[10]

பின் ஜோலியின் சகோதரர் எடுத்த ஐந்து மாணவர் படங்களில் ஜோலி தோன்றினார். ஆனால் ஜோலியின் தொழில்முறை திரைப்பட வாழ்க்கை 1993 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. சைபோர்க் 2 என்கிற குறைந்த நிதியாதாரத்தில் தயாரான திரைப்படத்தில் தனது முதல் பிரதான பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஏறக்குறைய ஒரு எந்திர மனுசி போல் செயல்படும் இவர் போட்டி உற்பத்தியாளரின் தலைமையகத்திற்குள் தனது கவர்ச்சியைப் பயன்படுத்தி உள்ளே சென்று பின் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொள்ள வேண்டும். பின் வித்அவுட் எவிடென்ஸ் படத்தில் துணைப் பாத்திரம் ஏற்றார். அதனைத் தொடர்ந்து, தனது முதல் ஹாலிவுட் படமான ஹேக்கர்ஸ் (1995) படத்தில் ஜோலி கேத் லிபி என்னும் பாத்திரத்தில் நடித்தார். இச்சமயத்தில் தான் தனது முதல் கணவரான ஜானி லீ மில்லரை ஜோலி சந்தித்தார். ஜோலியிடம் அவரது தந்தையான ஜோன் வோய்ட்டின் அழகிய சொரூபமான தோற்றம் இருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் எழுதியது".[16] இந்த படம் திரையரங்குகளில் லாபம் ஈட்டித் தர தவறினாலும், பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.[17]

1996 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான லவ் இஸ் ஆல் தேர் இஸ் படத்தில் ஜினா மலாஸிஸியாக ஜோலி தோன்றினார். இப்படத்தை ஒருவகையில் ரோமியோ ஜூலியட் டின் தற்கால மெல்லிய தழுவலாகக் கூறலாம். நியூயார்க்கின் பிராங்ஸ் பகுதியில் இருக்கும் இரண்டு போட்டி இத்தாலிய குடும்ப உணவக உரிமையாளர்களுக்கு இடையே நிகழ்வதாக கதை அமைந்தது. மோஜவே மூன் (1996) அத்தியாயத் திரைப்படத்தில் எலினோர் ரிக்பி என்னும் ஒரு இளம்பெண்ணாக ஜோலி நடித்தார். இதில் தனது தாய் மீது மிகுந்த பாசம் காட்டும் டேனி எய்லோவின் பாத்திரத்தின் மீது ஜோலி காதல் கொள்கிறார். தாயாக ஆனி ஆர்சர் நடித்தார். 1996 ஆம் ஆண்டில், ஜோலி மார்கரெட் "லெக்ஸ்" சடோவ்ஸ்கி என்னும் பாத்திரத்திலும் நடித்தார். தங்களை பாலியல் தொந்தரவு செய்த ஒரு ஆசிரியரை உதைத்த ஐந்து இளம் பெண்கள் உருவாக்கும் ஒரு அசாதாரண உறவு பற்றிய இந்த பாக்ஸ்ஃபயர் என்னும் படத்தில் அந்த ஐந்து பேரில் ஜோலியும் ஒருவர். பாத்திரப் படைப்பு அபத்தமாய் இருந்தாலும் ஜோலியின் இருப்பு இந்த அரைத்த மாவை அரைக்கும் நிலையிலிருந்து படம் மீள்வதற்கு உதவியிருக்கிறது என்று இவரது நடிப்பு குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எழுதியது.[18]

1997 ஆம் ஆண்டில், பிளேயிங் காட் என்னும் திரைப்படத்தில் டேவிட் டசோவ்னி உடன் ஜோலி நடித்தார். கதை லாஸ் ஏஞ்சல்சின் நிழல் உலகத்தில் நிகழ்வதாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.[19] அதன்பின் தொலைக்காட்சி திரைப்படமான ட்ரூ வூமன் படத்தில் அவர் தோன்றினார்.

திருப்புமுனை, 1997-2000

தொகு

1997 ஆம் ஆண்டில் வந்த ஜார்ஜ் வாலஸ் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் கார்னெலியா வாலஸ் பாத்திரத்தை ஜோலி ஏற்று நடித்த பின் அவரது தொழில் வாய்ப்புகள் மேம்படத் துவங்கின. இந்த படத்திற்காக இவர் கோல்டன் குளோப் விருதினை வென்றதோடு எம்மி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸாக கேரி ஸினிஸி நடித்திருந்தார். ஜான் ஃபிரான்கென்ஹெய்மர் இயக்கிய இந்த படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, மற்ற விருதுகளுடன் சேர்ந்து, தொலைக்காட்சிக்கென உருவான சிறந்த குறுந்தொடர்/அசைவுப் படத்திற்கான கோல்டன் குளோப் விருதினையும் பெற்றது. 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் சுடப்பட்டு முடங்கிப் போன முன்னாள் பிரிவினைவாத ஆளுநரின் இரண்டாவது மனைவி பாத்திரத்தில் ஜோலி நடித்திருந்தார்.

1998 ஆம் ஆண்டில் எச்பிஓ'வின் ஜியா படத்தில் ஜோலி நடித்தார். இதில் ஜியா கரன்கி என்னும் நாகரிக விளம்பர மங்கை பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். பாலியல் வாழ்க்கை, போதை மருந்துகள், உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்த இந்த படம், தனது போதை பழக்கத்தின் காரணமாக கரன்கியின் வாழ்க்கை, தொழில் அழிந்தமை, அவரது வீழ்ச்சி, எயிட்சு பாதித்தமையால் சாவு ஆகியவற்றை காலவரிசையில் பதிவு செய்தது.[20] தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒரு கோல்டன் குளோப் விருதினை வென்ற ஜோலி எம்மி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார். அத்துடன் தனது முதலாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதினையும் அவர் வென்றார். லீ ஸ்ட்ராஸ்பெர்க்'கின் வழிமுறை நடிப்பை பின்பற்றி ஜோலி தனது முந்தைய பல படங்களின் படப்பிடிப்பு சமயத்தில் காட்சிகளுக்கு இடையிலும் அந்த பாத்திரத்திலேயே இருக்க விரும்புவார் என்பதாகக் கூறப்பட்டது. இதனால் கையாளுவதற்கு கடினமானவர் எனும் பேரும் அவருக்குக் கிட்டியது.[21][21]

ஜியா வைத் தொடர்ந்து, நியூயார்க்கிற்கு இடம்பெயர்ந்து விட்ட ஜோலி கொஞ்ச காலத்திற்கு நடிப்பதையே நிறுத்தி விட்டார். காரணம் "கொடுக்க இனி எதுவுமில்லை" என்று அவர் கருதினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்பட உருவாக்கம் பயில பதிவு செய்த அவர் எழுத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டார். தன்னை ஒருங்குபடுத்திக் கொள்ள இது உதவியதாக பின்னர் அவர் தெரிவித்தார்.[22]

1998 நிழல் உலகத் திரைப்படமான ஹெல்'ஸ் கிச்சன் படத்தில் குளோரியா மெக்நீரியாக நடித்ததன் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார். அதே ஆண்டின் பிற்பகுதியில் பிளேயிங் பை ஹார்ட் படத்தில் தோன்றினார். இதில் சீன் கானரி, கிலியன் ஆன்டர்சன், ரியான் பிலிப் மற்றும் ஜோன் ஸ்டீவர்ட் ஆகியோர் அடங்கிய நிகழ்ச்சிக் குழுவின் பாகமாக நடித்தார். இந்த திரைப்படம் அதிகமான அளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக ஜோலி ரொம்பவும் பாராட்டப் பெற்றார்.[23] தேசிய திறனாய்வு வாரியம் வழங்கும் திருப்புமுனையான நடிப்புக்கான விருதினை ஜோலி வென்றார்.

1999 ஆம் ஆண்டில், மைக் நெவெல்லின் நகைச்சுவைக் குணச்சித்திரத் திரைப்படமான புஷிங் டின் படத்தில் ஜோலி நடித்தார். இதில் ஜான் குஸாக், பில்லி பாப் தோன்டன், கேட் பிளாஞ்செட் ஆகியோர் நடித்திருந்தனர். தோன்டனின் ஆள்மயக்கும் மனைவியாக ஜோலி நடித்தார். இந்த படம் கலவையான வரவேற்பை விமர்சகர்களிடம் இருந்து பெற்றது. குறிப்பாக ஜோலியின் பாத்திரம் விமர்சனத்திற்குள்ளானது.[24] அதன்பின் ஜோலி தி போன் கலெக்டர் (1999) படத்தில் டென்ஸெல் வாஷிங்டன் உடன் இணைந்து நடித்தார். இது ஜெஃப்ரி டீவர் எழுதிய ஒரு மர்ம புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். தனது காவலதிகாரி தந்தையின் தற்கொலையில் மனப் பிரமையுற்றிருக்கும் நிலையில், ஒரு தொடர் கொலைகாரனைப் பிடிக்க உதவும் அமேலியா டோனாகி என்னும் ஒரு காவல் அதிகாரி பாத்திரத்தில் ஜோலி நடித்தார். இந்த படம் உலகளவில் 151 மில்லியன் டாலர் தொகையை வசூலித்தது.[3] ஆனால் விமர்சனரீதியாக தோல்விப் படமாகும்.[25][26]

அடுத்ததாக ஜோலி, கேர்ள், இன்டரப்டட் (1999) படத்தில் லிசா ரோவ் என்னும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மனநோயாளியாக துணைப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இது சுசானா கெய்சன் என்னும் மன நோயாளியின் கதையைச் சொல்லும் ஒரு படமாகும். இது கெய்சனின் மூல நினைவுப் புத்தகமான கேர்ள், இன்டரப்டடின் தழுவலாகும். பிரதான பாத்திரம் ஏற்றிருந்த வினோனா ரைடருக்கு மறுவாழ்வு தரும் என்பதாக நம்பப்பட்ட இந்த படத்தில் , அதற்குப் பதிலாய் ஹாலிவுட்டில் ஜோலியின் இறுதி திருப்புமுனையை குறிக்கும் படமாக இது அமைந்தது.[27] தனது மூன்றாவது கோல்டன் குளோப் விருது, தனது இரண்டாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஒரு அகாதமி விருது ஆகிய விருதுகளை ஜோலி வென்றார்.[28]

2000 ஆவது ஆண்டில், கோன் இன் 60 செகண்ட்ஸ் என்னும் பிரம்மாண்ட வெற்றிப் படத்தில் ஜோலி தோன்றினார். இதில் நிகோலஸ் கேஜ் என்னும் கார் திருடனின் முன்னாள் பெண் நண்பி சாரா வேலாண்ட் என்னும் பாத்திரத்தில் ஜோலி நடித்திருந்தார். இது சிறிய பாத்திரம் தான்.[29] லிசா ரோவ் என்னும் கனமான பாத்திரத்திற்குப் பிறகு இந்த படம் ஒரு வரவேற்கத்தக்க நிவாரணமாக அமைந்தது என்று பின்னர் ஜோலி விளக்கினார். அதுவரையான காலத்தில் ஜோலியின் மிக அதிக வருவாயைக் கொணர்ந்த படமாக அது ஆனது. சர்வதேச அளவில் 237 மில்லியன் டாலர்களை இது சம்பாதித்துக் கொடுத்தது.[3]

2001 முதல் இன்று வரை

தொகு

தனது நடிப்புத்திறனுக்காக ஜோலி மிகவும் மதிக்கப்பட்டாலும், இக்காலம் வரை ஜோலியின் திரைப்படங்கள் பரந்த அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கவில்லை. ஆனால் லாரா கிராப்ட்: டோம்ப் ரெய்டர் (2001) அவரை ஒரு சர்வதேச நட்சத்திர நாயகி ஆக்கியது. பிரபல டோம்ப் ரெய்டர் காணொளி விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் லாரா கிராஃப்ட் என்னும் நாயகி பாத்திரத்திற்காக ஜோலி பிரித்தானிய பேச்சுவழக்கை கற்றுக் கொள்ளவும் தீவிரமான தற்காப்புக் கலை பயிற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டியிருந்தது. ஜோலி பொதுவாக அவரது உடல்ரீதியான நடிப்பிற்காக பாராட்டப்பட்டார் என்றாலும் இந்த படம் பெரும்பாலும் எதிர்மறை திறனாய்வுகளையே உருவாக்கியது.[30] ஆயினும் இந்த படம் சர்வதேசரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்து உலகெங்கிலும் $275 மில்லியன் தொகையை ஈட்டிக் கொடுத்ததோடு,[3] ஒரு அதிரடி பெண் சண்டை நட்சத்திரமாக சர்வதேச அளவில் ஜோலியின் பெயரை உயர்த்தியது.

அதன்பின் ஒரிஜினல் சின் (2001) திரைப்படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பெண்ணாக ஜூலியா ரசல் எனும் பாத்திரத்தில் அன்டோனியோ பன்டெரெசிற்கு ஜோடியாக நடித்தார். இது கார்னெல் வூல்ரிச் எழுதிய வால்ட்ஸ் இன்டூ டார்க்னெஸ் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படம் விமர்சனரீதியாக பெரும் தோல்வியைத் தழுவியது.[31] 2002 ஆம் ஆண்டில், லைஃப் ஆர் சம்திங் லைக் இட் படத்தில் லெனி கெரிகான் பாத்திரத்தில் நடித்தார். இது இன்னும் ஒரு வாரத்தில் மரணத்தை தழுவப் போவதாகக் கூறப்படும் ஒரு சுறுசுறுப்பு மிகுந்த தொலைக்காட்சி செய்தியாளர் குறித்த படமாகும். இந்த படம் விமர்சகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஜோலியின் நடிப்பு நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.[32]

லாரா கிராஃப்ட் பாத்திரத்தில் ஜோலி மீண்டும் 2003 ஆம் ஆண்டில் லாரா கிராப்ட் டோம்ப் ரெய்டர் படத்தில் நடித்தார். இந்த தொடர்வரிசை திரைப்படம் மூலப் பட அளவிற்கு வருமானம் ஈட்டித் தரவில்லை என்றாலும், சர்வதேச திரையரங்கு வசூலாய் 156 மில்லியன் டாலர் தொகையை சம்பாதித்தது.[3] அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜோலி பியான்ட் பார்டர்ஸ் என்னும் ஆப்பிரிக்காவின் உதவித் தொழிலாளர்கள் குறித்த படத்தில் நடித்தார். மனிதாபிமான நிவாரண விடயத்தை ஊக்குவிப்பதில் ஜோலியின் அக்கறையை பிரதிபலித்தபோதிலும், இந்த படம் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றி பெறாமல் போனது.[33]

2004 ஆம் ஆண்டில், டேகிங் லைவ்ஸ் என்னும் திகில் படத்தில் இதான் ஹாக் உடன் ஜோலி நடித்தார். இதில் இலியானா ஸ்காட் என்னும் பாத்திரத்தை இவர் ஏற்றிருந்தார். ஒரு தொடர் கொலைகாரனை பிடிப்பதற்காக மோன்ட்ரியல் சட்ட அமலாக்கத் துறையால் அழைக்கப்படும் ஒரு மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக இதில் அவர் நடித்திருந்தார். இந்த படம் கலவையான வரவேற்பை பெற்றது.[34] அத்துடன் டிரீம்ஒர்க்ஸ் தயாரிப்பு படமான ஷார்க் டேல் (2004) என்னும் அசைவூட்டப் படத்தில் வரும் லோலா என்கிற நன்னீர் வளர்ப்பு மீனுக்கு குரலும் ஜோலி அளித்திருக்கிறார். அத்துடன் கெர்ரி கோன்ரானின் ஸ்கை கேப்டன் அன்ட் தி வேர்ல்டு ஆஃப் டுமாரோ (2004) திரைப்படத்திலும் சற்று நேரம் ஜோலி தோன்றுவார். இது முழுக்கவும் ஒரு நீலத்திரைக்கு முன்னதாக நடிகர்கள் நடித்த கற்பனை சாகசத் திரைப்படமாகும். அத்துடன் 2004 ஆம் ஆண்டில், அலெக்ஸாண்டர் என்னும் படத்தில் ஒலிம்பியாசாகவும் நடித்தார். இது பேரரசர் அலெக்சாண்டரின் வாழ்க்கை குறித்து ஆலிவர் ஸ்டோன் எடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். இந்த படம் உள்நாட்டில் தோல்வியுற்றது. அலெக்சாண்டரின் இருபால் பாலியல் விருப்ப குணாதிசய விவரிப்பை ஏற்றுக் கொள்ளாதது தான் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாமல் போனதன் காரணம் என்று ஸ்டோன் தெரிவித்தார்,[35] ஆனால் அமெரிக்காவிற்கு வெளியே சர்வதேச அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படம் 139 மில்லியன் டாலர் வசூல் செய்தது.[3]

2005 ஆம் ஆண்டில் ஜோலி நடித்த ஒரே திரைப்படம் மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் என்கிற அதிரடி நகைச்சுவைப் படமாகும். டோக் லிமான் இயக்கிய இத்திரைப்படம், சுவாரஸ்யமில்லாமல் திருமண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியர், தாங்கள் இருவருமே ரகசிய கொலைப்படையாளர் என்பதை கண்டுகொள்வதாக செல்கிறது. பிராட் பிட் ஜோடியாக ஜேன் ஸ்மித் என்கிற பாத்திரத்தில் ஜோலி நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் பொதுவாக நாயகன் நாயகி இடையேயான ரசாயனம் பொதுவாக பாராட்டப்பட்டது.[36] உலகளவில் 478 மில்லியன் டாலர் வசூல் செய்த இந்த திரைப்படம், 2005 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும்.[3]

அதன்பின் ராபர்ட் டி நெய்ரோவின் தி குட் ஷெப்பர்டு (2006) திரைப்படத்தில் ஜோலி தோன்றினார். இது அமெரிக்க உளவுத் துறையின் ஆரம்ப கால வரலாறு குறித்த படமாகும். எட்வர்ட் வில்சன் பார்வையில் விரிவதாக அமைக்கப்பட்டது. இந்த பாத்திரத்தில் மேட் டமோன் நடித்தார். வில்சனின் கவனிக்கப்படாத மனைவி மார்கரெட் ரஸெல் என்னும் துணைப் பாத்திரத்தில் ஜோலி நடித்தார்.[37]

 
சேஞ்ச்லிங் படப்பிடிப்பு தளத்தில் கிறிஸ்டின் கோலின்ஸ் ஆக ஜோலி, நவம்பர் 2007

2007 ஆம் ஆண்டில், எ ப்ளேஸ் இன் டைம் என்கிற ஆவணப் படத்தின் மூலம் தனது இயக்குநர் முயற்சியில் ஜோலி காலடி எடுத்து வைத்தார். இது உலகெங்கும் இருக்கும் 27 இடங்களின் வாழ்க்கையை ஒற்றை வாரத்தில் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த திரைப்படம் ட்ரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அத்துடன் தேசிய கல்வி கழகம் மூலமாக, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது.[38] மைக்கேல் வின்டர்பாட்டமின் ஆவணப் பட வகை நாடகமான எ மைட்டி ஹார்ட் (2007) படத்தில் ஜோலி மேரியானே பியர்ல் பாத்திரத்தில் நடித்தார். இது பாகிஸ்தானில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியாளர் டேனியல் பியர்ல் கடத்தி கொல்லப்பட்டது குறித்த படமாகும். மேரியானே பியர்லின் நினைவிதழான எ மைட்டி ஹார்ட் அடிப்படையில் அமைந்த இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஜோலியின் நடிப்பு குறித்து "மரியாதையுடனும் ஒரு வித்தியாசமான பேச்சுத் தொனியை முழுமையாக உள்வாங்கியும்" செய்யப்பட்டிருப்பதாகக் கூறிப் பாராட்டியது.[39] இந்த படம் ஜோலிக்கு நான்காவது கோல்டன் குளோப் விருதினை வென்று தந்ததோடு மூன்றாவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுக்கான பரிந்துரையையும் வென்றது. ராபர்ட் ஸெமெகிஸ் உருவாக்கிய அசைவூட்டக் காவியமான பியோவல்ஃப் (2007) படத்தில் கிரென்டெலின் தாயாகவும் ஜோலி நடித்தார்.

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த அதிரடித் திரைப்படமான வான்டட் படத்தில், ஜேம்ஸ் மக்கவாய் மற்றும் மோர்கான் ஃப்ரீமேன் உடன் ஜோலி இணைந்து நடித்தார். இது மார்க் மில்லர் எழுதிய ஒரு வரைகலை புதினத்தின் தழுவலாகும். இந்த படம் பெரியளவில் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றதோடு, சர்வதேச வெற்றிப் படமாகவும் நிரூபணமானது. உலகெங்கிலும் 342 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.[3] ட்ரீம்ஒர்க்ஸ் தயாரித்த அசைவூட்டப் படமான குங் ஃபு பான்டா (2008) படத்தில் மாஸ்டர் டைக்ரெஸ் குரலையும் ஜோலி வழங்கினார். உலகளவில் 632 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய இந்த படம், இன்று வரை ஜோலியின் மிக உயர்ந்த வருவாய் ஈட்டிய படமாக இருக்கிறது.[3] அதே ஆண்டில், ஜோலி கிளின்ட் ஈஸ்ட்வுட்'டின் நாடகமான சேஞ்ச்லிங் (2008) படத்தில் நாயகி கிறிஸ்டின் கோலின்ஸ் ஆக நடித்தார். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரங்கேற்றம் கண்டது.[40] 1928 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண் ஒருவர் கடத்தப்பட்ட தனது மகனுடன் மீண்டும் இணைகிறார், அதன்பின் அவன் ஒரு மோசடி ஆசாமி என்பது அவளுக்கு தெரிய வருகிறது. இந்த உண்மைக் கதையின் அடிப்படையில் இந்தப் படைப்பு உருவானது. தனது இரண்டாவது அகாதமி விருது பரிந்துரையை ஜோலி பெற்றார். அத்துடன் பாப்தா (BAFTA) விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.[41][42]

மனிதாபிமான பணிகள்

தொகு

கம்போடியாவில் டோம்ப் ரெய்டர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஜோலி தனிப்பட்ட முறையில் முதன்முதலில் அறிந்து கொண்டார். இறுதியில் சர்வதேச பிரச்சினைக் களங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தை அணுகினார்.[43] இந்தப் பகுதிகளின் நிலைமைகளை மேலும் அறிந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிடத் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில், தனது முதல் களப் பார்வையிடல் பயணத்தை துவக்கிய இவர், சியரா லியோன் மற்றும் தான்சானியாவுக்கு 18 நாள் பயணம் மேற்கொண்டார். தான் பார்த்த விடயங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சிகரமானவையாக இருந்தன என்பதை அவர் பின்னர் வெளிப்படுத்தினார்.[43] அடுத்த வந்த சில மாதங்களில் இரண்டு வாரங்கள் கம்போடியாவுக்கு திரும்பிய அவர், பின் பாகிஸ்தானில் இருந்த ஆப்கான் அகதிகளை சந்தித்ததோடு சர்வதேச ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அளித்த அவசர கோரிக்கைக்கு மறுமொழியாய் அவர்களுக்கு 1 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையளித்தார்.[44] தனது பயணங்கள் தொடர்பான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதை வலியுறுத்திய அவர், தனது அத்தனை பயணங்களின் போதும் ஒரு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு களப் பணியாளருக்கு வழங்கப்படும் அதே அடிப்படையான வேலை மற்றும் வாழ்க்கை வசதிகளையே பகிர்ந்து கொண்டார்.[43] ஜெனிவாவில் உள்ள ஐநா அகதிகளுக்கான அமைப்பின் தலைமையகத்தில் ஆகஸ்டு 27, 2001 அன்று அவ்வமைப்பின் நல்லெண்ண தூதராக ஜோலி அறிவிக்கப்பட்டார்.[45]

ஜோலி உலகெங்கிலும் களப் பணிகளில் பங்கேற்றிருக்கிறார். 30க்கும் அதிகமான நாடுகளில் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மனிதர்களுடன் சந்தித்திருக்கிறார்.[46] இவர் எதைச் சாதிக்கும் நம்பிக்கை கொண்டிருந்தார் எனக் கேட்டபோது ஜோலி, நடந்ததை கண்டு அஞ்சாமல் வாழ்ந்து காட்டுவதற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று கூறினார்.[47] 2002 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள தாம் ஹின் அகதி முகாமையும் ஈக்வடாரில் உள்ள கொலம்பிய அகதிகள் முகாமையும் ஜோலி பார்வையிட்டார்.[48] பின்னர் கொசோவோவில் இருக்கும் பல்வேறு ஐநா அகதிகள் அமைப்பின் இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கென்யாவில் முக்கியமாக சூடானில் இருந்தான அகதிகள் கொண்டதான ககுமா அகதிகள் முகாமுக்கும் சென்று பார்வையிட்டார். நமீபியாவில் பியாண்ட் பார்டர்ஸ் படப்பிடிப்பு நடந்தபோது அங்கோலாவின் அகதிகளுடன் ஜோலி சந்திப்பு நிகழ்த்தினார்.

2003 ஆம் ஆண்டில், தான்சானியாவுக்கு ஆறு நாள் பயணத்தை ஜோலி மேற்கொண்டார். இங்கு காங்கோ அகதிகள் இருந்த மேற்கத்திய எல்லை முகாம்களுக்கு இவர் பயணம் செய்தார். அத்துடன் இலங்கைக்கும் ஒரு வார பயணத்தை இவர் மேற்கொண்டார். பின்னர் வடக்கு காகசஸ் பகுதிக்கு இவர் பயணம் செய்து தனது நான்கு நாள் ரஷ்ய பயணத்தை முடித்தார். இவரது பியான்ட் பார்டர்ஸ் திரைப்படம் வெளிவந்த அதே சமயத்திலேயே நோட்ஸ் ஃபிரம் மை டிராவல்ஸ் என்கிற தொகுப்பு புத்தகத்தையும் இவர் வெளியிட்டார். இது அவரது ஆரம்ப களப் பணிகள் (2001-2002) பற்றிய குறிப்புகளை காலக்கிரம வரிசையில் அடக்கியிருந்தது. 2003 டிசம்பரில் ஜோர்டானில் தனிப்பட்ட பயணத்தின் போது ஜோர்டானின் கிழக்கத்திய பாலைவனத்தில் ஈராக்கிய அகதிகளை பார்வையிட அவர் கோரினார். அந்த மாதத்தின் பிற்பகுதியில் சூடான் அகதிகளைச் சந்திக்க அவர் எகிப்துக்கு சென்றார்.

அமெரிக்காவிற்குள் தனது முதல் ஐநா பயண சமயத்தில், 2004 ஆம் ஆண்டில் அரிசோனாவுக்கு சென்ற ஜோலி, மூன்று இடங்களில் கைது செய்யப்பட்டிருந்த புகலிடம் கோருவோரை பார்வையிட்டதோடு, பீனிக்ஸில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சவுத்வெஸ்ட் கீ புரோகிராம் என்னும் இடத்திற்கும் பார்வையிட்டார். 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சாத் சென்ற அவர், எல்லைப் பகுதிகளுக்கும் மேற்கு சூடானின் டார்ஃபர் பகுதியில் இருந்து சண்டைக்கு தப்பி ஓடி வந்த அகதிகள் முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டார். நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் அந்த பகுதிக்கு திரும்பிய அவர், இந்த முறை நேரடியாகவே மேற்கு டார்ஃபர் பகுதிக்கு சென்றார். அத்துடன் 2004 ஆம் ஆண்டிலும், ஜோலி தாய்லாந்தில் உள்ள ஆப்கன் அகதிகளை சந்தித்தார். அத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறைக் கால சமயத்தில் லெபனானுக்கும் தனிப்பட்ட முறையில் சென்று வந்தார். பெய்ரூட்டில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பு பிராந்திய அலுவலகத்தை பார்வையிட்ட அவர், சில இளம் அகதிகளையும் லெபனான் தலைநகரில் இருந்த புற்றுநோயாளிகளையும் சந்தித்தார்.[49]

2005 ஆம் ஆண்டில், ஜோலி ஆப்கன் அகதிகள் இருந்த பாகிஸ்தானிய முகாம்களைப் பார்வையிட்டார். அத்துடன் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் பிரதமர் சௌகத் அஸிஸையும் சந்தித்தார். 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த காஷ்மீர் பூகம்பத்தின் தாக்கத்தைக் காண நவம்பர் வார இறுதி நன்றி தெரிவிப்பு சமயத்தில் பிராட் பிட் உடன் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்தார். 2006 ஆம் ஆண்டில் ஜோலியும் பிட்டும் ஹைதிக்கு பறந்து சென்று, அங்கு ஹைதியில் பிறந்த ஹிப் ஹாப் இசைக் கலைஞரான வைஸ்லெஃப் ழான் (Wyclef Jean) நிறுவியிருக்கும் தொண்டு நிறுவனமான யெலே ஹைதி (Yéle Haïti)ஆதரவில் இயங்கும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் எ மைட்டி ஹார்ட் படப்பிடிப்பு நடந்தபோது, புதுடெல்லியில் இருந்த ஆப்கன் மற்றும் பர்மா அகதிகளை ஜோலி சந்தித்தார். 2006 கிறிஸ்துமஸ் நாளை கோஸ்டா ரிகாவின் சான் ஜோஸில் கொலம்பிய அகதிகளுடன் செலவிட்ட அவர் அங்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார். 2007 ஆம் ஆண்டில் டார்ஃபரில் இருந்தான அகதிகளுக்கு பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதை மதிப்பீடு செய்ய மீண்டும் இரண்டு நாள் பயணம் வந்தார் ஜோலி. இதனையடுத்து சாத் மற்றும் டார்ஃபரில் உள்ள மூன்று நிவாரண அமைப்புகளுக்கு $1 மில்லியன் தொகையை ஜோலி மற்றும் பிட் நன்கொடையளித்தனர்.[50] சிரியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட ஜோலி, ஈராக்கிற்கும் இருமுறை பயணம் செய்தார், அங்கு ஈராக் அகதிகளையும் அத்துடன் பன்னாட்டு படைகள் மற்றும் அமெரிக்க துருப்புகளையும் அவர் சந்தித்தார்.[51]

 
உலக அகதிகள் தினத்தில் ஜோலியும் கான்டலிசா ரைஸும், ஜூன் 2005

காலப் போக்கில், அரசியல் மட்டத்தில் மனிதாபிமான விடயங்களை ஊக்குவிப்பதில் ஜோலி கூடுதல் ஈடுபாடு செலுத்தினார். வாஷிங்டன் டிசியில் உலக அகதிகள் தினத்தில் இவர் தொடர்ந்து கலந்து கொண்டதோடு, 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இவர் அழைப்பு சொற்பொழிவாளராகவும் பங்கேற்றார். அமெரிக்க தலைநகரிலும் மனிதாபிமான நலன்களுக்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை ஜோலி துவங்கினார். 2003 முதல் குறைந்தது 20 முறைகளேனும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இவர் சந்தித்தார்.[45][45]

2005 ஆம் ஆண்டில் ஜோலி அகதி மற்றும் குடியேற்ற குழந்தைகளுக்கான தேசிய மையம் என்னும் அமைப்பின் ஸ்தாபகம் குறித்து அறிவித்தார். சட்டப்பூர்வமான பிரதிநிதித்துவம் ஏதுமின்றி புகலிடம் கோரும் குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவியை வழங்கும் அமைப்பாக இது இருக்கும் என்று கூறிய அவர் அதன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக 500,000 டாலர் தொகையை நன்கொடையளித்தார்.[52] மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் அகதிகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு உதவ பல்வேறு மசோதாக்களுக்கு அவர் வலியுறுத்தினார்.[45] தனது அரசியல் ஈடுபாடு தவிர, தனது பிரபல அந்தஸ்தையும் கூட வெகுஜன ஊடகங்களின் வழியே மனிதாபிமான விடயங்களுக்காக ஜோலி பயன்படுத்தத் துவங்கினார். எம்டிவி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அவர் படமாக்கினார். தி டைரி ஆஃப் ஏஞ்சலினா ஜோலி & டாக்டர் ஜெஃப்ரி ஸாக்ஸ் இன் ஆப்பிரிக்கா என்னும் இந்த படத்தில் மேற்கு கென்யாவில் கோடியில் அமைந்திருக்கும் சில குக்கிராமங்களுக்கு இவரும் பிரபல பொருளாதார நிபுணரான டாக்டர் ஜெஃப்ரி ஸாக்சும் பயணம் செய்வதாக சித்தரிக்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டில், ஜோலி/பிட் அறக்கட்டளையை நிறுவியிருப்பதாக ஜோலி அறிவித்தார். இது குளோபல் ஆக்‌ஷன் ஃபார் சில்ரன் மற்றும் டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் ஆகிய அமைப்புகளுக்கு தலா 1 மில்லியன் டாலர் தொகையை ஆரம்ப நன்கொடையாக அளித்தது.[53] 2006 ஆம் ஆண்டில் கிளின்டன் குளோபல் இனிஷியேட்டிவ் திட்டத்தில் நிறுவப்பட்ட எஜூகேஷன் பார்ட்னர்ஷிப் ஃபார் சில்ரன் ஆஃப் கான்ஃபிளிக்ட் அமைப்பிற்கும் ஜோலி இணைத் தலைவராக இருக்கிறார். போரில் பாதிப்புறும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு இந்த அமைப்பு நிதியுதவி செய்கிறது.[54]

ஜோலியின் மனிதாபிமான பணிகளுக்காக அவர் பரந்த அங்கீகாரம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில் ஐநா செய்தியாளர் கழகத்தால் புதிதாய் உருவாக்கப்பட்ட உலகின் சிறந்த குடிமகன் விருதை முதன்முதலில் பெற்றவர் ஜோலி ஆவார். அத்துடன் 2005 ஆம் ஆண்டில், யுஎன்ஏ-யுஎஸ்ஏ அமைப்பு இவருக்கு உலகளாவிய சிறந்த மனிதாபிமானி விருதினை (Global Humanitarian Award) வழங்கியது.[55] கம்போடியாவில் இவர் செய்த சூழல் பாதுகாப்பு பணிக்காக கம்போடிய அரசரான நோரோடோம் ஷிஹமோனி ஜோலிக்கு கம்போடிய குடியுரிமையை ஆகஸ்டு 12, 2005 அன்று வழங்கினார். பதாம்பாங்கின் வடமேற்கு மாகாணத்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைப்பதற்கு 5 மில்லியன் டாலர் தொகையை ஜோலி உறுதியளித்திருந்ததோடு அந்த பகுதியில் சொத்தும் கொண்டிருக்கிறார்.[56] 2007 ஆம் ஆண்டில், அயலுறவுகளுக்கான குழுவில் ஜோலி உறுப்பினரானார்.[57] அத்துடன் சர்வதேச மீட்புக் குழுவிடம் இருந்து ஃப்ரீடம் விருதையும் அவர் பெற்றார்.[58]

உறவுகள்

தொகு

மார்ச் 28, 1996 அன்று ஜோலி பிரித்தானிய நடிகரான ஜானி லீ மில்லரை மணந்து கொண்டார். இவர் ஹேக்கர்ஸ் (1995) திரைப்படத்தில் உடன் நடித்தவராவார்.[59] அடுத்து வந்த வருடத்தில் ஜோலியும் மில்லரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 3, 1999 அன்று விவாகரத்து செய்து கொண்டனர். ஆயினும் அவர்கள் தொடர்ந்து நன்றாய் பழகி வந்தனர்.[21]

புஷிங் டின் (1999) திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அமெரிக்க நடிகரான பில்லி பாப் தோன்டனை ஜோலி சந்தித்தார். இதனையடுத்து இருவரும் மே 5, 2000 அன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்கிடையேயான அன்பினையும் காதல் பரிமாற்றத்தையும் அடிக்கடி பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டதின் விளைவாக இவர்களின் உறவானது பொழுதுபோக்கு ஊடகங்களில் ஒரு பிரபலமான விடயமானது.[60] ஆயினும் திடீரென்று ஜோலியும் தோன்டனும் மே 27, 2003 அன்று விவாகரத்து செய்து கொண்டனர்.[61]

தனது இருபால் விருப்பம் குறித்து ஜோலி கூறியிருக்கிறார். பாக்ஸ்ஃபயர் (1996) திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜென்னி சிமிசு உடன் தனக்கு பாலியல் தொடர்பு இருந்ததாக அவர் வெகுகாலமாய் ஒப்புக் கொண்டிருந்தார்.[62][63]

2005 ஆரம்பத்தில், நடிகர்கள் பிராட் பிட் மற்றும் ஜெனிபர் அனிஸ்டன் இடையே விவாகரத்து நேர ஜோலி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோது மிகப் பிரபலமுற்ற ஹாலிவுட் சர்ச்சையில் ஜோலி சிக்கினார். மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் (2005) படப்பிடிப்பு சமயத்திலேயே பிட்டுக்கும் ஜோலிக்கும் இடையே தொடர்பு மலர்ந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் இதனை மறுத்த ஜோலி ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தாங்கள் காதலில் விழுந்தது உண்மையே என்று ஒப்புக் கொண்டார்.[64] இது குறித்து 2005 நேர்காணல் ஒன்றில் அவர் விளக்கினார்.[63]

ஜோலியும் பிட்டும் தங்களது உறவின் தன்மை குறித்து வெளிப்படையாக கருத்து கூறாமலே இருந்த நிலையில், 2005 முழுவதிலும் வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அனிஸ்டன் விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தின் பின் ஏப்ரலில் இவர்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாயின. அதில் பிட், ஜோலி மற்றும் அவரது மகன் மடோக்ஸ் மூவரும் கென்யா கடற்கரையில் இருந்தனர். கோடையில் ஜோலியும் பிட்டும் அதிகளவில் ஒன்றாக காணப்பட்டனர், பொழுதுபோக்கு ஊடகங்களில் அநேகமானவை அவர்களை ஒரு தம்பதியாகவே கருதின. ஜனவரி 11, 2006 அன்று, பிட்டின் குழந்தையை தான் சுமந்து கொண்டிருப்பதை பீபுள் நாளிதழிற்கு ஜோலி உறுதி செய்தார். இதன்மூலம் அவர்களுக்கிடையேயான உறவையும் முதன்முறையாக பகிரங்கமாக உறுதிப்படுத்தினார்.

குழந்தைகள்

தொகு

2002, மார்ச் 10 அன்று ஜோலி தனது முதல் குழந்தையாக, ஏழு மாத குழந்தையான மடோக்ஸ் சிவானைத் தத்தெடுத்தார்.[14] இந்த குழந்தை ஆகஸ்டு 5, 2001 அன்று கம்போடியாவில் பிறந்தது. இதன் இயற்பெயர் ரத் விபோல். இந்த குழந்தை ஆரம்பத்தில் பதாம்பாங்கில் உள்ள ஒரு உள்ளூர் அனாதை இல்லத்தில் வாழ்ந்திருந்தது. 2001 ஆம் ஆண்டில் லாரா கிராப்ட்:டோம்ப் ரெய்டர் படப்பிடிப்புக்காகவும் மற்றும் ஐநா அகதிகள் அமைப்பு களப் பணி பயணத்திற்காகவும் கம்போடியாவுக்கு இருமுறை இவர் சென்ற சமயத்தில் தத்தெடுக்க விண்ணப்பம் செய்ய ஜோலி தீர்மானித்தார். தனது இரண்டாவது கணவரான பில்லி பாப் தோன்டனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், மடோக்ஸின் மொத்த பாதுகாப்பு பராமரிப்பையும் ஜோலியே கவனித்தார். ஜோலியின் மற்ற பிள்ளைகள் போலவே, மடோக்ஸும் குறிப்பிடத்தக்க பிரபலத்தை எட்டியிருப்பதோடு பரபரப்பு சிற்றூடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கிறார்.[65]

2005 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று, எத்தியோப்பியாவில் இருந்து சகரா மர்லே என்னும் ஆறு மாத பெண் குழந்தையை ஜோலி தத்தெடுத்தார். சகரா ஜனவரி 8, 2005 அன்று பிறந்தார். ஆரம்பத்தில் குழந்தையின் தாய் வைத்திருந்த பெயர் யெம்ஸ்ரக் என்பதாகும்.[66] பின்னர் அனாதை இல்லம் ஒன்றில் டேனா ஆடம் என்கிற சட்டப்பூர்வமான பெயர் வழங்கப்பட்டது.[67] ஆடிஸ் அபாபாவில் உள்ள வைடு ஹரிஸோன்ஸ் ஃபார் சில்ரன் அனாதை இல்லத்தில் இருந்து ஜோலி இக்குழந்தையை தத்தெடுத்தார். அமெரிக்காவுக்கு திரும்பிய கொஞ்ச காலத்தில், உடலில் நீர்ச்சத்து இல்லாதது மற்றும் சத்துக் கோளாறு காரணமாக சகரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்தது. சகராவின் ரத்தவழி தாயார் மென்டெவபி தவித் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் அவர் தன் மகளைத் திரும்பிக் கோருகிறார் என்றும் 2007 ஆம் ஆண்டில் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் பின்னர் அந்த செய்திகளை மறுத்த அப்பெண், ஜோலியால் தத்தெடுக்கப்பட சகரா மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாக கூறினார்.[66]

ஜோலி தத்தெடுக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு மகளை பெறும் போது பிராட் பிட் உடனிருந்ததாக கூறப்பட்டது.[60] தானும் பிட்டும் இணைந்து தான் சகராவை தத்தெடுக்கும் முடிவை எடுத்ததாக பின்னர் ஜோலி சுட்டிக் காட்டினார்.[68] ஜனவரி 19, 2006 அன்று, கலிபோர்னியாவின் ஒரு நீதிபதி ஜோலியின் இரண்டு குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுத்துக் கொள்ள பிட் செய்திருந்த கோரிக்கைக்கு ஒப்புதலளித்தார். அவர்களது துணைப்பெயர்கள் முறைப்படி ஜோலி-பிட் என்று மாற்றப்பட்டன.[69]

ஷிலோ நோவெல் என்னும் ஒரு பெண் குழந்தையை மே 27, 2006 அன்று ஒரு சிசேரியன் அமர்வின் மூலம் ஜோலி பெற்றெடுத்தார். புதிதாய் பிறந்த தங்கள் பெண் குழந்தை ஒரு நமீபிய கடவுச்சீட்டு கொண்டிருக்கும் என்பதை பிட் உறுதி செய்தார்.[70] பரபரப்பு செய்தி சேகரிப்பாளர்கள் குழந்தையின் மதிப்புமிகுந்த புகைப்படங்களை எடுப்பதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக, தானே ஷிலோவின் முதல் படங்களை கெட்டி இமேஜசை விநியோகஸ்தராய் கொண்டு விற்பனை செய்ய ஜோலி முடிவு செய்தார். பீபுள் 4.1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வட அமெரிக்க உரிமைகளுக்காக செலுத்தியது. பிரித்தானிய இதழான ஹலோ! சர்வதேச உரிமைகளை சுமார் 3.5 மில்லியன் டாலர் தொகைக்கு பெற்றது.[71] அனைத்து வருவாயும் ஜோலி மற்றும் பிட் மூலம் பெயர் அறிவிக்கப்படாத தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளிக்கப்பட்டது. நியூயார்க்கின் மேடேம் துஷாட்ஸ் மியூசியம் இரண்டு வயதான ஷிலோவின் மெழுகுப் பொம்மையை திறந்தது. மேடேம் துஷாட்ஸ் மெழுகில் உருவாக்கிய முதல் குழந்தை இதுவே.[72]

மார்ச் 15, 2007 அன்று, ஜோலி பாக்ஸ் தியென் என்னும் மூன்று வயது பையனை வியட்நாமில் இருந்து தத்தெடுத்தார்.[73] நவம்பர் 29, 2003 அன்று பிறந்திருந்த இந்த குழந்தை பிறந்தவுடனேயே உள்ளூர் மருத்துவமனையில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்டதாகும். அங்கு அந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் பாம் குவாங் சாங் எனப் பெயரிடப்பட்டிருந்தது.[74] ஹோ சி மின் சிட்டியில் இருக்கும் டாம் பின் அனாதை இல்லத்தில் இருந்து ஜோலி இந்த சிறுவனை தத்தெடுத்தார்.[75] பாக்ஸ் என்பது தான் அந்த சிறுவனின் முதல் பெயர் ஆகும். அது தனது தாய் இறப்பதற்கு முன்பு யோசனையளித்த பெயர் என ஜோலி தெரிவித்தார்.[76]

பிராந்திய ஊடகங்களில் பல மாதங்கள் தொடர்ந்து ஊகங்கள் வந்த நிலையில், 2008 கேன்ஸ் திரைப்பட விழா சமயத்தில், தான் இரட்டை குழந்தைகளை எதிர்நோக்கியிருப்பதாக ஜோலி உறுதிப்படுத்தினார். ஜூலை 12, 2008 அன்று பிரான்சில் உள்ள நைஸ் என்ற இடத்திலிருக்கும் லென்வால் மருத்துவமனையில் சிசேரியன் பிரிவில் நாக்ஸ் லியோன் என்கிற ஒரு ஆண்குழந்தையையும், விவியென் மர்செலின் என்னும் ஒரு பெண் குழந்தையையும் ஜோலி.[77] நாக்ஸ் மற்றும் விவியனின் முதல் படங்களுக்கான உரிமை பீபுள் மற்றும் ஹலோ! பத்திரிகைகளுக்கு இணைந்து 14 மில்லியன் டாலர் தொகைக்கு விற்கப்பட்டது - இது இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிக செலவு வைத்த பிரபலங்களின் புகைப்படங்களாகும். இந்த பணம் ஜோலி-பிட் அறக்கட்டளைக்கு சென்றது.[78]

ஊடகங்களில்

தொகு
 
2005 ஆம் ஆண்டில் வாஷிங்டன் டி.சி.யில் ஒரு புகைப்பட அமர்வில் ஜோலி

தனது தந்தை ஜோன் வோய்ட்டின் பிரபலம் காரணமாக தனது சிறு வயது முதலே ஜோலி ஊடகங்களில் இடம்பிடித்து வந்தார். ஏழு வயதில் ஜோலியின் தந்தை இணைந்து எழுதி நடித்த, லுக்கிங் டு கெட் அவுட் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் ஜோலி நடித்தார். அத்துடன் அகாதமி விருதுகள் விழாவுக்கு தந்தையுடன் ஒரு இளம் வயதுப் பெண்ணாக ஜோலி 1986 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் சென்றிருக்கிறார். ஆயினும், தனது நடிப்பு வாழ்க்கையை துவக்கியபோது, தனது திரைப் பெயராக "வோய்ட்" பயன்படுத்தாதிருக்க ஜோலி தீர்மானித்தார். ஏனென்றால் ஒரு நடிகையாக தனது சொந்த அடையாளத்தை நிறுவ வேண்டும் என்று அவர் விரும்பினார்.[60] தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சர்ச்சையில் சிக்குவது குறித்து ஜோலி ஒருபோதும் கூச்சமுற்றவரில்லை என்பதோடு தனது பொது பிம்பத்தை "முரட்டுப் பெண்" என்பதாக ஒருங்கமைத்துக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் அகாதமி விருதுகள் விழாவில் ஏற்று பேசிய சமயத்தில், ’இந்த தருணத்தில் எனது சகோதரருடன் நான் மிகவும் காதலில் இருக்கிறேன்’ என்று ஜோலி அறிவித்ததும், அதோடு சேர்ந்து அந்த இரவில் அவருடன் இவர் நெருக்கமாய் நடந்து கொண்டதும், ஜோலிக்கு அவரது சகோதரர் ஜேம்ஸ் ஹேவன் உடன் முறையற்ற உறவு இருப்பதாக பிராந்திய சிற்றூடகங்களில் வதந்திகளைப் பற்ற வைத்தது. தமது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்ட பிறகு தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆதரித்துக் கொள்ள வேண்டியிருந்தது, இதனால் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவின் வழியாக இருவரும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்வது வழக்கம் என்று ஜோலியும் ஹேவனும் பின்னர் நேர்முகங்களில் விளக்கமளித்தனர்.[60]

ஜோலி ஒரு மக்கள் தொடர்பு பணியாளரையோ அல்லது ஒரு முகவரையோ பணியமர்த்திக் கொள்ளவில்லை.[79] நேர்காணல்களில் தன்னை மிகவும் வெளிப்படையாக பேசுபவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாலும், தனது காதல் வாழ்க்கையையும் பாலியல் விருப்பத்தையும் பகிரங்கமாக விவாதித்ததாலும்,[7] மற்றும் ஒருமுறை "அநேகமாக ஒரு பெண் ரசிகையுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்" என்று கூறியதாலும் வெகு விரைவில் அவர் பிராந்திய சிற்றூடகங்களின் விருப்பத்திற்குகந்த நபராக ஆகி விட்டார்.[63] அவரது மிகவும் பிரத்யேகமான உடல் அம்சமாக, ஜோலியின் உதடுகள் குறிப்பிடத்தகுந்த அளவு ஊடக கவனத்தை ஈர்த்திருக்கின்றன.[80] பில்லி பாப் தோன்டன் உடனான அவரது மிகவும் விளம்பரத்திற்குள்ளான திருமணம் மற்றும் அதனையடுத்து உலகளாவிய அளவில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கான ஒரு ஆலோசகராக மாறியது ஆகியவற்றின் மூலமும் ஜோலி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஐநா அகதிகளுக்கான அமைப்பின் நல்லெண்ண தூதர் பாத்திரத்தை ஏற்ற பிறகு, உலகளவில் மனிதாபிமான பிரச்சினைகளில் வெளிச்சம் பாய்ச்ச தனது பிரபலத்தை ஜோலி பயன்படுத்தத் துவங்கினார். 2004 ஆம் ஆண்டு முதல் வானூர்தி பாடங்களை கற்று வரும் ஜோலி தனியார் விமான ஓட்டி உரிமம் (கருவி தரமதிப்பீட்டுடன்) வைத்துள்ளதோடு சிர்ரஸ் SR22 விமானம் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.[81] ஜோலி புத்த மதத்தை சார்ந்திருப்பதாக ஊடகங்கள் ஊகித்தன. ஆனால் தனது மகன் மடோக்ஸ்க்கு தான் புத்தம் கற்பிப்பதன் காரணம் இதனை அவனது கலாச்சாரத்தின் ஒரு பாகமாக தான் கருதுவது தான் என்று ஜோலி தெரிவித்தார். தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது குறித்து ஜோலி திட்டவட்டமாக தெரிவித்ததில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று 2000 ஆவது ஆண்டில் கேட்கப்பட்டபோது, ஜோலி "நம்பிக்கை உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும். எனக்கு என்று ஒரு கடவுள் இருக்க அவசியமில்லை" என்று பதிலளித்தார்.[82]

 
பிப்ரவரி 2009 இல் 81 ஆவது அகாதமி விருதுகள் விழாவில் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிட்

2005 ஆம் ஆண்டு தொடங்கி, பிராட் பிட் உடனான ஜோலியின் உறவு உலகளவில் மிக அதிகமாக தகவல் விவரிப்புக்குள்ளாகும் பிரபலங்களின் கதைகளில் ஒன்றாக ஆனது. 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜோலி தனது கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவர்களை சுற்றிய ஊடகங்களின் பார்வை "பைத்தியக்காரத்தனம் என்கிற அளவுக்கு உச்சத்தை எட்டியது. இதனை அவர்களது கட்டுரையில் "பிராஞ்சலினா காய்ச்சல்" என்று ராய்டர்ஸ் ஊடகம் குறிப்பிட்டது.[83] ஊடக கவனத்தை தவிர்க்கும் முயற்சியாக, அப்போது "ஏசு கிறிஸ்துவுக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான குழந்தை" என்று விவரிக்கப்பட்டதான, ஷிலோவைப் பெற்றெடுக்க இந்த தம்பதியர் நமீபியா சென்று விட்டனர்.[84] இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஜோலியின் இரண்டாவது கர்ப்பமும் மீண்டும் ஒரு ஊடக அரற்றலைத் தூண்டியது. இரண்டு வாரங்கள் ஜோலி நைஸில் இருக்கும் ஒரு கடலோர மருத்துவமனையில் செலவிட்டார். குழந்தை பிறப்பு குறித்த செய்தி சேகரிக்க செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் நடைபயிலும் இடத்திற்கு வெளியே முகாமிட்டிருந்தனர்.[85]

இன்று உலகெங்கிலும் மிகவும் அறியப்பட்ட பிரபலங்களில் ஒருவராய் ஜோலி இருக்கிறார். கியூ ஸ்கோர் கூற்றுப்படி, 2000 அன்று ஜோலி ஆஸ்கர் வென்றதன் பின், அமெரிக்காவில் கருத்து கணிப்பு செய்தவர்களில் 31% பேர் தங்களுக்கு ஜோலியைத் தெரியும் என்று கூறினர். 2006 வாக்கில் இந்த எண்ணிக்கை அமெரிக்கர்களில் 81% ஆக அதிகரித்திருந்தது.[45] 2006 ஆம் ஆண்டில் ஏசிநீல்சன் 42 சர்வதேச சந்தைகளில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், உலகளாவிய அளவில் வர்த்தக பெயர்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு மிக உகந்த பிரபல தெரிவாக ஜோலி மற்றும் பிராட் இணை கண்டறியப்பட்டது.[86] 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டில், டைம் 100 என்னும் உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் ஜோலி இடம்பிடித்தார்.[87][88] 2006 ஆம் ஆண்டின் பீபுள் 100 மிகவும் அழகானவர்கள்" இதழில் உலகின் மிகவும் அழகிய பெண்ணாக ஜோலி விவரிக்கப்பட்டார்.[1] அத்துடன் 2007 ஆம் ஆண்டில் பிரித்தானிய சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியான 100 கிரேட்டஸ்ட் செக்ஸ் சிம்பல்ஸ் நிகழ்ச்சியில் எல்லா காலங்களிலுமான மிகப்பெரும் பாலியல் அடையாளமாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.[89] 2008 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெறும் நடிகை ஜோலி தான் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகம் தெரிவித்தது. ஒரு படத்திற்கு 15 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாக அது தெரிவித்தது.[90] 2009 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் வருடாந்திர பிரபலங்கள் 100 பேர் பட்டியலில் ஜோலி முதலிடம் பிடித்தார்.[91] முன்னதாக 2007 ஆம் ஆண்டில் இவர் 14 ஆவது இடத்தையும்,[92] 2008 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தார்.[93]

பச்சைக் குறிகள்

தொகு
 
நியூயார்க்கில் தனது பல்வேறு பச்சைக் குறிகளைக் காட்டியபடி நிற்கிறார் ஜோலி, ஜூன் 2007

ஜோலியின் எண்ணற்ற உடல் பச்சைகள் பெரும் ஊடக கவனத்திற்கான பொருளாக இருந்து வந்திருக்கின்றன. அத்துடன் நேர்முகம் காண்பவர்களும் இந்த விஷயத்தை நிறைய கேட்டிருக்கிறார்கள். தான் படத்தில் நிர்வாணமாய் நடிப்பதை எதிர்க்கவில்லை என்கிற நிலையில், தனது உடலில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான பச்சைகள் திரைப்பட உருவாக்குநர்களை நிர்வாண அல்லது காதல் காட்சிகளை திட்டமிடும்போது மிகவும் புதுமையாக சிந்திக்கும் திறனுடையவர்களாக ஆக்குவதாக ஜோலி கூறியிருக்கிறார்.[94] ஜோலி தயாரிப்புகள் பலவற்றிலும் அவரது பச்சைக் குறிகளை மறைக்க ஒப்பனைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜோலி இப்போது பதின்மூன்று பிரபல பச்சைகளை வைத்திருக்கிறார்.[95][96] தனது மேல் இடது புஜத்தில் ஆறு இணை புவியியல் ஆயங்களையும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். இது அவரது குழந்தைகளின் பிறந்த இடங்களைக் காட்டுவதாகும்.[97] காலப் போக்கில், தனது பச்சைகளில் பலவற்றையும் அவர் மறைத்தார் அல்லது அகற்றி விட்டார்.[22]

திரைப்பட வரலாறு

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1982 லுக்கிங்' டூ கெட் அவுட் டோஷ்
1993 "ஏஞ்சலா & விரில்" ஏஞ்சலா 2 நிமிட குறும் படம்
"அலைஸ் & விரில்" அலைஸ் 2 நிமிட குறும் படம்
சைபோர்க் 2 கஸெல்லா "கேஷ்" ரீஸ்
1995 வித்அவுட் எவிடென்ஸ் ஜோடீ ஸ்வேரிங்கென்
ஹேக்கர்ஸ் கேத் "ஆசிட் பர்ன்" லிபி
1996 மோஜவே மூன் எலினோர் "எலீ" ரிக்பி
லவ் இஸ் ஆல் தேர் இஸ் ஜினா மலாசிசி
பாக்ஸ்ஃபயர் மார்கரெட் "லெக்ஸ்" சடோவ்ஸ்கி
1997 ட்ரூ வூமன் (டிவி) ஜார்ஜியா வர்ஜினியா லாஷெ வுட்ஸ்
ஜார்ஜ் வாலஸ் (TV) கார்னெலியா வாலஸ் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது – தொடர்/குறுந்தொடர்/தொலைக்காட்சி படம்
பரிந்துரை பெற்றது – ஒரு குறுந்தொடர் அல்லது படத்தின் சிறந்த துணை நடிகைக்கான எம்மி விருது
பிளேயிங் காட் கிளேய்ர்
1998 ஜியா (தொலைக்காட்சி) ஜியா மேரி கரன்கி தொலைக்காட்சிக்கென தயாரிக்கப்பட்ட குறுந்தொடர் அல்லது அசைவுப் படத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது
ஒரு தொலைக்காட்சி படம் அல்லது குறுந்தொடரில் சிறந்த நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது
பரிந்துரை பெற்றது – ஒரு குறுந்தொடர் அல்லது படத்தின் சிறந்த நடிகைக்கான எம்மி விருது
ஹெல்'ஸ் கிச்சன் குளோரியா மெக்நீரி
பிளேயிங் பை ஹார்ட் ஜோன் தேசிய திறனாய்வு வாரிய விருது - திருப்புமுனை நடிப்பு
புஷிங் டின் மேரி பெல்
1999 தி போன் கலெக்டர் அமேலியா டோனாகி
கேர்ள், இன்டரப்டட் லிசா ரோவ்

சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
சிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் திரைப்பட விமர்சகர் கழக விருது
சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - அசைவுப் படம்
சிறந்த துணை நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது - அசைவுப் படம்
பரிந்துரைக்கப்பட்டது – சிறந்த துணை நடிகைக்கான சிகாகோ திரைப்பட விமர்சகர் கழக விருது

2000 கோன் இன் 60 செகண்ட்ஸ் சாரா "ஸ்வே" வேலாண்ட்
2001 லாரா கிராஃப்டு: டோம்ப் ரைடர் லாரா கிராஃப்டு பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த பெண் நடிப்பிற்கான எம்டிவி திரைப்பட விருது
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த நடிகைக்கான சாடுர்ன் விருது
ஒரிஜினல் சின் ஜூலியா ரசல்
2002 லைஃப் ஆர் சம்திங் லைக் இட் லேனி கெரிகன்
2003 லாரா கிராஃப்டு டோம்ப் ரைடர்: த கார்டில் ஆப் லைப் லாரா கிராஃப்ட்
பியான்ட் பார்டர்ஸ் சாரா ஜோர்டான்
2004 டேகிங் லைவ்ஸ் இலியானா ஸ்காட்
ஷார்க் டேல் லோலா குரல்
ஸ்கை கேப்டன் அன்ட் தி வேர்ல்டு ஆஃப் டுமாரோ ஃபிரான்செஸ்கா "ஃபிராங்கி" குக் பீபுள்’ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் அதிரடி நட்சத்திரம்
தி ஃபீவர் (தொலைக்காட்சி) புரட்சிப் போராளி
அலெக்சாண்டர் ஒலிம்பியஸ்
2005 மிஸ்டர். & மிசஸ். ஸ்மித் ஜேன் ஸ்மித் சிறந்த சண்டைக்கான எம்டிவி திரைப்பட விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த முத்தக்காட்சிக்கான எம்டிவி திரைப்பட விருது
பரிந்துரைக்கப்பட்டார் – பீபுள்’ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் திரைப்பட நட்சத்திரம்
பரிந்துரைக்கப்பட்டார் – பீபுள்’ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் அதிரடி நட்சத்திரம்
பரிந்துரைக்கப்பட்டார் – பீபுள்’ஸ் சாய்ஸ் விருது – சிறந்த திரைப் பொருத்தம் (பிராட் பிட் உடன்)
2006 தி குட் ஷெப்பர்டு மார்கரெட் ரஸெல்
2007 எ மைட்டி ஹார்ட் மேரியானே பியர்ல் பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான பிராட்காஸ்ட் திரைப்பட விமர்சகர் கழக விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான சிகாகோ திரைப்பட விமர்சகர் கழக விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - குணச்சித்திர அசைவுப் படம்
பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த நாயகிக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருது
பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த நடிகைக்கான லண்டன் திரைப்பட விமர்சகர் வட்ட விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான இணைய திரைப்பட விமர்சகர் சமூக விருது
பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது - அசைவுப் படம்
பியோவல்ஃப் கிரென்டெலின் தாய் பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த வில்லனுக்கான எம்டிவி திரைப்பட விருது
2008 குங் ஃபு பான்டா மாஸ்டர் டைக்ரெஸ் குரல்
வான்டட் பாக்ஸ் பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த பெண் நடிப்பிற்கான எம்டிவி திரைப்பட விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த முத்தக்காட்சிக்கான எம்டிவி திரைப்பட விருது
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த WTF தருணத்திற்கான எம்டிவி திரைப்பட விருது
சேஞ்ச்லிங் கிறிஸ்டின் கோலின்ஸ் சிறந்த நடிகைக்கான சாடர்ன் விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டார் - பிரதான பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான பிராட்கேஸ்ட் திரைப்பட விமர்சகர் கழக விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான சிகாகோ திரைப்பட விமர்சகர் கழக விருது
பரிந்துரைக்கப்பட்டார் - சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - குணச்சித்திர அசைவுப் படம்
பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த நடிகைக்கான இலண்டன் திரைப்பட விமர்சகர் வட்ட விருது
பரிந்துரைக்கப்பட்டார் – சிறந்த நடிகைக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது - அசைவுப் படம்
2010 சால்ட் எவ்லின் சால்ட் பரிந்துரைக்கப்பட்டார் — பீபுள்’ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான அதிரடி நட்சத்திரம்
பரிந்துரைக்கப்பட்டார் — பீபுள்’ஸ் சாய்ஸ் விருது: பிடித்தமான பெண் திரைப்பட நட்சத்திரம்
பரிந்துரைக்கப்பட்டார் — சிறந்த நடிகைக்கான சாடுர்ன் விருது
த டூரிஸ்ட் எலிஸ் கிளிப்டன்-வார்ட் பரிந்துரைக்கப்பட்டார்-சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - அசையும் பட இசை அல்லது நகைச்சுவை
2011 குங் ஃபூ பன்டா 2 மாஸ்டர் டைகிறிஸ் குரல்

விருதுகள்

தொகு
ஆண்டு விருது வகை திரைப்படம் முடிவு
1998 எம்மி விருது ஒரு மினிதொடர் அல்லது படத்தில் மிகச்சிறந்த துணை நடிகை ஜார்ஜ் வாலஸ் பரிந்துரை
கோல்டன் குளோப் விருது சிறந்த துணை நடிகை - தொடர்/குறுந்தொடர்/டிவி படம் வெற்றி
தேசிய திறனாய்வு வாரிய விருது திருப்புமுனை நடிப்பு – பெண் பிளேயிங் பை ஹார்ட் வெற்றி
எம்மி விருது ஒரு மினிதொடர் அல்லது படத்தில் மிகச்சிறந்த நாயகி நடிகை ஜியா பரிந்துரை
1999 கோல்டன் குளோப் விருது தொலைக்காட்சிக்கென தயாரிக்கப்பட்ட ஒரு குறுந்தொடர் அல்லது அசைவுப் படத்தில் சிறந்த நடிகை வெற்றி
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது ஒரு தொலைக்காட்சி படம் அல்லது குறுந்தொடரில் சிறந்த நடிகை வெற்றி
2000 கோல்டன் குளோப் விருது சிறந்த துணை நடிகை – அசைவுப் படம் கேர்ள், இன்டரப்டட் வெற்றி
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது துணைப் பாத்திரத்தில் மிகச் சிறந்த நடிகை வெற்றி
அகாதமி விருது துணைப் பாத்திரத்தில் சிறந்து நடித்த நடிகை வெற்றி
2004 பீபுள்'ஸ் சாய்ஸ் விருது பிடித்தமான பெண் அதிரடி நட்சத்திரம் ஸ்கை கேப்டன் அன்ட் தி வேர்ல்ட் ஆஃப் டுமாரோ வெற்றி
2008 கோல்டன் குளோப் விருது ஒரு அசைவுப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகை - குணச்சித்திரம் எ மைட்டி ஹார்ட் பரிந்துரை
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது நாயகியாக ஒரு நடிகையின் சிறந்த நடிப்பு பரிந்துரை
2009 கோல்டன் குளோப் விருது ஒரு அசைவுப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகை - குணச்சித்திரம் சேஞ்ச்லிங் பரிந்துரை
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது நாயகியாக ஒரு நடிகையின் சிறந்த நடிப்பு பரிந்துரை
BAFTA விருது சிறந்த நாயகி நடிகை பரிந்துரை
அகாதமி விருது நாயகியாக ஒரு நடிகையின் சிறந்த நடிப்பு பரிந்துரை
2011 கோல்டன் குளோப் விருது சிறந்த நடிகை - அசையும் பட இசை அல்லது நகைச்சுவை த டுவரிஸ்ட் பரிந்துரை
2012 கோல்டன் குளோப் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படம் (இயக்குனராக) இன் த லாண்ட் ஆப் பிளட் ஆண்ட் ஹணி பரிந்துரை
(Source: IMDb.com)

குறிப்புதவிகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 2006's Most Beautiful Star: Angelina Jolie பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம். பீபுள் . ஏப்ரல் 26, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  2. கிராபிகி, மிச்செல். Witherspoon is Hollywood's highest-paid actress. ராய்டர்ஸ் நவம்பர் 30, 2007 செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Angelina Jolie Movie Box Office Results. பாக்ஸ் ஆஃபிஸ் மோஜோ செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  4. Will the real Jon Voight please stand up?. நேர்முகப் பேட்டி மே 1, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  5. ஜோசப் கேம்ப். நியூயார்க் டைம்ஸ் ஜூன் 20, 1944. ப. 19.
  6. நெவின், சார்லஸ். The glamour of Swindon: Billie Piper, Melinda பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம். தி இன்டிபென்டென்ட் . ஜூலை 18, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  7. 7.0 7.1 ஸெசம்ஸ், கெவின். Wild at heart. Allure . நவம்பர் 2004. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  8. Telegraph interview with Jon Voight பரணிடப்பட்டது 2008-06-05 at the வந்தவழி இயந்திரம். டெலகிராஃப் அக்டோபர் 2, 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  9. 9.0 9.1 9.2 வான் மீடர், ஜோனாதன். Angelina Jolie: Body Beautiful. Vogue . ஏப்ரல் 2002. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  10. 10.0 10.1 10.2 10.3 வில்ஸ், டொமினிக். Angelina Jolie Biography பரணிடப்பட்டது 2009-02-28 at the வந்தவழி இயந்திரம். Tiscali.co.uk. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  11. ஹீத், கிரிஸ். Blood, Sugar, Sex, Magic பரணிடப்பட்டது 2009-04-23 at the வந்தவழி இயந்திரம். ரோலிங் ஸ்டோன் . ஜூலை 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  12. ஸ்ட்ரெஜ்செக், ஜிஞ்சர். Attracting the Eyes of the World பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம். Season Magazine . கோடை 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  13. Paula Zahn Now. CNN.com. ஜூன் 9, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  14. 14.0 14.1 கிராஸ்பெர்க், ஜோஷ். Angelina Jolie's Name Interrupted. E! Online. செப்டம்பர் 17, 2002. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  15. ஸ்க்ருவர்ஸ், ஃபிரெட் Angelina Jolie பரணிடப்பட்டது 2008-06-04 at the வந்தவழி இயந்திரம். பிரீமியர் இதழ் . அக்டோபர் 2004. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  16. மஸ்லின், ஜேனட். Hackers - Review பரணிடப்பட்டது 2015-11-04 at the வந்தவழி இயந்திரம். தி நியூயார்க் டைம்ஸ் செப்டம்பர் 15, 1995. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  17. பிராண்ட், ஆன்ட்ரூ. How Hollywood portrays hackers பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம். PC World . மே 4, 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  18. மேத்யூஸ், ஜாக். Movie Review - Foxfire. தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகஸ்டு 23, 1996. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  19. எபெர்ட், ரோஜர் Reviews: Playing God பரணிடப்பட்டது 2013-01-27 at the வந்தவழி இயந்திரம். சிகாகோ சன்-டைம்ஸ் . அக்டோபர் 17, 1997. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  20. வான்ஸ், வெனஸா. Gia (1998) பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம். Reel.com. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  21. 21.0 21.1 21.2 Angelina Jolie interviews featuring Jonny Lee Miller. JonnyLeeMiller.co.uk. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  22. 22.0 22.1 Inside the Actors Studio, Episode 169 பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம். பிரேவோ. ஜூன் 5, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  23. ஸ்டேக், பீட்டர். `Heart' Barely Misses a Beat. சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள் . ஜனவரி 22, 1999. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  24. ஹோவெ, டெஸான். 'Pushing Tin'. வாஷிங்டன் போஸ்ட் . ஏப்ரல் 23, 1999. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  25. லாசன், டெர்ரி The Bone Collector. டெட்ராயிட் ஃப்ரீ ப்ரெஸ் செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  26. Ebert, Roger. Reviews : Girl, Interrupted பரணிடப்பட்டது 2013-01-27 at the வந்தவழி இயந்திரம். Chicago Sun-Times. January 14, 2000. Accessed September 8, 2008.
  27. IMDb Movie of the Day பரணிடப்பட்டது 2004-12-20 at the வந்தவழி இயந்திரம். IMDb.com. மார்ச் 7, 2003. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  28. லெவி, இமானுவேல். Variety.com - Reviews - Girl, Interrupted. வெரைட்டி . டிசம்பர் 10, 1999. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  29. ஹன்டர், ஸ்டீபன். 'Gone in 60 Seconds': Lost in the Exhaust. வாஷிங்டன் போஸ்ட் ஜூன் 9, 2000. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  30. Gonzalez, Ed. Film Review - லாரா கிராப்ட்: டோம்ப் ரெய்டர். ஸ்லேன்ட் இதழ் . 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  31. மிட்செல், எல்விஸ். Original Sin - Review பரணிடப்பட்டது 2015-11-04 at the வந்தவழி இயந்திரம். தி நியூயார்க் டைம்ஸ் . ஆகஸ்டு 3, 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  32. Clinton, Paul. Jolie shines in up-and-down 'Life' பரணிடப்பட்டது 2012-05-24[Timestamp length] at Archive.today. CNN.com. ஏப்ரல் 25, 2002. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  33. டூரன், கென்னெத். "Beyond Borders" turns out to be an unreal film about a too-real situation. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அக்டோபர் 24, 2003. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  34. ஹனிகட், கிர்க். Taking Lives பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் . மார்ச் 15, 2004. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  35. Stone blames 'moral fundamentalism' for US box office flop. தி கார்டியன் . ஜனவரி 15, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  36. Covert, Colin. Mr. & Mrs. Smith. மினபோலிஸ் ஸ்டார் ட்ரிப்யூன் . செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  37. பிலிப்ஸ், மைக்கேல். Movie review: 'The Good Shepherd'. சிகாகோ ட்ரிப்யூன் . செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  38. Angelina Jolie screens her film at the Tribeca Film Festival பரணிடப்பட்டது 2011-06-23 at the வந்தவழி இயந்திரம். Eitb24.com 29 ஏப்ரல் 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  39. பென்னெட், ரே. Review: 'A Mighty Heart' பரணிடப்பட்டது 2018-04-02 at the வந்தவழி இயந்திரம். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் . மே 22, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  40. ஃபவுன்டஸ், ஸ்காட். Clint Eastwood: The Set Whisperer பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம். LA வீக்லி . டிசம்பர் 19, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  41. "Oscar nominations 2009." பிபிசி செய்திகள். பிப்ரவரி 23, 2009. மார்ச் 9, 2009 அன்று அணுகப்பட்டது.
  42. பிலிப்ஸ், மைக்கேல். ‘Changeling’ stars Angelina Jolie, John Malkovich, Jeffrey Donovan[தொடர்பிழந்த இணைப்பு]. சிகாகோ ட்ரிப்யூன் . அக்டோபர் 24, 2008. மார்ச் 26, 2009 அன்று அணுகப்பட்டது.
  43. 43.0 43.1 43.2 UNHCR. Angelina Jolie named UNHCR Goodwill Ambassador for refugees, UNHCR.org. ஆகஸ்டு 23, 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  44. UNHCR. Angelina Jolie responds to UNHCR emergency appeal. UNHCR.org. செப்டம்பர் 27, 2001. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  45. 45.0 45.1 45.2 45.3 45.4 ஸ்வைபெல், மேத்யூ. Bad Girl Interrupted பரணிடப்பட்டது 2009-09-12 at the வந்தவழி இயந்திரம். போர்ப்ஸ் . ஜூன் 12, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  46. UNHCR. Angelina Jolie UNHCR Goodwill Ambassador Fact Sheet. UNHCR.org. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  47. UNHCR. Interview with Angelina Jolie. UNHCR.org. அக்டோபர் 21, 2002 அன்று அணுகப்பட்டது. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  48. UNHCR. Goodwill Ambassador Angelina Jolie ends Ecuador mission. UNHCR.org. ஜூன் 10, 2002 செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  49. UNHCR. Jolie shares festive cheer with refugees in Lebanon, UNHCR.org. டிசம்பர் 29, 2004. நவம்பர் 22, 2008 அன்று அணுகப்பட்டது.
  50. UNHCR. Jolie-Pitt Foundation donates US$1 million to groups working in Darfur பரணிடப்பட்டது 2008-06-14 at the வந்தவழி இயந்திரம். Reuters AlertNet. மே 10, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  51. CNN. Jolie in Iraq: 2M refugees need help, CNN.com. பிப்ரவரி 7, 2008. டிசம்பர் 3, 2008 அன்று அணுகப்பட்டது.
  52. UNHCR. Angelina Jolie launches centre for unaccompanied children. UNHCR.org. மார்ச் 9, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  53. க்ரீன், மேரி. Brad & Angelina Start Charitable Group பரணிடப்பட்டது 2007-03-07 at the வந்தவழி இயந்திரம். பீபுள் . செப்டம்பர் 20, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  54. About the Founders பரணிடப்பட்டது 2008-11-23 at the வந்தவழி இயந்திரம். மோதலில் பாதித்த குழந்தைகளுக்கான கல்விக் கூட்டு. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  55. Jolie honoured for refugee role. பிபிசி செய்திகள் 12 அக்டோபர் 2008 செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  56. Jolie given Cambodian citizenship. பிபிசி செய்திகள் ஆகஸ் 12, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  57. க்ரீன், மேரி. Angelina Jolie Joins Council on Foreign Relations. பீபுள் . ஜூன் 18, 2007 செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  58. UNHCR. High Commissioner and Angelina Jolie to receive IRC Freedom Award . UNHCR.org. நவம்பர் 6, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  59. * பான்டன், அலெக்சான்ட்ரா Following, Ambivalently, in Mom or Dad's Footsteps. தி நியூயார்க் டைம்ஸ் . ஆகஸ்ட் 25, 1996. பிப்ரவரி 25, 2009 அன்று அணுகப்பட்டது.
  60. 60.0 60.1 60.2 60.3 WENN. News for Angelina Jolie. IMDb.com. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  61. வான் மீடர், ஜோனாதன். Learning To Fly. Vogue . மார்ச் 2004. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  62. 'Tis the Season to Be Jolie. கேர்ள்பிரண்ட்ஸ் இதழ் . டிசம்பர் 1997.
  63. 63.0 63.1 63.2 கெஸ்னர், ஜூலியன் & மெக்னா மிச்செல். Angelina, saint vs. sinner. நியூயார்க் டெய்லி நியூஸ் . பிப்ரவரி 2, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  64. ஹாரிஸ், மார்க். The Mommy Track. தி நியூயார்க் டைம்ஸ் . அக்டோபர் 15, 2008. அக்டோபர் 18, 2008 அன்று அணுகப்பட்டது.
  65. BANG மீடியா இன்டர்னேஷனல். Maddox cutest kid பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம். Life Style Extra . ஜூலை 20, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  66. 66.0 66.1 Pflanz, Mike. Angelina Jolie's adopted baby 'result of rape' பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம். டெலகிராஃப் நவம்பர் 20, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  67. பெல், ஜான். Angelina's Baby Zahara: Her touching family story. யாஹூ மூவிஸ். ஜூலை 14, 2005. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  68. Anderson Cooper 360 - Angelina Jolie: Her Mission and Motherhood. CNN.com. ஜூன் 20, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  69. Judge says Jolie's children can take Pitt's name. அசோசியேட்டட் பிரஸ். ஜனவரி 19, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  70. ரோஸ்ச்லாவ், ஃப்ராக். Little Shiloh will be Namibian: Angelina and Brad. Deutsche Presse-Agentur. ஜூன் 7, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  71. Jolie's twins to set new record பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம். தி டைம்ஸ் . ஜூன் 8, 2008. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  72. NYC Wax Museum Shows Off Jolie-Pitt Baby. யுஎஸ்ஏ டுடே ஜூலை 27, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  73. கென் லீ. Angelina Jolie's Son Legally Named Pax Thien Jolie-Pitt People . மே 31, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  74. AFP. Jolie sorry to throw media spotlight on adopted boy. நைன் நியூஸ். மார்ச் 17, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  75. Angelina Jolie adopts Vietnam boy. பிபிசி செய்திகள் மார்ச் 15, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  76. நோர்மேன், பீட். Angelina Jolie: Brad and I May Want Up to 14 Kids. பீபுள் . ஜூன் 15, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  77. AP. It's a boy and a girl for Jolie and Pitt. MSNBC.com. ஜூலை 13, 2008. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  78. Carlson, Erin. Person close to deal: Jolie-Pitt pix for $14 mil. அசோசியேட்டட் பிரஸ். ஆகஸ்ட் 1, 2008. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  79. பார்னெஸ், ப்ரூக்ஸ். Angelina Jolie’s Carefully Orchestrated Image . தி நியூயார்க் டைம்ஸ் . நவம்பர் 20, 2008. நவம்பர் 24, 2008 அன்று அணுகப்பட்டது.
  80. AAP. Everyone wants to look like Jolie. தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் . ஏப்ரல் 12, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  81. நோர்மேன், பீட். Angelina Jolie Taking a Year Off Work. பீபுள் . மே 22, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  82. தாம்ஸன், ஸ்டீபன். Is there a God? பரணிடப்பட்டது 2007-03-05 at the வந்தவழி இயந்திரம். The A.V. Club . செப்டம்பர் 6, 2000. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  83. The Brangelina fever. ராய்டர்ஸ் பிப்ரவரி 6, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  84. லியோனார்டு, டெர்ரி. Namibia Shielding Pitt and Jolie. அசோசியேட்டட் பிரஸ் மே 25, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  85. க்ரூபர், பென். Jolie twins doctor admits to pre-birth pressure பரணிடப்பட்டது 2012-06-04[Timestamp length] at Archive.today. ராய்டர்ஸ் ஜூலை 15, 2008. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  86. ACNielsen. Angelina Jolie, Brad Pitt top the charts, as favourite celebrity endorsers பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம். ஏஜென்சி ஃபேக்ட்ஸ் . செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  87. பிரவுன், மலோக். The Time 100 பரணிடப்பட்டது 2006-05-02 at the வந்தவழி இயந்திரம். டைம் . ஏப்ரல் 30, 2006. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  88. க்ளூனி, ஜார்ஜ். The Time 100 பரணிடப்பட்டது 2012-06-04[Timestamp length] at Archive.today. டைம் . செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  89. Jolie named 'sexiest person ever'. பிபிசி செய்திகள். பிப்ரவரி 24, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  90. Women In Entertainment. தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் . மார்ச் 26, 2009 அன்று அணுகப்பட்டது.
  91. The World's Most Powerful Celebrities. போர்ப்ஸ் . ஜூன் 3, 2009. ஜூன் 8, 2009 அன்று அணுகப்பட்டது.
  92. The Celebrity 100. போர்ப்ஸ் . ஜூன் 14, 2007. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  93. The Celebrity 100. போர்ப்ஸ் . ஜூன் 11, 2009 செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  94. கிர்க்லேண்ட், ப்ரூஸ். The new Angelina Jolie. Jam! Showbiz. அக்டோபர் 19, 2003. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  95. தாமஸ் கரென். Angelina Jolie, tattoo diarist. யுஎஸ்ஏ டுடே . ஜூலை 7, 2003. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  96. Jolie adds Thai tattoo. பிபிசி செய்திகள். ஏப்ரல் 24, 2003. செப்டம்பர் 8, 2008 அன்று அணுகப்பட்டது.
  97. Angelina shows off her new geo-tattoos. தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் . அக்டோபர் 7, 2008. அக்டோபர் 22, 2008 அன்று அணுகப்பட்டது.

கூடுதல் வாசிப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Angelina Jolie
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சலினா_ஜோலி&oldid=3924747" இலிருந்து மீள்விக்கப்பட்டது